Tuesday, November 19, 2024

உளவியல் நிபுணருடன் உரையாடல்

உளவியல் நிபுணருடன் உரையாடல்




நான் வேலைக்கு போறேன்... என் மனைவி வீட்டுல சும்மாதான் இருக்கா! கணவன் ஒருவர், உளவியல் நிபுணரை சந்தித்தபோது, நடந்த உரையாடல்...

நிபுணர்:* நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்..?
கணவர்: ஒரு வங்கியில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறேன்.

நிபுணர்: உங்கள் மனைவி..?

கணவர் : அவள் வேலை செய்வது கிடையாது. வீட்டில்தான் இருக்கிறாள்.

நிபுணர்: குடும்பத்தினர் சாப்பிடுவதற்கு காலை உணவை தினமும் யார் தயாரிக்கிறார்கள்?

*
கணவர்:* என் மனைவி தான். ஏனென்றால் அவள்தான் வேலைக்கு செல்வதில்லையே. சும்மாதான் இருக்கா.

*
நிபுணர்:* தினமும் காலை உணவு சமைப்பதற்காக உங்கள் மனைவி எப்போது எழுவார்?

*
கணவர்:* அவள் காலை 5 மணிக்கு எழுவாள். ஏனென்றால் சமைப்பதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வாள். அவள்தான் சும்மா இருக்கிறாளே!

*
நிபுணர்:* உங்கள் குழந்தைகளை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள்?

*
கணவர்:* என் மனைவி தான் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வாள். அவளுக்கு தான் வேலையில்லையே.

*
நிபுணர்:* பள்ளியில் விட்டுவந்தது பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

*
கணவர்:* மார்க்கெட்டுக்கு செல்வாள், பின்னர் வீட்டிற்கு வந்து சமைப்பாள், துணி துவைப்பாள். உங்களுக்கு தெரியுமா... அவளுக்கு தான் வேலையில்லையே

*
நிபுணர்:* மாலையில் வீடு திரும்பியதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?

*
கணவர்:* நாள் முழுக்க ஆபீஸில் இருப்பதால் மிகவும் களைப்பாக இருக்கும். அதனால் நான் ரெஸ்ட் எடுப்பேன்.

*
நிபுணர்:* பிறகு உங்கள் மனைவி என்ன செய்வார்?

*
கணவர்:* இரவு உணவு தயார் செய்வாள், குழந்தைகளுக்கு ஊட்டுவாள் பிறகு எனக்கான உணவு தயார் செய்து பாத்திரங்களை கழுவுவது, வீட்டை சுத்தம் செய்து குழந்தைகளை படுக்க வைப்பாள்.

காலை முன் எழுந்தது முதல் இரவு வரை வேலை வேலை வேலை... என ஓடும் பெண், 'வீட்டுல சும்மாதானே இருக்கா... வேலையே செய்யாம' என்று பேசுவது எத்தனை கொடுமை?

*
மனைவியை பாராட்டுங்கள், ஏனென்றால் அவளின் தியாகங்கள் எண்ணிலடங்காதது.*

ஒவ்வொருவரையும் மதித்து அவர்களை பாராட்ட, புரிந்து கொள்ள இது உங்களுக்கான ஒரு சந்தர்ப்பம்.

''
நீங்கள் வேலை செய்கிறீர்களா அல்லது வீட்டில் சும்மாயிருக்கிறீர்களா?' என்று ஒரு பெண்ணிடம் கேட்க, அந்தப் பெண் தந்த பதிலையும் பாருங்கள்.

ஆம் நான் முழுநேரம் பணியாற்றும் வீட்டிலிருக்கும் பெண்.
ஒரு நாளின் 24 மணி நேரங்களும் பணியாற்றுகிறேன்.

நான் ஒரு மகள்
நான் ஒரு மனைவி
நான் ஒரு மருமகள்
நான் ஒரு தாய்
நான் ஒரு அலாரம்
நான் ஒரு சமையல்காரி
நான் ஒரு வேலைக்காரி
நான் ஒரு ஆசிரியர்
நான் ஒரு செவிலியர்
நான் ஒரு பணியாளர்
நான் ஒரு ஆயா
நான் ஒரு பாதுகாவலர்
நான் ஒரு ஆலோசகர்
நான் ஒரு நலன் விரும்பி
எனக்கு விடுமுறைகள் கிடையாது.

உடல்நிலை சரியில்லை என்றாலும் விடுமுறை எடுக்க முடியாது. இரவும் பகலும் வேலை செய்ய வேண்டும். எப்போதும் வேலை செய்வதற்கு தயாராகவே இருக்க வேண்டும்.

எப்போதும் என்னை நோக்கி வீசப்படும் 'நாள் பூரா வீட்டுல சும்மாதானே இருக்கே?' என்கிற கேள்வியை எதிர் கொண்டபடி!

இதை படிக்கும் சகோதர ஆண்களே உங்கள் மனைவியை மதியுங்கள் அவளுக்கும் ஓய்வு கொடுங்கள் மனரீதியாக..

இதில் இன்னும் மோசம் வேலைக்கு செல்லும் பெண்களின் நிலை

 

 

வயது ஐம்பதை கடந்த பிறகாவது அமைதியாக வாழவேண்டும் என நினைத்தால்...

உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.

நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதையும் பெரிது பண்ணாதே.

உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ. ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....

ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள். தனித்தனி பிறவிகள்
தனித்தனி ஆன்மாக்கள்..
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும். குணங்களும் இருக்கும். அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.

அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே. அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் . அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை இவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது. இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.

அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.

அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.

எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...

பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே. அவர்களுக்கு அனுபவம் தான் குரு.

செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்? தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.

நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம். அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.

எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் கடவுள்.
அதையும் மீறி சிலவேளைகளில் இறைவன் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.

நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள். அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் . அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.

இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.

நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.

மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட இறைவன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.

உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.

தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்