ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு
ஹைவே நம்பருக்கு பின்னால் இவ்வளவு மேட்டரு இருக்கா!! சும்மா கண்ணை மூடி சூஸ்
பண்ற விஷயம் கிடையாது!
எந்தவொரு நாட்டிற்கும் நெடுஞ்சாலைகள் அவசியமான ஒன்று.
ஏனெனில், நாட்டின் பாதி பொருளாதாரத்தை நேரடியாக நிர்ணயிப்பவை நெடுஞ்சாலைகள் ஆகும்.
வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலமாக கொண்டுவரப்படும் பொருட்களை கடலில் இருந்து தொலைவாக
உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்ல நெடுஞ்சாலைகள் ஆணி வேராக விளங்குகின்றன.
இதன் காரணமாகவே, நெடுஞ்சாலைகளையும், விரைவுச்சாலைகளையும் நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் உள்ளது. இந்தியாவில் நெடுஞ்சாலைகள் சுருக்கமாக 'என்.எச்' என்கிற பெயரில், இறுதியில் ஒரு எண் உடன் அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, என்.எச்-47, என்.எச்-68. ஆனால், இந்த நெடுஞ்சாலை எண்கள் ஒரு வரிசைப்படி இருக்காது.
அதாவது, என்.எச்-1 ஒரு இடத்தில் இருக்கிறது என்றால்,
என்.எச்-2 சம்பந்தமே இல்லாமல் வேறொரு இடத்தில் இருக்கும். நெடுஞ்சாலை எண்கள் ஏன் இவ்வாறு
நிர்ணயிக்கப்படுகின்றன என்று எப்போவாவது யோசித்துள்ளீர்களா? எதுவும் தெரியாதவர்களுக்கு
வேண்டுமாயின், இந்த எண்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதவை போன்று தெரியலாம். ஆனால்,
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) இந்த எண்களை ஒரு பேட்டர்னில் நிர்ணயிக்கிறது.
ஒவ்வொரு நெடுஞ்சாலை எண்களும், அந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள
புவியியல் இடத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை எண்களை நிர்ணயிப்பதில்,
கடைசியாக 2010ஆம் ஆண்டில் புதிய யுக்தியை மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை
அமைச்சகம் கொண்டுவந்தது. இதன்படி, நாட்டின் முக்கியமான நெடுஞ்சாலைகளுக்கு ஒற்றை இலக்க
எண்கள் சூட்டப்பட்டன.