கையில்
வீணை , நீண்ட சுருள்சுருளான முடி
, சந்தனக் கட்டை காலணிகள் , எப்போதும்
நாராயண நாமத்தை உச்சரிக்கும் தேவரிஷி
நாரதரின் தோற்றத்தைப் பற்றி பல காவியங்களின்
மூலம் படித்திருக்கிறோம் . தேவரிஷி நாரதர் முதலில்
உபப்ரஹன் என்ற கந்தர்வராக பிறந்தார்
.
உபப்ரஹன்
உடைய தோற்றம் தேவலோகத்து அப்சரைகளின்
அழகிய தோற்றம் போல இருந்தது
. பிரம்மதேவர் தர்பாரில் அப்சரைகளின் இசை , நடன நிகழ்ச்சி
ஒன்று நடைபெற்றது . அந்த நிகழ்ச்சியில் உபப்ரஹனும்
அப்சைரையாக மாறி அவர்களோடு இணைந்து
நடனமாடினார் . இதை அறிந்த பிரம்மதேவர்
கோபம் கொண்டு அடுத்த பிறவியில்
கீழ்ஜாதியில் உபப்ரஹன் பிறவி எடுக்க வேண்டுமென்று
சாபம் கொடுத்தார் . அடுத்த பிறவியில் உபப்ரஹன்
ஏழையான வேலைக்காரக் குடும்பத்தில் பிறந்தார் .
ஐந்து வயதை அடைந்த அந்தக்
குழந்தை பெற்றவரை மதித்து, ஏழ்மையில் இருந்தாலும் தன்னை நாடி வரும்
துறவிகளுக்கும், சாதுக்களுக்கும் அன்போடு உணவளித்து உபசரித்தான்
. சாதுக்களும் , துறவிகளும் மிச்சம் வைத்து விட்டுப்போன
உணவை சாப்பிட்டான் . சிறுவனின் சேவையைக் கண்டு மெய்சிலிர்த்த சாதுக்கள்
அவனுக்கு மந்திரத்தையும் , தியானத்தையும் கற்றுக் கொடுத்தார்கள் .
திடீரென்று
அந்தச் சிறுவனின் தாயார் பாம்புக் கடியால்
மரணம் அடைந்தாள் . தாயை இழந்த சிறுவன்
ஊர் ஊராக அலைந்து திரிந்தான்
. ஒருநாள் ஆலமரத்தடியில் அமர்ந்து சிறுவன் தியானத்திலிருந்த போது
அவனுடைய மனதில் மகாவிஷ்ணு தோன்றித்
தோன்றி மறைந்தார் . அந்தச் சிறுவனுக்கு பகவானை
நேரில் காண வேண்டுமென்ற ஆசை
பிறந்தது . அந்தச் சிறுவன் இப்பிறவியில்
பகவானைப் பார்க்க முடியாது என்ற
அசரீரியின் குரலைக் கேட்டான் . காலப்போக்கில்
சிறுவனின் உடலில் இருந்து பிரிந்த
ஆத்மா பிரம்மனுடன் கலந்து தேவரிஷி நாரதராக
மூன்றாவது பிறவி எடுத்தார் .
நாரதர்
இப்ருகு முனிவரின் மகள் லக்ஷ்மியை மகாவிஷ்ணுவிற்கு
திருமண செய்து கொடுத்தார் . இந்தரனின்
ஒப்புதலோடு ஊர்வசி புருவர் திருமணத்தை
முடித்தார் . நாரதரின் தூண்டுகோலால் வால்மீகி ராமாயணத்தையும் , வியாசர் மகாபாரதத்தையும் படைத்தார்கள்
. நாரதரின் உதவியால் துருவனும் , பிரகலாதனும் மேதைகள் ஆனார்கள் . நாரதரே
, இந்திரன் , சந்திரன் , மகாவிஷ்ணு , சிவபெருமான் , தருமர் , ஸ்ரீராமர் , கிருஷ்ணபரமாத்மா ஆகியவர்களுக்கு வழிகாட்டியாகவும் , குருவாகவும் இருந்தார் . நாரதரை சாஸ்திரங்கள் , சுருதி
, ஸ்ம்ரிதி , இதிகாசம் , புராணங்கள் , வேதங்கள் , இசை , பூகோளம் , கணிதம்
, ஜோதிடம் , யோகா ஆகிய சகல
வித்தைகளிலும் திறமைசாலி என்று சொல்லலாம் . நாரத
புராணத்திலுள்ள நாரத பஞ்சராத்திரி , நாரதரின்
சிறப்பைப் பற்றி சொல்லுகிறது . ராமாயணமும்
, மகாபாரதமும் தேவரிஷி நாரதரின் பக்தி
பெருமையைப் பற்றி சொல்கின்றன .