Tuesday, July 12, 2022

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்

 *அன்பு நண்பர்களே!!*

*Tngpa* *அறிக்கை*

ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் பாராட்டும் எதிர்பார்ப்பும்

 

 *தமிழக அரசு, ஓய்வூதியர்களுக்கு, மருத்துவ காப்பீட்டு திட்டம் 2022-2026 அறிவித்துள்ளது.* *இதில்  தமிழ்நாடு 'அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின்  பல கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.* *காசில்லா திட்டமாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது  முந்தைய  நிலைமையில் இல்லாமல்முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும்.* *4 லட்சம் என்பது,  5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதுசிறப்பு நோய்களுக்கான தொகை,  7.5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது  அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு 75%சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.*   *ஓய்வூதியர்களில் வெளி மாநிலங்களில் வசிப்போருக்கு விருப்ப உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதை மாநிலத்துக்குள் இருப்போருக்கும் வழங்கலாம்.* *உள்ளாட்சி ஓய்வூதியர்கள்,   வாரிய ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தனியே ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் காலதாமதமின்றி செயல்பட உரியவர்க்கு உரிய அறிவுரை வழங்கிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களுக்கு இந்தத் திட்டம் உண்டா, இல்லையாஎன்பது முந்தைய அரசாணைகளில், ஐயத்துக்கு இடம் அளிக்கும் வகையில் இருந்தது.* *இந்த முறை அவர்களுடைய பதவிப் பெயர் குறிப்பிடப்பட்டு இணைக்கப்பட்டது, புதிய ஓய்வூதியதாரர்களுக்கு எதுவும் இல்லைஎன்பது நீங்கிஅவர்களும் அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்.* *அவர்கள் ஒட்டு மொத்தமாக ஜூலைக்குள் சந்தா செலுத்த வேண்டும் என்பது சிரமத்தைத் தரும்.* 

 *இருந்த போதிலும் 350 ரூபாயாக இருந்த சந்தா தொகை,  497 என்று உயர்த்தப்பட்டுள்ளது.* *பேட்டா கம்பெனி போல,  497 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.* *இதை மீண்டும் குறைக்கஅரசுஆணை வழங்க வேண்டும். முழுமையாக அரசே இந்தத் திட்டத்தை ஏற்க வேண்டும் என்னும் கோரிக்கை இந்த ஆணையிலும் அமலாகவில்லை.*  *அரசு மருத்துவமனைகள் சேர்க்கப்படடது, ஓயவூதியர் சங்கத்துக்கு கிடைத்த வெற்றி ஆகும் .* *தமிழுக்கு குரல் கொடுக்கும் தமிழக அரசுதமிழ் மருத்துவமாகிய சித்த மருத்துவத்தைசேர்த்திருக்க வேண்டும்.* *ஹோமியோபதி ,*   *ஆயுர்வேதிக் மருத்துவங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காவிடில், வேறு எந்த அரசு மரியாதை கொடுக்கும் எனும் கேள்வி எழுகிறது. பல் வைத்தியம்    இணைக்கப்படவில்லை.*   *நமது  போராட்டங்களில் வைத்த  கோரிக்கைகள் பல  நிறைவேற்றப்பட்டுள்ளன அதனை பாராட்டுகின்ற அதே நேரத்தில்  பிற கோரிக்கைகள்  பரிசீலிக்கப்படவில்லை*

*விடுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுகின்ற அதேநேரத்தில் சந்தா உயர்வை உடனே கைவிடுமாறு அரசை கேட்டுக்கொள்கிறோம்*

*நெ.இல.சீதரன்,மாநிலத் தலைவர்*

*பி கிருஷ்ணமூர்த்தி* *பொதுச்செயலாளர்*

தகவல்:

*. அப்பர் சுந்தரம் தஞ்சாவூர்*