ரயில் நிலைய மஞ்சள் நிற பெயர் பலகை
ரயில்வே கிராசிங் அல்லது ரயில் நிலையம் என எல்லா இடங்களிலும் மஞ்சள் நிறத்தைப் பார்த்திருக்க வேண்டும். குறிப்பாக ரயில் நிலையத்தின் பலகைகளில், நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருக்கும். ??
இதில் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களின் கலவையாக அந்தந்த ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்
மஞ்சள் தவிர வேறு எந்த நிறத்தையும் பயன்படுத்துவதில்லை. அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் மஞ்சள் நிற பெயர் பலகை வைக்கப் பட்டிருக்கும்.
ரயில் நிலையத்தின் பெயர் மஞ்சள் பலகையில் (Yellow Board) எழுதப்பட்டதற்கு மிகப் முக்கிய காரணம், மஞ்சள் நிறம் மிகவும் பிரகாசமாக இருக்கிறது.
இது தூரத்திலிருந்து ரயில் ஓட்டுநருக்கு நன்றாக தெரியும் நிறமாகும்.
இது தவிர, மஞ்சள் நிறமும் கவனம் என்பதை குறிக்கிறது
அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் பெயர் பலகைகள் மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டு இருப்பதற்கு காரணம் தூரத்தில் இருந்து பார்த்தால் கூட கண்களுக்கு தெரியும் என்பது தான்
பொதுவாக அனைத்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் ரயில்கள் நின்று செல்லாது என்பது நம் அனைவருக்குமே தெரியும். குறிப்பிட்ட சில ரயில்வே ஸ்டேஷன்களில் மட்டுமே ரயில்கள் நின்று செல்லும்.
நிறுத்தம் இல்லாத ரயில்வே ஸ்டேஷன்களில் நுழைந்ததில் இருந்து வெளியேறும் வரை லோகோ பைலட்கள் ஹாரன் அடித்து செல்வதற்கு இந்த மஞ்சள் நிற பின்னணியில் கருப்பு நிறத்தில் எழுதப்பட்ட பலகைகள் உதவுகின்றன.
இதன் மூலமாக சம்பந்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருக்கும் பயணிகள் உள்பட அனைவரும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.
மஞ்சள் நிறம் தொலைவிலேயே தெரிந்து விடும் என்பதால், ரயில் நிலையத்தை கடக்கும்போது லோகோ பைலட்கள் எச்சரிக்கையாக செயல்பட முடிகிறது. லோகோ பைலட்களுக்கு மட்டுமல்லாது, பயணிகளுக்கும் இந்த வண்ண கலவை பெரிதும் உதவி செய்கிறது.
.மேலும் இதில் கருப்பு நிறத்தில் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழ் (அந்தத் மாநிலத்தின்) மொழி என்று மொத்தம் 3 மொழிகளில் ஊரின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.
இந்த பெயர் பலகையில் கடல் மட்டத்தில் இருந்து அந்த ஸ்டேஷன் எவ்வளவு உயரத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடப் பட்டிருக்கும். MSL (Mean Sea Level) என்று எழுதப்பட்டிருக்கும்...