அப்பா
அப்பாவை பெயர் சொல்லிக்கூப்பிடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளை தன் அம்மாவாக பார்க்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு மேக்கப் போட்டு ரசிக்கும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கு தன் கையால் உணவூட்டி மகிழும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவின் கழுத்தில் தொங்கி விளையாடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளின் கால்களில் கொஞ்சி விளையாடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பா சொல்லும் அத்தனை உண்மைகளையும் ஆர்வமாய் கேட்கின்ற மகள்கள் ஒருவித அழகு.
மகள் சொல்லும் அத்தனை பொய்களையும் சிரிக்காமல் ரசிக்கின்ற அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவைத் தேடவைத்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொள்ளும் மகள்கள் ஒருவித அழகு.
மகளைக் கண்டபிறகும் மரத்தையே கண்டுபிடிக்க முடியாதவர்களாய் தேடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவை ஹீரோவாக பார்க்கும் மகள்கள் ஒருவித அழகு.
மகளை இளவரசியாக நடத்தும் அப்பாக்கள் அதைவிட அழகு.
கையை விடும்படி அப்பாவை கெஞ்சும் மகள்கள் ஒருவித அழகு.
யாருக்காகவும் மகளை விட்டுக்கொடுக்காத அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்குத் தன் சோகங்களை சொல்லி ஆறுதல்தேடும் மகள்கள் ஒருவித அழகு.
மகளின் முகத்தைப் பார்த்துத் தன் சோகங்களை மறந்துவிடும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு மகளாக அடுத்த ஜென்மத்திலும் பிறக்க விரும்பும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கே பிள்ளையாக அடுத்த ஜென்மத்தில் பிறக்க விரும்பும் அப்பாக்கள் அதைவிட அழகு.
அப்பாவுக்கு முன் ஆண்போல வேஷமிட்டு வீரம் பேசும் மகள்கள் ஒருவித அழகு.
மகளுக்கு முன் எந்த வேஷமும் இல்லாமல் பெண்மையை வெளிப்படுத்தும் அப்பாக்கள் அதைவிட அழகு.
வயதான அப்பாவை தன் பிள்ளைபோல நினைக்கும் மகள்கள் ஒருவித அழகு.
வயதான பின்னரும் தன் மகளை குழந்தையாகவே நினைக்கும் அப்பாக்கள் அதைவிட அழகு.
கடவுள் தந்த வரம் என் அப்பா என நினைக்கும் மகள்கள் ஒருவித அழகு.
அந்தக் கடவுளே என் மகள்தான் என நினைக்கும் அப்பாக்கள் அதைவிட அழகு.