பூசணிக்காயின் விதைகள் எண்ணிக்கை கணக்கதிகாரம்
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதையும், ஓர் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையையும் உங்களால் கூற முடியுமா ?தமிழன்_படைத்த_கணிதம் .
கணக்கதிகாரம்_நூலின்_சிறப்பு: முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.
"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி_நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்
"கீற்றெண்ணி முத்தித்துத் கழாறினால் மாறி வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலேபாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும் பூசணிக்காய் தோறும் புகல்"
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க. பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.
ஓர் பலாப்பழத்தை பிளக்காமல் அதில் எத்தனை சுளைகள் இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ?
சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."