Tuesday, May 7, 2024

திருநாவுக்கரசர் சென்ற தூரம்

 

திருநாவுக்கரசர் சென்ற தூரம்

பெரிய புராணத்தின்படி திருநாவுக்கரசர் சென்ற பாதையை ஆராய்ந்து, இன்று அந்த ஊர்களுக்கு என்ன பெயர் என்று அறிந்து, ஒவ்வொரு ஊருக்கும் அடுத்த ஊருக்கும் உள்ள தூரத்தை கணக்கிட்டு பதியபட்டுள்ளது சுமாராக 60 அல்லது 65 வயதில் தொடங்கி 80 வயது வரை அவர் நடந்து கடந்த தூரம் 14422 கிலோமீட்டர் ! ஒரே நாளில் கடக்கவில்லை. சில நாட்கள் ஒரு இடத்தில் தங்க வேண்டிய நிலைமை. பல நாட்கள் உணவின்றி, நீரின்றி நடை. காலுக்கு செருப்பு கிடையாது. ஓய்வு கிடையாது. மிக சில நாட்கள் விருந்து. பல நாட்கள் பட்டினி, தாகம், வெயில், மழை, குளிர். எல்லா இடங்களுக்கும் நடைதான். இறைவன் ஆசியால் பல்லக்கு பெற்ற ஞானசம்பந்தர் அளவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவில்லை. உழைத்தார். உனக்குக் என்னென்னவோ செய்தேனே, இப்படி என்னை கைவிட்டுட்டியே பகவானே என்று புலம்புகிறோம் . இவரது தவம் என்னவென்று பாருங்கள். அதில் ஒரு 10% வேண்டாம் ஐயா. அவரது கால் தூசு அளவுக்காவது வரவேண்டாமா? அட ஒரு முயற்சியாவது செய்து தோற்கவேண்டாமா? நமது தவம் என்ன? நமது தவம் எங்கே? தவம் செய்கிறோமா?

இந்த ஊர் முதல் அந்த ஊர் வரை தூரம்

திருவாமூர்பாடலிபுத்திரம் 35

பாடலிபுத்திரம்திருவதிகை 25

திருவதிகைதிருப்பாதிரிப்புலியூர் 22

திருப்பாதிரிப்புலியூர்திருவதிகை 22

திருவதிகைதிருமாணிக்குழி 15

திருமாணிக்குழிதிருதினைநகர் 23

திருதினைநகர் (தீர்த்தனகிரி) – திருமாணிக்குழி 23

திருமாணிக்குழிதிருவீரட்டானம் 16

திருவீரட்டானம்திருவெண்ணைநல்லூர் 125

திருவெண்ணைநல்லூர்திருவாமாத்தூர் 22

திருவாமாத்தூர்திருக்கோவலூர் 37

திருக்கோவலூர்திருபெண்ணாடகம் 86

திருபெண்ணாடகம்திருத்தூங்கானை 0.5

திருநாரையூர்சீர்காழி 67

திருவரத்துறைதிருமுதுகுன்றம்(விருத்தாச்சலம்) 58

திருமுதுகுன்றம்சிதம்பரம் 44

சிதம்பரம்திருப்பாப்புலியூர் 42

திருப்பாப்புலியூர்சிதம்பரம் 42

சிதம்பரம்திருவேட்களம் 5

திருவேட்களம்திருக்கழிப்பாலை 4

திருக்கழிப்பாலைதிருநாரையூர் 84

திருநாரையூர்சீர்காழி 62

சீர்காழிதிருக்கோலக்கா 166

திருக்கோலக்காதிருக்கறுப்பறியலூர் 95

திருக்கறுப்பறியலூர்திருப்புன்கூர் 98

திருப்புன்கூர்திருநீடூர் (நீடூர்) 18

திருநீடூர் (நீடூர்குறுக்கைவீரட்டம்(திருநன்றியூர்) 10

திருநன்றியூர்திருநனிப்பள்ளி 14

திருநனிப்பள்ளி (பொன்செய்) – திருச்செம்பொன்பள்ளி (செம்பனார் கோவில்) நாகப்பட்டினம் 52

(செம்பனார்கோவில்) நாகப்பட்டினம்மயிலாடுதுறை 55

மயிலாடுதுறைதிருத்துருத்தி 15

திருத்துருத்திதிருவேள்விக்குடி 3

திருவேள்விக்குடிஎதிர்கொள்பாடி (திருஎதிர்கொள்பாடி) 4

எதிர்கொள்பாடிதிருக்கோடிக்காவல் (திருக்கோடிக்கா) 9

திருக்கோடிக்காதிருவாவடுதுறை, 3

திருவாவடுதுறைதிருவிடைமருதூர், 10

திருவிடைமருதூர்திருநாகேஸ்வரம் 5

திருநாகேஸ்வரம்பழையாறை 14

பழையாறைதிருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம்) 1

திருச்சத்திமுற்றம் (பட்டீஸ்வரம்திருநல்லூர், 14

திருநல்லூர்திருக்கருகாவூர், 26

திருக்கருகாவூர்திருவாவூர் திருவாவூர்புதிய பெயரை கண்டுபிடிக்க முடியவில்லை.

திருவாவூர்திருப்பாலைத்துறை 7.4 அதனால் திருக்கருகாவூர் முதல் திருப்பலாய்த்துறை தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது

திருப்பாலைத்துறைதிருப்பழனம் 19

திருப்பழனம்திங்களூர் 2

திங்களூர்திருச்சோற்றுத்துறை 10

திருச்சோற்றுத்துறைதிருநல்லூர் 35

திருநல்லூர்திருவாரூர் 49

திருவாரூர்திருவலஞ்சுழி 47

திருவலஞ்சுழிதிருகுடமுக்கு 13

திருகுடமுக்குதிருநாவலூர் 108

திருநாவலூர்திருச்சேறை 122

திருச்சேறைதிருகுடவாயில் (குடவாசல்) 5

திருகுடவாயில்திருநறையூர் 11

திருநறையூர்திருவாஞ்சியம் 18

திருவாஞ்சியம்திருப்பெருவேளூர் 42

திருப்பெருவேளூர்திருவாரூர் 49

திருவாரூர்திருவலிவலம் 21

திருவலிவலம்திருக்கீழ்வேளூர் 16

திருக்கீழ்வேளூர்திருக்கன்றாப்பூர் 16

திருக்கன்றாப்பூர்திருவாரூர் 16

திருவாரூர்திருப்புகலூர் 21

திருப்புகலூர்திருச்செங்காட்டங்குடி 4

திருச்செங்காட்டங்குடிதிருநள்ளாறு 15

திருநள்ளாறுதிருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) 26

திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை, நாகப்பட்டினம்) – திருப்புகலூர் (புகலூர்), 268

திருப்புகலூர்பூம்புகலூர் (திருப்புகலூர் வேறு பூம்புகலூர் வேறு. இரண்டும் நாகையில் உள்ளதால் அங்குள்ள பிரபலமான மூன்று கோவில்களில் ஒன்றின் பழைய ஊர் பெயராக இருக்கலாம். அதனால் குறைந்த தொலைவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.)

பூம்புகலூர்திருக்கடவூர் 296

திருக்கடவூர்திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில்) 24

திருஆக்கூர் ( தான்தோன்ரீஸ்வரர் கோவில் ) – திருவீழிமிழலை 33

திருவீழிமிழலைதிருவாஞ்சியம் 9

திருவாஞ்சியம்திருமறைக்காடு (திருத்தலையங்காடு, திருப்பெருவேளூர்) 90

திருமறைக்காடுதிருவாய்மூர் 37

திருவாய்மூர்திருமறைக்காடு 37

திருமறைக்காடுதிருவீழிமிழலை 93

திருவீழிமிழலைதிருநாகைக்காரோணம் ( நாகப்பட்டினம்) 47

திருநாகைக்காரோணம்திருவாவடுதுறை 62

திருவாவடுதுறைபழையாறை 25

பழையாறைதிருவானைக்கா 87

திருவானைக்காதிருவாலம்பொழில் 44

திருவாலம்பொழில்திருக்கானுர் 184

திருக்கானுர்திருஅன்பிலாலந்துறை (மான்துறை)176

திருஅன்பிலாலந்துறை (மான்துறை) – திருக்கண்டியூர் 41

திருக்கண்டியூர்மேலைத்திருக்காட்டுப்பள்ளி 21

மேலைத்திருக்காட்டுப்பள்ளிதிருவானைக்கா 32

திருவானைக்காதிருவெறும்பியூர் 15

திருவெறும்பியூர்திருச்சி 11

திருச்சிதிருப்பராய்த்துறை 16

திருப்பராய்த்துறைதிருப்பாதிரிப்புலியூர் 192

திருப்பாதிரிப்புலியூர்திருப்பைங்ங்கீலி, 178

திருப்பைங்ங்கீலிஅண்ணாமலை 232

அண்ணாமலைதிருவோத்தூர் 484

திருவோத்தூர்காஞ்சி 30

காஞ்சிதிருமால்பேறு 22

திருமால்பேறுகாஞ்சி 22

காஞ்சிதிருக்கழுக்குன்றம் 52

திருக்கழுக்குன்றம்திருவான்மியூர் 52

திருவான்மியூர்மயிலாப்பூர் 8

மயிலாப்பூர்திருவொற்றியூர் 17

திருவொற்றியூர்திருப்பாச்சூர் 56

திருப்பாச்சூர்பழையனூர் 15

பழையனூர்திருவாலங்காடு 2

திருவாலங்காடுதிருக்காரிக்கரை (ராமகிரி) 370

திருகாரிக்கரை (ராமகிரி ) – திருக்காளாத்தி 338

திருக்காளாத்திதிருப்பருப்பதம் ( ஸ்ரீசைலம்), 396

திருப்பருப்பதம் கயிலை (செல்ல முடியாமல் திருவையாறு. லிபு லெக் பாஸ் என்ற இடத்தோடு திரும்பியதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. காரணம் அது ஓரளவுக்கு மேடு. அதன் பின் சிவபெருமான் TELEPORTING எனும் முறையில் அங்கு மறைய வைத்து திருப்பி அனுப்பியுள்ளார்) 843

திருவையாறுதிருநெய்த்தானம் 2

திருநெய்த்தானம்திருமழபாடி 17

திருமழபாடிதிருப்பூந்துருத்தி 21

திருப்பூந்துருத்திசீர்காழி 94

சீர்காழிதிருப்புத்தூர் 210

திருப்புத்தூர்மதுரை 65

மதுரைதிருப்பூவணம் 20

திருப்பூவணம்ராமேஸ்வரம் 180

ராமேஸ்வரம்திருநெல்வேலி 215

திருநெல்வேலிதிருக்கானப்பேர் (காளையார் கோவில்), 221

திருக்கானப்பேர்பூம்புகலூர் 191

பூம்புகலூர்திருப்புகலூர் 2

 

மொத்த தூரம் 14,422