Saturday, May 11, 2024

ரயில் தண்டவாளங்களில் துருப்பிடித்த இரும்பைதான் யூஸ் பண்ணுவாங்க

 ரயில் தண்டவாளங்களில் துருப்பிடித்த இரும்பைதான் யூஸ் பண்ணுவாங்க

ரயில் தண்டவாளங்களில் துருப்பிடித்த இரும்பைதான் யூஸ் பண்ணுவாங்க,செலவை குறைப்பதற்காக அல்ல... வேற என்ன காரணம்?

பொதுவாக ரயிலுக்கான தண்டவாளங்களைப் பயன்படுத்தும் போது அது துருப்பிடித்த இரும்புகளைக் கொண்டே கட்டமைக்கின்றனர். ஏன் இவ்வாறு செய்கின்றனர். துருப் பிடிக்காத இரும்புகளை ஏன் தண்டவாளங்களுக்குப் பயன்படுத்துவதில்லை முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள். நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது ரயிலில் பயணித்திருப்போம். மற்ற போக்குவரத்துக்களை விட ரயில் போக்குவரத்து தான் ஆச்சரியங்கள் நிறைந்தது. அதன் தொழிற்நுட்பம் மற்றும் அதன் இயக்க நடை முறைகள் எனப் பல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளும் படி அமைந்துள்ளது

 

அந்த வகையில் ரயில் இயங்கும் தொழிற்நுட்பத்தில் மிக முக்கியமானது ரயில்களுக்கான தண்டவாளங்கள் அமைப்பது. இன்று இந்தியாவில் பெரும்பாலான நகரங்கள் ரயில் தண்டவாளங்களால் இணைக்கப்

பட்டுள்ளன. இந்த தண்டவாளங்களை அமைப்பதற்கான செலவும் உழைப்பும் அதிகம். அதனால் இந்த தண்டவாளங்களை அமைக்கும் போதே சரியாக அமைக்க வேண்டும். இதற்காகத் தேர்வு செய்யப்படும் பொருட்களில் உள்ள ஒரு விஷயம் பற்றித் தான் நாம் காணப்போகிறோம். நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ரயில் தண்டவாளங்கள் எல்லாம் துருப்பிடித்த நிலையில் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இன்று உலகில் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் இரும்புகள் வந்துவிட்டது. இன்றும் ஏன் தண்டவாளங்களில் துருப்பிடிக்கும் இரும்புகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆபத்து வராத என நாம் யோசிப்போம்.

 

ஆனால் உண்மையில் இப்படியாக இரும்புகளைப் பயன்படுத்துவதால் தான் ஆபத்து வராது ஸ்டெயின்லெஸ் இரும்புகளைத் தண்டவாள பயன்பாட்டிற்குப் பயன்படுத்த முடியாது. ஏன் என்பது குறித்து விவாக காணலாம். இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் துருப் பிடிக்கும் இரும்பிற்கும் துருப்பிடிக்காத இரும்பிற்கும் என்ன வித்தியாசம் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். துருப்பிடிக்கும் இரும்பு கார்பன் அளவு குறைந்தது 2சதவீதம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். துருப்பிடிக்காத இரும்புகளில் கார்பன் 2 சதவீதத்திற்கும் அதிகமாக எக்காரணத்தைக் கொண்டும் இருக்கக்கூடாது. 2 சதவீதத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும். அப்பொழுது இரும்பில் உள்ள கார்பன் தான் இரும்புகள் துருப்பிடிப்பதற்குக் காரணமான என்றால் இல்லை. இரும்புகள் துருப்பிடிக்காமல் இரக்க அதில் உள்ள க்ரோமியத்தன் அளவு தான் முக்கியமான காரணம். 10.5 சதவீதத்திற்கு அதிகமாக அளவில் க்ரோமியம் இருந்தால் அந்த இரும்புத் துருப் பிடிக்காத இரும்பாக இருக்கும். சரி இந்த க்ரோமியம் அதிகம் உள்ள தண்டவாளங்களில் பயன்படுத்த வேண்டியது தானே என உங்களுக்குத் தோன்றலாம். அதற்குப் பதில் தெரியும் முன்பு ஒரு ரயில் தண்டவாளத்திற்கு என்ன தேவை என்பதைத் தெரிந்து கொள்வோம். ரயில் ரயில் தண்டவாளம், உறுதியானதாக, எளிதில் வளைந்து கொடுக்காத தன்மை கொண்டதாக, இருக்க வேண்டும். ஆனால் துருப் பிடிக்காத ஸ்டெயின்லெஸ் இரும்பு தயாரிக்கப்படும் போது அதில் அதிகமாக க்ரோமியம் மற்றும் மாலிபிடினம் ஆகியவை சேர்க்கப்படுகிறது. இது அந்த இரும்பை துருப் பிடிக்காமல் வைத்திருந்தாலும், அந்த இரும்பிற்கு இயற்கையாக எளிதில் வளைந்து கொடுக்கும் தன்மையும் லேசான பிளாஸ்டிக் தன்மையும் வந்துவிடுகிறது.

 

இதனால் இதைத் தண்டவாளங்களில் பயன்படுத்த முடியாது. அதே நேரத்தில் இந்த ஸ்டெயில்லெஸ் இரும்பு என்பது வெயிலில் அதிகமாக விரிவடையும் அதே நேரத்தில் குளிரில் அதிகமாக சுருங்கும் தன்மை கொண்டது. இதனால் இதை ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்தினால் அடிக்கடி இதில் பிரச்சனைகள் ஏற்படும். அதனால் இந்த துருப் பிடிக்காத இரும்பு பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் தண்டவாளங்களில் பயன்படுத்தப்படும் இரும்பில் அதிகம் மேக்னிஷியம் கலக்கப்படுகிறது. மேலும் கார்பன் 2 சதவீதத்திற்கும் அதிகமாகக் கலக்கப்படுகிறது. இது தண்டவாளங்களுக்கு உறுதித் தன்மையை வழங்குகிறது. இந்த தண்டவாளங்கள் எல்லாம் துருப் பிடித்த நிலையில் இருப்பதற்குக் காரணம் இந்த மேக்னீஷியம் தான். மேக்னீஷியத்தின் தன்மை இது நேரடியாகக் காற்றுடன் ரியாக்ட் ஆகும்போது ஒரு துரு போன்ற போர்வையை (iron oxide) ஏற்படுத்துகிறது. இதனால் உள்ளுக்குள் இருக்கும் பகுதி காற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும். இதனால் தண்டவாளங்கள் தன் உறுதித் தன்மையை இழக்காமல் இருக்கும்.

 

இந்த மேக்னீஷியம் வெயிலில் சூட்டிற்கு அதிகமாக விரிவடையாது. குளிருக்கு அதிகமாகச் சுருங்காது. மொத்தத்தில் துருப்பிடிக்காத இரும்பை விடத் துருப் பிடிக்கும் இரும்பு தான் ரயில்வே தண்டவாளங்களுக்கு உகந்தது இதனால் தான் ரயில்வே நிர்வாகம் துருப் பிடித்திருந்தாலும் பரவாயில்லை என இந்த ரக இரும்பையே பயன்படுத்துகின்றனர். இதுகூட இரும்பு தயாரிப்பில் துருப் பிடிக்காத இரும்பை தயாரிப்பது, துருப் பிடிக்கும் இருப்பை தயாரிப்பில் சற்று செலவும் அதிகம். மொத்தத்தில் துருப்பிடிக்கும் இரும்பில் இருக்கும் துருதண்வாளங்களை வெளியில் மழை போன்ற விஷயங்களிலிருந்து காப்பாற்றுகிறது. அதனால் ரயில் தண்டவாளங்களைப் பொருத்தவரை துருப் பிடித்த தண்டவாளங்கள் சிறப்பான தண்டவாளங்களாக இருக்கிறது.