Tuesday, November 19, 2024

பெண்களின் ரகசியங்கள்

 பெண்களின் ரகசியங்கள்



1. கோபம்_மற்றும்_வார்த்தைகள்:
ஒரு பெண் கோபமாக இருக்கும்போது, ​​அவள் பேசுவதில் பெரிதாக பொருள் ஏதும் இருக்காது. அவளை அமைதிப்படுத்த எப்போதும் அவளை அணைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். உடனடியாக அமைதி ஆகி விடுவாள்.


2.
பிரிவின்_மனவேதனை:
ஒரு பெண் உண்மையாகக் காதலிக்கும் மனிதனிடம் இருந்து பிரிந்து இருக்கும் நேரம், ​​அவளது மிகக் கடினமான நேரம். அவள் மனவேதனை அத்தகைய நேரத்தில் உச்சத்தில் இருக்கும். அவளுக்கு ஆறுதலாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

3. நம்பிக்கை:
ஒரு பெண் ஒரு மனிதனை நம்ப நேரம் பிடிக்கும், அவள் நம்பினால் அவளது மனதை மாற்றுவது கடினம். அந்த நம்பிக்கையை உடைக்கும் வண்ணம் நீங்கள் தவறு செய்தால், நீங்கள் அவளை மொத்தமாக மறந்து விடுவது நல்லது.

4. நிறைவு_இல்லாத_பல்கலைக்கழகம்:
ஒரு பெண் எப்போதும் பட்டம் பெற முடியாத, காலம் முழுவதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு பல்கலைக்கழகம்.

5. திருமணச்_சான்றிதழ்:
உங்கள் திருமணச் சான்றிதழ் ஒரு "ஓட்டுநர் உரிமம்" (டிரைவிங் லைசென்ஸ்) அல்ல, இது ஒரு "கற்றல் அனுமதி" (Learning license) மட்டுமே. அவளை தொடர்ந்து வசீகரிக்க செய்ய வேண்டியவைகளை செய்து கொண்டே இருங்கள்.

6. நடத்தை:
அவள் இப்போது மிகவும் கசப்பான ராட்சஸியாக இருக்கலாம், ஆனால் உங்கள் அணுகுமுறையின் மூலமாக அவளை இனிய தேவதையாக மாற்ற முடியும்.

7. நினைவுகள்:
ஒரு பெண் கிட்டத்தட்ட எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பாள், முக்கியமாக காயப்படுத்தியதை கண்டிப்பாக நினைவில் வைத்திருப்பாள். அவளை காயப்படுத்துவதைத் தவிர்க்கவும், நீங்கள் அவளை முழுமையாக நம்புவதை உறுதிபடுத்திக் கொண்டே இருக்கவும்.

8. ரகசியம்:
ஒரு பெண் மிகவும் ரகசியமாக இருக்கக் கூடியவள், ரகசியமாக இருக்க விரும்புபவள். பெரும்பாலும் அவர்கள் தனக்கு பிடித்த ஆண்களிடம் கடினமாக நடக்கும் போது, ​​அவர்கள் தங்களது நெருங்கிய நண்பர்களிடம் சென்று அழுவார்கள். உங்கள் பெண்ணை உங்கள் மிகச் சிறந்த நெருங்கிய நண்பனாக்குங்கள்.

9. வாழ்த்துதல்:
அனைத்து பெண்களும் தன்னிடம் யாசிப்பதை / தன்னை வாழ்த்துவதை விரும்புகிறார்கள். ஆண்கள் இதை பயன்படுத்தத் தவறவிடுகிறார்கள். பெண்களை குழந்தை போல நடத்துங்கள், அவர்களுக்கும் அதுதான் தேவைப்படுகிறது.

10. உணர்வு:
பெண்கள் உப்பு போன்ற தனித்துவமான குணம் கொண்டவர்கள், அவர்கள் இருக்கும்போது அதை உணர முடியாது, ஆனால் அவர்கள் இல்லாத நேரத்தில் அனைத்தும் சுவையற்றதாக ஆகி அவர்களின் தேவையை ஆணுக்கு உணர்த்திவிடும்.

11. காதல்:
அவள் உங்களை உண்மையாகக் காதலித்தால், உங்களை மகிழ்ச்சியாக வைக்கும் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்ய முடியும், ஆகவே அவளாக செய்யும் வரை பொறுமை காக்கவும், அவளைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

12. பாதுகாப்பு:
நீங்கள் அவளை பராமரிக்கவில்லை என்றால், அதைச் செய்ய ஒருவரை சுலபமாக பெண்களால் கண்டுபிடிக்க முடியும். அதுபோன்று எப்போதும் பலர் காத்துக் கொண்டிருக்க, அதில் அவள் உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம்.

13. பணம்:
ஒரு பெண் உங்களை உண்மையாகக் காதலித்தால், உங்களிடமிருந்து பணம் கேட்கவே வெட்கப்படுவாள். ஆனால் ஒரு நாகரீகமான மனிதனாக அப்படி அவள் கேட்காமல் நீங்களாகவே தேவையானதைக் கொடுத்து விடுங்கள். உங்களை காதலிக்கும் ஒருத்தி கண்டிப்பாக உங்கள் பணத்தை தேவையற்ற விஷயங்களுக்கு செலவழிக்க மாட்டாள்.
உங்கள் வாழ்க்கையில் நல்ல பெண் இருந்தால், அவளை எப்போதும் இகழ்ந்து விட வேண்டாம். அவர்கள் விலைமதிப்பற்ற வைரங்கள். அவர்களை காயப்படுத்தாதீர்கள், ஏனெனில் அந்த வைரங்களைக் கவர பலர் எப்போதும் தயாராகக் காத்து இருக்கிறார்கள்.
ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்குப் பின்னாலும், அவனை உடலாலும் உள்ளத்தாலும் உயிராலும் காதலிக்கும் ஒரு நல்ல நேர்மையான பெண் கண்டிப்பாக இருக்கிறார்