Friday, October 28, 2022

ஏடிஎம் கார்டு கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தகவல்

 ஏடிஎம் கார்டு

கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய தகவல்

*சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தாலோஉயிரிழப்பு ஏற்ப்பட்டாலோ சம்மந்தப்பட்டவர்கள் வைத்து இருக்கும் ஏடிஎம் கார்டின் மூலமாக இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்பது தான் அது..*

 *டெபிட்கார்டு கிளாசிக்பிளாட்டிணம் இந்த வகையை பொருத்து ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை நாம் காப்பீட்டு நிவாரணமாக பெறமுடியும்.*

 நண்பருடைய தங்கை சாலை விபத்தில் மரணமடைந்து தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

 நண்பர் தங்கை மரணமடைந்த சுமார் ஆறுமாதங்களுக்கு பின் தான் இப்படிபட்ட ஒரு காப்பீடு இருப்பதை நான் அறிந்தேன்.

 உடனடியாக வங்கி கிளைக்கு சென்று அதற்க்குறிய ஆவணங்களை கொடுத்து அந்த காப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்தோம்.

 சில மாதங்கள் சென்று அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அறிந்தேன்.

 உடனடியாக வங்கி கிளைக்கு சென்று வங்கி மேளாளரிடம் இதுபற்றி கேட்டபோது, விபத்தில் மரணமடைந்த மூன்று மாதங்களுக்கு ள் விண்ணப்பிக்க வேண்டும் இதுதான் விதிமுறை. ஆனால் நீங்கள் சுமார் ஆறு மாதங்கள் கழித்து விண்ணப்பித்ததால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று மேளாளர் கூறினார்.

 உடனே நான் என் தங்கை இறந்த ஒரு மாதத்திற்க்குள் நான் வங்கிக்கு வந்து நகைக்கடனோ அல்லது பிரதமமந்திரி காப்பீட்டு திட்டமோ தங்கை பெயரில் உள்ளதா என்று கேட்டேன். அதையெல்லாம் செக்செய்து பார்த்துவிட்டு இல்லையென்று சொன்ன நீங்கள் இந்த காப்பீடு திட்டத்தை பற்றி கூறவில்லையே. கூறியிருந்தால் அப்போதே விண்ணப்பித்து இருப்போமே

 இந்த ஏடிஎம் காப்பீடு பற்றி அறிந்த நீங்கள் உங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் விபத்தில் மரணமடைந்தார் என்று உங்களிடம் நான் சொல்லும் போது இந்த காப்பீடு பற்றி கூறியிருக்கலாம். ஆனால் கூறாமல் விட்டுவிட்டீர்கள்.

 இந்த காப்பீடு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்க்கு முதல் காரணம் விசயம் அறிந்த நீங்கள் எங்களிடம் சொல்லாதது தான் என்று அவரிடம் விவாதித்தேன்.

 அதற்க்கு அப்போது சரியான பதில் ஏதும் கூறாமல் சப்பைகட்டு கட்டினார்.

 இந்த சம்பவம் குறித்த விழிப்புணர்வு பதிவை நான் அப்போது முகநூலில் பதிந்தேன். அந்த பதிவு பரவலாக வலைதளங்களில் பகிரப்பட்டது.

 பின்னர் முகநூல் நண்பர்களின் ஆலோசனையின் படி ரிசர்வ் பேங்க்கின் ஓப்பட்ஸ்மேன் பற்றி அறிந்து அதில் புகாராக கொடுத்தேன்.

 அதில் ஏடிஎம் கார்டு இன்சூரன்ஸ் பற்றி எங்களுக்கு தெரியாது.

தங்கை இறந்த ஒருமாதத்தில் அந்த தகவலை வங்கி மேளாளரிடம் தெரிவித்தும் அவரும் இப்படியொரு விசயம் இருப்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்

 அதனால் தான் பின்னர் அது பற்றி தெரியவந்து அதன் பிறகு விண்ணப்பித்தோம்.

 ஆனால் மூன்று மாதத்திற்க்குள் விண்ணப்பிக்கவில்லை என்று விண்ணப்பம் இன்சூரன்ஸ் துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

 திருமணவயதில் உள்ள தங்கையின் மகளுக்கு இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும் அதனால் இந்த தொகை கிடைக்க உதவுங்கள் என்று புகார்மனுவாக பேங்கிங் ஓப்பட்ஸ்மேனுக்கு விண்ணப்பித்தோம்

 கிட்டத்தட்ட புகார் கொடுத்து பத்துமாதங்கள் இருக்கும் ஒருநாள் தொலைபேசி அழைப்பு வர எடுத்து பேசினேன்.

பெண் ஒருவர் பேசினார் நாங்கள் ரிசர்வ் பேங்க் ஓம்பட்ஸ்தானில் இருந்து பேசுகிறேன் என்று கூறி விபத்து நடந்தது முதல் அநேக விபரங்களை கேட்டார்கள் நானும் பதில் அளித்தேன். இறுதியில் அந்த அதிகாரியும் நீங்கள் மூன்று மாதத்திற்க்குள் விண்ணப்பித்து இருக்க வேண்டியது தானே என்று கேட்டார்.

 நான் எங்களுக்கு அதுபோன்ற காப்பீடு இருப்பது தெரியாது.

வங்கி மேலாளரை தங்கை இறந்த ஒரு மாதத்தில் சென்று சந்தித்து இறந்த விசயத்தை கூறி வேறு காப்பீடோ கடனோ இருக்கின்றதா என்று கேட்டபோது இல்லையென்று சொன்னவர் இந்த காப்பீடு பற்றி கூறியிருக்கலாமே

 அவர் கூறவில்லை

 இது பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளருக்கு செய்த சேவை குறைபாடு தானே மேடம் என்றேன்

 மேலும் எந்த வங்கியிலும் இந்த ஏடிஎம் கார்டு காப்பீடு பற்றிய விசயத்தை கூறுவதே இல்லை.

 இது பற்றிய செய்தியை லோன்மேளா விளம்பர பேனர்களுக்கு மத்தியில் இந்த காப்பீடுபற்றிய விசயத்தை காட்சிப்படுத்தி வைத்தால் அநேகருக்கு பயன் உள்ளதாக இருக்கும்

 எனவே இந்த காப்பீடு பற்றிய தகவல்களை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக காட்சிப்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்துங்கள் என்று கூறினேன்.

 அதற்கு அந்த பெண் அதிகாரி சரிங்க சார் அதுபோல் செய்யசொல்லலாம் என்றார். மேலும் அவரிடம் காப்பீடு தொகை கிடைக்குமா என்று கேட்டதற்க்கு நீங்கள் அந்த காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

 பின்னர் கடந்த நான்கு மாதத்திற்க்கு பிறகு அந்த வங்கி மேளாளர் என்னை தொடர்பு கொண்டார்.

மீண்டும் நீங்கள் கொடுத்த ஆவணங்களை திரும்ப கொடுங்கள் மறுபடியும் விண்ணப்பிக்கலாம் என்று கூற மீண்டும் ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பல்லடம் சென்று சமர்ப்பித்தேன்.

 ஆவணங்களை வாங்கிய மேளாளர் இந்த மேல்முறையீடு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படலாம், அல்லது ஏற்றுக் கொள்ளப்படாமலும் போகலாம் இது ஒரு முயற்சி மட்டுமே என்று கூறினார்.

 அப்போது அவரிடம் ஓப்பட்மேன் பற்றி கேட்க அவர் ஏனுங்க நீங்க நான் தகவல் சொல்லாததால் தான் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது சொல்லியிருக்கிங்கனு சொல்லவும்.

 அது தானே சார் உண்மைனு சொல்லிட்டு நான் கிளம்பினேன்.

 அப்போது ரிசர்வ் பேங்க் ஓப்பட்மேனில் இருந்து இவரையும் விசாரித்து இருப்பார்கள் போல அதனால்தான் இவராகவே நம்மை அழைத்து மேல் முறையீடு செய்ய அழைத்து இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

 அவ்வப்போது போன் செய்து சார் ஏதாச்சும் தகவல் வந்ததா என்று விசாரிப்பேன். ஒருபத்து நாட்களுக்கு முன்பு கூட நேரில் சென்று கேட்டேன்.

தகவல் ரிப்ளே வந்தால் கண்டிப்பாக நான் உங்களை கூப்பிட்டு பேசுகிறேன். இந்த தொகை கிடைச்சாலும் கிடைக்கும் இல்லைனாலும் இல்லைனு சொன்னார்

 சரிங்க சார் விடாம முயற்சி பண்ணுறோம் கிடைச்சா பெரிய உதவியா இருக்கும்னு சொல்லிட்டு வந்தேன்.

இன்னிக்கு மதியம் பாப்பா போன் பண்ணுச்சு மாமா என்னோட செல்லுக்கு ஒரு மெஜேஸ் வந்துருக்கு

ஒரு லட்சம் கிரிடிட் ஆனதாகனு சொன்னாள்.

 உடனே நான் இப்போதைக்கு பணம் கிரிடிட் ஆகுதுனா அந்த ஏடிஎம் கார்டு இன்சூரன்ஸ் ஆகதான் இருக்க வேண்டூம். நான் பேங்க் மேனேஜரிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு பேங்க் மேனேஜரை அழைத்தேன் .

 விபரம் சொல்லவும் அப்படியா நான் மெயில் செக்பண்ணிட்டு இன்சூரன்ஸ் ஆபீஸ்ல பேசிட்டு அழைக்கிறேன் என்று போனை கட்செய்தார்.

 சற்று நேரம் கழித்து பேங்க் மேனேஜர் அழைத்தார். ஆமாங்க அது அந்த ஏடிஎம் இன்சூரன்ஸ் பணம்தான் கிரிடிட் ஆகியிருக்குனு சொன்னார்.

 உடனே அடுத்த நொடி அவரிடம் சார் ரொம்ப ரொம்ப நன்றினு சொல்ல...

 பரவாயில்லைங்க நீங்க விண்ணப்பம் நிராரிக்கப்பட்டதோடு நிற்க்காமல்  மேல்முறையீடு விண்ணப்பம் அது இதுனு ஓப்பட்ஸ்மேன் அப்படினு அழைஞ்சி திரிஞ்சு விடாப்பிடியா இருந்திங்க அதனால இந்த தொகை கிடைச்சுருக்குனு சொன்னார்.

 ஆமா சார் இந்த பணம் இப்போ இருக்கும் சூழ்நிலையில் பயன்உள்ளதாக இருக்கும்சார் உங்களுக்கும்ரிசர்வ் பேங்க் ஒப்பட்ஸ்மேனுக்கும் நன்றி என்று கூறி போனை வைத்தேன்.

 அன்பான நண்பர்களே...

 ஒருவருடைய இழப்பு என்பது ஈடு செய்யமுடியாதது தான்.

இருந்தாலும் கஷ்ட்டப்படும் குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினர் விபத்தில் இறந்தால் அது பேரிழப்பு தான்.

 அந்த பேரிழப்பின் மத்தியில் இது போன்ற நிவாரணதொகை என்பது கொஞ்சம் அவர்களை தாங்கிப் பிடிக்கும் ஒரு ஊன்றுகோலாய் இருக்கும் என்பது உண்மைதான்.

 இதுபோன்ற விபத்து மரணங்கள் நமக்கு தெரிந்த வட்டாரங்களில் நடந்தால் இந்த ஏடிஎம் காப்பீடு பற்றி தெரிய செய்து மூன்று மாதங்களுக்குள் முறையான ஆவணங்களை சமர்பித்து அந்த காப்பீட்டு பலனை பெற்றுக்கொள்ளலாம்.

 இதுபோன்ற நிகழ்வுநடந்தால் சம்மந்தப்பட்டவர்கள் அந்த துக்கநிகழ்வில் இருந்து மீண்டுவர காலங்கள் ஆகும். ஆகையால் அவர்களின் நண்பர்களோ, உறவுகளோ, அவர்களின் நலன் விரும்பிகளோ இந்த விசயத்தை செய்ய உதவுங்கள்.

 1) முதலில் இறந்த நபரின் வங்கிகணக்கு புத்தகம் மற்றும் டெபிட் கார்டை வங்கிகிளைக்கு எடுத்து சென்று இறந்தவர் பற்றிய விபரங்களை கூற வேண்டும்.

 2) இறப்பு செய்தியை அவர்களிடம் தெரிவித்தற்க்கான Acknowledgement

வாங்கிக் கொள்ளுங்கள்

 3) இறந்த நபர் இறந்த தேதிக்கு முன்பான தொன்னூறு நாட்களுக்குள் ஏதாவது ஒரு பரிவர்த்தணையை டெபிட்கார்டு மூலம் செய்துள்ளாரா என்பதை வங்கிமூலமாக உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

 4) வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்மற்றும் விபத்து மரணத்திற்க்குண்டான பிரேத பரிசோதனை அறிக்கை, FIR காப்பி நகல், மற்றும் முதன்மை வாரிசுதாரரின் வங்கிக்கணக்கு புத்தகநகல், மற்றும் பான்கார்டு நகல் 

இவைகளை துரிதமாக வாங்கவும்காலதாமதம் நிச்சயமாக ஆகும்.

அப்படிப்பட்ட பட்சத்தில் வங்கி மேளாளரை சந்தித்து எந்த ஆவணம் வர தாமதம் ஆகிறதோ அதை தெரியப்படுத்திக் கொள்ளவும்.

 5) சம்மந்தப்பட்ட காப்பீட்டு கம்பெணியின் இழப்பீடு பெறுவதற்கான விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மேலேசொன்ன ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து வங்கி மேளாளரிடம் கொடுத்து அதற்க்கும் ஒரு Acknowledgement வாங்கி வைத்துக்கொள்ளவும்.

 6) முடிந்தவரை அவர்கள் கூறும் மூன்று மாதத்திற்க்குள் விண்ணப்பிக்கவும்.

 அவரவர் கார்டின் தன்மையை பொறுத்து  ஒரு லட்சரூபாய் முதல் பத்து லட்சரூபாய் வரை இழப்பீடாக பெறலாம்.

 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் ரிசர்வ் பேங்க் ஓப்பட்ஸ்மேனுக்கு புகாரை ஆன்லைன் வழியாக தெரிவிக்கலாம். காலதாமதம் ஆனாலும் நமக்குறிய நிவாரணத்தை பெற அவர்கள் தூண்டு கோலாய் இருக்கிறார்கள் என்பது நான் கண்ட நிதர்சனம்.

 நன்றி ரிசர்வ் பேங்க்