பாதாள கரண்டி......பாதாள கொலுசு
கரண்டியின் எழுதப்படாத ஒரு சட்டம் என்னவென்றால்...
எங்கள் ஏரியாவில் பொது கிணறு என்று இருக்கும்.
எல்லா மக்களும் தனி வாளி கயிறு போட்டு தண்ணீர் இரைப்பார்கள்.
நிறையவாளிகள் காணாமல் (கழண்டு உள்ளே) போய் விடும்.
பாதாள கரண்டி வைத்திருக்கும் வீட்டைத் தேடி...
கேட்போம்.
அப்போது அவர்கள் கொடுக்க மாட்டார்கள்.
எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை.
யாரோ வாங்கினார்கள் கடைசியாக திரும்ப கொடுக்கவில்லை என்று பதில் வரும். என்றாவது ஒரு நாள்...
பாதாள கரண்டி வைத்திருப்பவர் வீட்டு வாளியும் கழண்டு உள்ளே விழும்.
அப்போது அந்த பாதாள கரண்டி அவர்களிடம் கிடைத்துவிடும்.
(எப்படியோ வந்து விடும் )
அதை எடுப்பதற்காக சுழற்றுவார்கள்.
அப்போது எல்லா வீட்டு கூட்டமும் அங்கே கூடி விடுவார்கள். சிறுவர்கள் தான் மிக முக்கியம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் வேடிக்கை.
ஆனால் பாதாள கரண்டியின் விதிப்படி...
அவர்கள் வாளி தவிர மற்ற வாளிகள் எல்லாமே கிடைத்து விடும்.
கடைசியாகத்தான் அவர்கள் வாளி கிடைக்கும்.