RAM என்றால் என்ன?
புதிதாக கணினி வாங்கப்போகிறவர்கள் நிச்சயமாக கவனிக்க வேண்டிய விசயங்களில் ஒன்று RAM அளவு. RAM
ஏன் இவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது என்பதனை இங்கே பார்க்கலாம். நீங்கள் புதிதாக கணினி வாங்கும்போது RAM தேர்வு செய்திட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை இந்தப்பதிவை வாசிப்பதன் மூலமாக தெரிந்துகொள்ளுங்கள்.
கணினி அல்லது ஸ்மார்ட் போன் என எதனை வாங்க போனாலும் முதன்மையான கேள்வியாக இருப்பது, எவ்வளவு RAM?
என்பதுதான். நீங்கள் நினைப்பது போலவே அதிக RAM கொண்ட கணினி அல்லது மொபைல் அதிக வேகமாக இயங்கும். கணினியின் முக்கிய பாகங்களில் முக்கியமானது RAM.
இந்த பதிவில்,
·
> RAM என்றால் என்ன?
·
> RAM இன் பணி என்ன?
·
> RAM இன் வகைகள் என்ன? என்பதனை பார்க்கலாம்.
RAM என்றால் என்ன?
RAM என்பதன் ஆங்கில விளக்கம் Random Access Memory. RAM என்பது தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய ஒரு அமைப்பு. பொதுவாக
Motherboard இல் இது அமைக்கப்பட்டு இருக்கும். RAM
என்பது தரவுகளை சேமித்து வைக்க கூடிய அமைப்பு ஆனால் நிரந்தரமாக அல்ல, கணினி அல்லது மொபைல் ஆப் செய்யப்பட்டவுடன் இதில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மெமரி அழிந்துவிடும். ஆகையால் தான் RAM ஐ
Volatile Storage என ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
RAM எதற்காக தேவை?
ஒரு கணினி அல்லது மொபைல் இயங்கும் போது அதற்க்கு தேவைப்படுகின்ற தரவுகளை RAM மெமரியில் தற்காலிகமாக சேமித்து வைத்துக்கொள்ளும். இந்த மெமரியை CPU ஆல் எளிமையாக பயன்படுத்திக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு நீங்கள்
Photoshop அப்பிளிகேஷன் பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். கணினி உடனடியாக தேவையான பைல்கள் அனைத்தையும் RAM க்கு கொண்டுவரும். ஒருவேளை உங்களது RAM அளவு குறைவானதாக இருப்பின்
Photoshop அப்ளிகேஷன் சரியாக இயங்காது. இதனை தான் நாம் Slow அல்லது hang ஆகிறது என்போம்.
மறுபக்கம் ROM என்பது Non
Volatile Storage என அழைக்கப்படுகிறது. இதில் சேமித்து வைக்கப்படும் தரவுகள் கணினி அல்லது மொபைலை ஆப் செய்தாலும் அழிவதில்லை. உதாரணமாக நீங்கள் சேமித்து வைத்திருக்கும் வீடியோ அல்லது புகைப்படம் அல்லது பாடல் போன்றவை இந்த மெமரியில் தான் இருக்கும்.
Types of RAM?
RAM இல் இரண்டு வகைகள் உண்டு.
·
> Dynamic RAM (DRAM)
·
> Static RAM (SRAM)
Static RAM (SRAM) – இதுவும்
Volatile Storage தான். பொதுவாக இவை Cache அல்லது registers போன்றவற்றில் பயன்படும். இவை
Dynamic RAM (DRAM) ஐ விட அதிவேகமாக செயல்படக்கூடியவை. மேலும் இவை
Dynamic RAM (DRAM) போன்று
refresh ஆவது இல்லை.
Dynamic RAM (DRAM) – குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை தன்னிடம் இருக்கின்ற தகவலை
refresh செய்துகொண்டே இருக்கும். அதாவது தன்னிடம் இருக்கின்ற தகவலை அழித்துவிட்டு ஒரிஜினல் தகவல் எங்கு இருக்கிறதோ அங்கு இருந்து தகவலை புதுமைபடுத்திக்கொள்ளும்.
Static RAM (SRAM) விலை அதிகமானது
Dynamic RAM (DRAM) விலை குறைவானது
குறைவான விலையினால் பொதுவாக கணினியில் Dynamic RAM (DRAM) தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.