இந்துமதம் பற்றி நாஸ்டர்டாமஸ் கணிப்பு..!
நாஸ்டர்டாமஸ் சிறுவயதில் யூதர்களின் மொழியான ஹீப்ரு மொழியைத் தன் தாத்தாவிடமிருந்து கற்றுக் கொண்டார். லத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றதோடு கணிதத்திலும் தேர்ச்சி பெற்றார். இத்தோடு ஜோதிடத்தின் மர்மங்களையெல்லாம் ஆழ்ந்து கற்று அதில் நிபுணரானார்.
தாத்தா இறந்தவுடன் தன் சொந்த ஊருக்குத் திரும்பி பெற்றோருடன் வாழலானார். இயற்கையாகவே செழுமையான குடும்பமாக இருந்ததால் அவர் வாழ்நாளில் ஒரு நாளும் பணத்திற்காகத் துன்பப்பட்டது மில்லை; செலவழிக்கத் தயங்கியதுமில்லை!
பதினேழாவது வயதில் சட்டம் பயில அவிக்னான் என்ற பெரிய நகருக்கு அவர் சென்றார். அங்கு அவரது புத்தி சாதுரியத்தால் அனைவரையும் விஞ்சி நின்றார். ஆயினும் அவர் பைபிளுக்கு எதிரான கருத்துக்களை துணிச்சலாகச் சொல்லவே அவரது பெற்றோர் அவருக்குத் தண்டனை கிடைத்து விடும் என்று பயந்து அவரை ஊருக்குத் திரும்பி வரச் சொல்லி வற்புறுத்தினர். சொந்த ஊருக்கு வந்த நாஸ்டர்டாமஸ் பின்னர் மாண்ட்பெல்லியர் என்ற நகருக்குச் சென்று தனது 19ம் வயதில் மருத்துவம் பயில ஆரம்பித்தார். 1526ல் பெரிய மருத்துவரானார்.
சலான் என்ற நகரில் அவரது வீட்டில் மேல் மாடியில் ஒரு சிறிய அறை இருந்தது. அதைத் தனது பணிகளுக்கான அறையாகக் கொண்ட அவர் அதில் அடிக்கடி தீவிர தியானத்தை மேற்கொண்டு சமாதி நிலையை அடைந்தார். அவர் அகக்கண்ணில் எதிர்காலம் பற்றிய காட்சிகள் தோன்றலாயின அவர் எதிர்காலத்தில் பயணிக்கும் காலப் பயணியாக மாறித் தனக்குப் புலப்பட்டதை எல்லாம் குறித்துக் கொண்டார். அதன் விளைவுதான் அவரது ‘செஞ்சுரீஸ்' என்ற எதிர்காலக் கணிப்பு நூல்!.
அந்நூலில் சங்கேத பாஷையில் அமைந்த அவரது பாடல்களில் இருந்து சில எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.
மூன்றாம் காண்டத்தில் 57வது க்வாட்ரெய்னில் (நான்கு வரிச்செய்யுள்)
உள்ள நான்கு வரிகள் இவை:-
பிரிட்டிஷ் தேசம் ஏழு முறைகள் மாறுதலைச்சந்திக்கும்
290 ஆண்டுகளில் ரத்தக் கறை தோயும்
ஜெர்மனியில் விடுதலைக்கு ஆதரவிருக்காது துருக்கிய காலிப்கள் மாறியிருக்கும் ரஷியாவைக் காண்பர்
இங்கிலாந்து சந்தித்த ஏழு மாறுதல்கள்
1)1485ல் பெஸ்வொர்த்தில் நடந்த போர். இங்கிலாந்தை ட்யூடர் வம்சம் ஆள ஆரம்பித்தது.
2)1533ல் ரோமுடனான தொடர்பை எட்டாம் ஹென்றி முறித்துக் கொண்டார்.
3)1553ல் ஹென்றியின் மகள் மேரி ரோமன் கத்தோலிக்க மதத்தை மீண்டும் கொண்டு வந்தார். ப்ராடஸ்டண்டுகள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர்.
4)1558 மேரியின் ஒன்றுவிட்ட சகோதரி ப்ராடஸ்டண்டு மஹாராணி ஆனார்.
5)1649ல் பிரிட்டிஷ் அரசர் முதலாம் சார்லஸின் தலை பொதுமக்கள் முன்பாக வெட்டப்பட்டது. ஆலிவர் க்ராம்வெல் சர்வாதிகாரியானார்.
6)1688ல் முதலாம் சார்லஸின் மகன் இரண்டாம் ஜேம்ஸ் செட்ஜ்மூர் போரைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.
7)1775ல் பங்கர் ஹில் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பிரிட்டனுடனான தொடர்பை முறித்துக் கொண்டது. உலகில் வானளாவிய அதிகாரம் கொண்டிருந்த பிரிட்டிஷ் வீழ்ச்சியை நோக்கிச் சரிய ஆரம்பித்தது. அமெரிக்கா உலகின் உன்னத இடத்தை நோக்கி நடை போட ஆரம்பித்தது.
இதே போல ஒவ்வொரு பாடலும் ஒரு எதிர்காலக் காட்சியைக் காட்டுவது வியப்பூட்டுவதாக உள்ளது.
ஹிந்து மதம் பற்றிய நாஸ்டர்டாமஸின் எதிர்காலக் கணிப்பு இரண்டாம் காண்டத்தில் 13வது பாடலாக மலர்கிறது:-
ஆன்மா இல்லாத உடல் இனியும் புனிதமாகக் கருதப்படமாட்டாது இறந்த தினத்தன்று ஆன்மா அடுத்த பிறவியை நோக்கிப் பயணிக்கிறது இறைவனின் நினைப்பு ஆத்மாவை சந்தோஷத்திற்குள்ளாக்கும்
என்றுமுள்ள அக்ஷரத்தைக் கண்டவுடன்.
‘இதர மதங்கள் மறுபிறவியை ஏற்பதில்லை. ஹிந்து மதம் ஒன்றே உடல் ஆத்மாவிற்கு ஒரு சட்டை தான்; நலிந்து கிழிந்த சட்டையை உதறுவது போல ஆன்மா பழைய சரீரத்தை உதறி விட்டு அடுத்த சரீரத்தை நோக்கிச் செல்கிறது என்று கூறுகிறது. இறுதி வரியில் வரும் அக்ஷரம் ஓம் என்பதாகும். ஆக மறுபிறப்புக் கொள்கையை வலியுறுத்தும் ஹிந்து மதக் கொள்கை உலகில் ஓங்கி உயரும் என்பதை நாஸ்டர்டாமஸ் இந்தப் பாவில் தெளிவாக விளக்குகிறார்'.
இப்படி ஒரு விளக்கத்தைத் தருபவர் பெங்களூரைச் சேர்ந்த திரு ஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர் ஹிந்து டெஸ்டினி இன் நாஸ்டர்டாமஸ் என்ற நூலில் ஹிந்து மதம் பற்றி நாஸ்டர்டாமஸ் பல பாடல்களில் பூடகமாகக் கூறியுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
நாஸ்டர்டாமஸின் பாடல்களை விளக்கி உலகின் அனைத்து மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளது குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தியாகும்!
இவையெல்லாம் நம்ப முடியுமா?
மரணத்திற்குப் பின் அவர் வாழ்வில் நிகழப்போவதைப் பற்றி கூறிய ஆரூடம் பலித்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமான விஷயம்!
"என் கல்லறையைத் தோண்டி என் பிணத்தை எடுக்க முயல்பவர் உடனே இறந்து போவார்" என்று தன் கல்லறை மீது பொறிக்குமாறு அவர் இறக்கு முன்னர் வேண்டிக் கொண்டார்.
1566ம் ஆண்டு அவர் இறந்தபின்னர் அவரது கல்லறையில் இதே வாசகம் பொறிக்கப்பட்டது. வருடங்கள் உருண்டோடின. அவரது கல்லறை வாசகங்களைப் பார்த்துச் சிரித்த மூன்று பேர் கல்லறையைத் தோண்டி அவர் எலும்புக்கூட்டை எடுத்தனர்.
பிரெஞ்சு புரட்சியின் உச்சகட்ட நேரம் அது! மிகவும் புகழ் பெற்ற ஜோதிடரான அவரது மண்டை ஓட்டில் ஒயினை ஊற்றிக் குடித்தால் எதிர்காலம் கூறும் பிரபல ஜோதிடர் ஆகலாம் என்று நம்பி அந்த மூன்று பேரும் கல்லறையைத் தோண்டியிருந்தனர். அதில் ஒருவன் மண்டையோட்டை எடுத்து பையில் இருந்த ஒயினை எடுத்து அதில் ஊற்றிக் குடித்து விட்டு ஒரு அடி எடுத்து வைத்தான். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு அவனைத் துளைத்து அவன் உயிரைக் குடித்தது. புரட்சிக்காரன் ஒருவனின் குண்டுதான் அவனை இறக்க வைத்திருந்தது.
மற்ற இரண்டு பேரும் திரும்பி எலும்புக் கூட்டைப் பார்த்த போது எலும்புக்கூட்டின் மார்பில் ஒரு தாமிரத் தகடு கட்டப்பட்டிருப் பதைப் பார்த்தனர். அதில் மே 1793 என்று எழுதப்பட்டிருந்தது. சரியாக அதே 1793ம் ஆண்டு மே மாதம் தான் அந்த எலும்புக் கூட்டை அவர்கள் தோண்டி எடுத்திருந்தனர். இதனால் பயந்து போன அவர்கள் ஓடத் தொடங்கினர்.
தன் கல்லறையை எந்த வருடம் எந்த மாதம் தோண்டி தன் எலும்புக்கூட்டை எடுக்கப் போகிறார்கள் என்பதைக் கூட அவர் துல்லியமாகக் கணித்துச் "சொல்லியிருந்தது" உலகினர் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது!
இந்தியத் தலைவர்கள் பற்றிய அவரது ஆரூடங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
அவரது ஆறாம் காண்டத்தில் 74ம் பாடலில் அவர் இந்திரா காந்தி கொலை செய்யப்படுவதைக் கணித்துக் கூறியுள்ள வாசகங்கள் நம்மை அயர வைக்கும்!
"மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார். இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்"
எமர்ஜென்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும் 1984ல் அவர் சொந்த மெய்காப்பாளர்களில் ஒருவனால் சுடப்பட்டதும் உலகம் அறிந்த சம்பவம்!
இதே போல ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதை அவர் ஒன்பதாம் காண்டத்தில் 53ம் பாடலில் தெரிவித்துள்ளார்.
"நேரு குடும்ப மூன்றாம் தலைமுறையினரின் இளைஞர் துருப்புகளை அனுப்பி எரிக்கச் செய்வார். இந்த நிகழ்வுகளிலிருந்து தூர இருக்கும் மனிதனே உண்மையில் சந்தோஷமானவன். மூவர் அவரை இரத்தம் வெளிப்படச் செய்து கொல்வர்"
இதில் விசித்திரம் என்னவென்றால் இந்தப் பாடல் பிரபல கன்னட வாரப் பத்திரிக்கையான 'விக்ரம' என்ற பத்திரிக்கையின் 28-4-1991 தேதியிட்ட இதழில் பிரசுரிக்கப்பட்டிருந்ததுதான்! சரியாக மூன்று வாரங்கள் கழித்து அவர் கொல்லப்பட்டார்!
இலங்கைப் போரில் அவர் துருப்புகளை ஈடுபடச் செய்ததையும் பின்னர் மூன்று தற்கொலைப் படையினர் சதி செய்து தமிழகத்தில் அவர் வருகை புரிந்த போது அவரைக் கொன்றதும் வரலாற்று உண்மை!
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் பற்றிய அவரது கணிப்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்தது; திகைக்க வைத்தது!
"கடவுளின் நகரம் மீது இடி இடிக்கும்! இரண்டு சகோதரர்கள் குழப்பத்தில் நாசம் அடைவர்! கோட்டை காக்கப்படும் போது பெரிய தலைவர் இறந்துபோவார். மூன்றாம் உலகப் போர் மூளும்!'
இன்னும் ஒரு பாட்டில், "ஒன்பதாம் மாதம் பதினொன்றாம் நாளில் இரண்டு இரும்புப் பறவைகள் பெரிய சிலைகள் மீது மோதும்" என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால் இதை விட துல்லியமாக 10ம் காண்டம் 72ம் பாடலில் அவர் கூறுவது:- "1999ல் ஒன்பதாம் மாதம் வானிலிருந்து ஒரு பெரிய அரக்கன் தோன்றுவான்"!
இந்தச் சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டும் பாடலாகவே நாஸ்டர்தாமஸை வியந்து போற்றுவோர் கூறுவர்.ஆனால், இதைப் பற்றி பெரிய contraversy இன்னும் நிலவுகிறது.
2022ஆம் ஆண்டில் நடக்க இருப்பது பற்றி:
நாஸ்ட்ரடாமஸ்......இதற்கு முன் நடந்தது, இப்போது நடந்து கொண்டிருப்பது, இனிமேல் நடக்கப் போவது என முக்காலத்தையும் கணிக்கும் ஆற்றல் கொண்டவர். கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு என்னென்ன இந்த பூமியில் நிகழும் என்பதை கணித்து தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நிறைய அறிவியல் அறிஞர்களுக்கு ஒரு புரியாத புதிர் இவர் தான். இவர் கணித்த பல்வேறு கணிப்புகள் நடந்தேறியுள்ளன. அதுதான் வியப்பு. இதனாலேயே பலர் இவரது கூற்றுகளை நம்புகின்றனர்.
என்னதான் இவரது கணிப்புகள் ஏராளமாக கிடைத்தாலும், அனைத்துமே அக்காலத்து வழக்கத்தில் இல்லாத பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இவரது குறிப்புகள் செய்யுள் வடிவில் இருப்பதாலும், விடுகதையாகவும் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
இங்கு தற்போது 2022 ல் என்ன நடக்க போகிறது என்பதை பற்றி காணுங்கள்.
1.#விண்கற்கள்.
வரும் ஆண்டுகளில் பூமியை நோக்கி நிறைய விண்கற்கள் வரப் போகிறதாம். இந்த விண்கற்களால், பூமிக்கு மாபெரும் ஆபத்து ஏற்படலாம். விண்கற்கள் பொதுவாக உருவளவில் சிறியதாக இருந்தால், அதனை நமது வளிமண்டலமே பார்த்துக் கொள்ளும். ஆனால் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் பூமியை நெருங்கி, பூமியை நோக்கி வந்தால் மாபெரும் பாதிப்பு ஏற்படும். நாஸ்டர்டாமஸ் கணிப்புபடி, வரும் ஆண்டுகளில் அதிகளவான விண்கற்கள் பூமியை தாக்குமாம்.
2. #விலங்குகளிடம்_பேசுதல்
வரும் காலத்தில், தொழில்நுட்ப முன்னேற்றத்தால் , மனிதன் விலங்குகளிடம் பேசும் நிலை ஏற்படும் என்பதை திட்டவட்டமாக கூறுகிறார். மனிதன் விலங்குகளிடம் பேசும் நிலை ஏற்பட்ட உடன் இந்த உலகத்தில் அசைவம் குறையும் என்பதையும் கூறுகிறார்.
3. #சூரியப்புயல்
சூரியனில் ஏற்படும் ஆற்றல் மாற்றத்தின் காரணமாக சூரிய புயல் உண்டாகிறது. இதன் விளைவாக அதிலிருந்து கதிர்வீச்சுகள் , ஒட்டுமொத்த சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களை தாக்குகின்றன. இதில் பூமியும் விதிவிலக்கு அல்ல. பூமியில் சூரிய புயிலின் விளைவாக மின்சாதன பொருட்கள் துண்டிக்கப்படுகின்றன. இனி வரும் ஆண்டுகளில் சூரியப் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த உலகமே பாதிப்பு அடைய போகிறது.
மூன்றாம் உலக யுத்தம் பற்றி நாஸ்டர்டாஸ்
குவைத் நாட்டின்மீது சதாம் ஹூஸைன் ஆக்கிரமிப்பு நடத்தியபோதும் சரி, நியூயார்க் கட்டிடங்கள் மீது (இரட்டை கோபுரம்) பின்- லேடன் தாக்குதல் நடத்திய போதும் உலகமக்கள் பரபரப்பாகப் பேசியது ஒருவரைப் பற்றித்தான். அவர்தான் நாஸ்டர்டாஸ்.
அவர் சொன்ன நிகழ்ச்சி நடந்தாகிவிட்டது. அவர் சொன்னபடியே மீண்டும் ஒரு உலக மகாயுத்தம் மூண்டுவிடுமா ?
இதுதான் உலக மக்களின் திகிலுடன் கூடிய எதிர்பார்ப்பாக இருந்தது.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பே எவ்வளவு துல்லியமாக கணித் துள்ளார் அந்த மனிதர்.
நம்மூர் செய்தித்தாள்கள் நீல டர்பன் கட்டிய நபர் ' என்ற அடையாளத்துடன் நாஸ்டிரடாமஸ் சொன்ன பாடலை பிரசுரம் செய்தன. எங்கிருந்து வந்தது அவருக்கு இவ்வளவு ஆற்றல், என்னென்ன சொல்லியிருக்கிறார், அவர்,இனி எதிர்காலத்தில் என்னென்ன நிகழப்போகிறது
இந்தியா- பாக் இடையே போர் வருமா?
ஒரு உலக மகாயுத்தத்தை இந்த 2 நாடுகளும் தான் ஆரம்பித்து வைக்க போகின்றன என்ற அதிர்ச்சி தகவல்களை அவர் எப்போதோ சொல்லி விட்டு போயிருக்கிறார்.
2006ம் ஆண்டிலிருந்தே இந்தியா பல சோதனைகளை சந்திக்க தொடங்கும் பட்சத்தில் ஒரு உச்சகட்ட காட்சியாக 2011 அல்லது 2012ல் 3-வது உலக போர் ஏற்படும் என்கிறார்.
இந்த போர் இடைப்பட்ட எந்த ஆண்டில் வேண்டுமானாலும் நிகழலாம்!. மக்களின் அப்போதைய இறை பக்தியை பொறுத்திருக்கிறது என்பதையும் அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இந்தியா-பாகிஸ்தான் என எதிரும் புதிருமான இந்த போரில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதி அரேபியா, சிரியா, இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், லெபனான், ஈரான், ஆஸ்திரேலியா என உலகின் 21 நாடுகள் முக்கிய களமிறங்கும் என்கிறார் அவர்.
வானத்தில் சனி-ராகு கிரகங்களின் புதிய மாற்றத்தால் இந்தபோர் ஏற்படும். போர் சமயத்தில் அணு ஆயுத வீச்சுகளால் கடல் அலை 100 அடிக்கு எழுந்து ஓயும். சுமார் 100 கோடி பேர் மரணத்தை தழுவினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்றார் நாஸ்டர் டாமஸ்.
இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார்.
போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் எல்லை பகுதிகளும்பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார்.
இந்தியர்கள் 2006க்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பல வகையான மாற்றங்களை காண்பார்கள்.
மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் சிக்கி திணறுவார்கள். இறை பக்தி குறையும். அரசியலில் பற்பல மாற்றங்கள் நிகழும். உண்மை தோல்வியை தழுவும். பொய் வெற்றி பெறும். மக்கள் அலை பாய்ந்து திரிவார்கள்.
இத்தகைய சுமார் 20 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இளையதலைமுறை குழந்தைகளால் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். பெற்றோர்கள் மற்றும் வயதானவர்களால் அவர்கள் அறிவை புரிந்து கொள்ள முடியாமல் ஆச்சர்யப்பட்டு போவார்கள்.
இந்தியா மிக நவீனமாகி விடும். பணம் கொழிக்கும். அனைவரது வாழ்க்கையும் மிக நவீன நாகரீகமடையும். மேலை நாடுகளை போன்ற வாழ்க்கை தரத்திற்கு மாறிவிடுவார்கள். உலக அரங்கில் இந்தியா தலை சிறந்து விளங்கும்.
இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லியிருக்கும் நாஸ்டர் டாமஸ் மேற்கண்ட 20 ஆண்டு கால போராட்டத்தை ஒவ்வொருவரும் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார்.
ஒரு நாட்டில் பாவசெயல்கள் பெருகும் போது அந்த நாட்டின் அதற்குரிய சிக்கலையும், கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். எனவே, பாவசெயல் செய்யாது அன்புடன் இருங்கள். அவரவர் வீட்டில் தினமும் இறைவனைபிரார்த்தனை செய்து வழிபட்டு வாருங்கள்.
இத்தகைய வழிபாடு, பிரார்த்தனை செய்யும் போது மட்டும்தான் மனம் தெளிவடையும். நல்ல சிந்தனை பிறக்கும். மனதில் தைரியம் உண்டாகும். நீங்கள் இதை செய்யாவிட்டாலும் இறை சக்தி மிகப்பெரியது. அது உங்களை செய்ய வைக்கும் என்கிறார் அவர்.நாஸ்டர்டாமஸ் ஐரோப்பிய தீர்க்கதரிசியின் அருமையான பதிவு மூன்றாம் உலகப்போர் சனி ராகு இணையும் போது நடக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது . அந்த காலம் வரும் 2025 வாக்கில் மீனத்தில் இணைவு நடக்க இருக்கிறது .இதன் பின்னர் 2026 வாக்கில் உலகின் நம்பர் 1 நாடாக இந்தியாவும், 2-வது நாடாக சீனாவும் விளங்கும் என்று கணித்திருக்கிறார். போரை பொறுத்த வரை இந்தியாவில் பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் எல்லை பகுதிகளும்பாதிக்கப்படும் என்பதையும் அவர் சொல்லியிருக்கிறார்.