விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது ?
52-ஆவது தேசிய தொழிலாளர்பாதுகாப்பு தினம்: மார்ச்-04.
அனைவருக்கும் 52 -வது பாதுகாப்பு தின வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
"விழிப்புடன் பணிபுரிவோம், விபத்துனை தவிர்ப்போம்".
அகில உலக தொழிலாளர் ஸ்தாபனத்தின்( ILO) புள்ளி விவரங்களின்படி உலக அளவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும்
23 லட்சம் தொழிலாளர்கள் தொழிற்சாலையில் நடக்கும் விபத்தினால் இறக்கிறார்கள்
ஒவ்வொரு நாளும் " 6000" மரணங்கள் விபத்தினால் நிகழ்கின்றன,இதனால் சமூகத்தில் அமைதியின்மை நிகழ்கிறது.
விபத்திற்கான காரணங்கள் என்ன ? எவ்வாறு தவிர்ப்பது?
பாது காப்பற்ற செயல்களே பெரும்பாலான(88%-90%) விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது.
விபத்துக்கள் தவிர்க்கக்கூடியதே. மின்சார விபத்துக்களை தவிர்ப்பது எப்படி?
1)பாதுகாப்பு கவசங்களான தலைக்கவசம்,இடுப்புகயிறு கையுறை அணிந்து மின்சார பணிகள் செய்யப் படவேண்டும்.
2)த.நாடு.தொழிற்சாலை பாதுகாப்பு விதி 1950ன் படி 2 மீட்டர் அதற்க்கு மேல் உயரத்தில் செய்யும் பணிகளுக்கு இடுப்பு கயிறு கட்டாயமாக அணிந்து தான் பணி செய்யப்பட வேண்டும்.
3)அனைத்து பணிகளும் செய்வதற்கு முன்பு உரிய அனுமதி பெற்ற பின்னரே செய்யப்பட வேண்டும்.
4)மின்சார பணி செய்யும் போதும் வாகனங்கள் ஓட்டும் போதும்கைபேசி உபயோகப்படுத்தக்கூடாது.
5)மின்சார பணி செய்வதற்கு முன்பு உரிய அனுமதி பெறப்பட்ட பின்னர் அனுமதி பெற்ற பிரேக்கரையோ அல்லது பீடரையோ மின்சாரம் துன்டிக்கப்பட வேண்டும்.
6.துன்டித்த பின் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதா என்று உறுதி செய்த பின் டிஸ்ஸார்ஜ் செய்து விட்டு அதன் பின்னர் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ள பிரேக்கர்/ பீடரை தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
7.இறுதியாக இருபுறமும் எர்த்ராடு போட வேண்டும்.( எர்த் சுவிட்சாக இருந்தால் இருபுறமும் எர்த் சுவிட்சிகள் மூடப்பட வேண்டும்) பின்னர்தான் மின்சார பணிகள் செய்யப்பட வேண்டும்.
8) குறைந்த மின் அழுத்தப்பகுதிகளில் ( எல்.டி) பணி செய்யும் போது மின் மாற்றியை நிறுத்தி விட்டு அதை மின்சாரத்திலிருந்து தனிமைப்படுத்தி விட்டு மூன்று முனைகளிளும் நில இணைப்பு செய்வது மட்டுமின்றி நியூட்ரலிலும் கட்டாயம் நில இணைப்பு செய்யப்பட வேண்டும். எனவே மேற்கண்ட நடைமுறைகளை தவறாமல் கடைபிடித்து பணி செய்தால் 100 சதம் விபத்துக்களை தவிர்க்கலாம்.
இயந்திரவியல் விபத்துக்களை எவ்வாறு தவிர்ப்பது ?
இயந்திரங்களை சரியான முறையில் நிறுவப்பட்டு தேவையான பராமரிப்புகள் தவிர்க்காமல் செய்யப்பட வேண்டும்.
இயந்திரங்களின் சுழலக்கூடிய பாகங்கள் அனைத்தும்"-360-Degree Guarding உறுதி சுயெய்யப்பட வேண்டும்,அதாவது எந்தப் பகுதியில் இருந்து தொட்டாலும் சுழலக்கூடிய பாகங்களால் பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்பு செய்தல்.
கட்டுமான விபத்துகளை தவிர்ப்பது எவ்வாறு?
கட்டுமானங்கள் உரிய மேற்பார்வையின் படி செய்யப்பட வேண்டும்.
Ladders,Scaffolding - தரமான முறையில் அமைக்கப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே பணி செய்ய ஊழியர்கள் அனுமதிக்கப்படுதல்.
உயரப்பணிகள்( 2- மீட்டருக்கு மேல்) பணி செய்தால் கட்டாயம்" Safety belt" அணிந்த பின்னரே ஊழியர்களை பணி செய்ய அனுமதிக்கப்படுதல்.
பள்ளங்கள்/ குழிகளில் பணி செய்யும்போது " Confined Space"( கட்டுபடுத்தப்பட்ட பகுதி) அதாவது அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உபகரணங்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பின்னரே பணி செய்ய அனுமதிக்கப்படுதல்.
தீ விபத்துக்கள் : காரணங்கள் மற்றும் தீர்வுகள்:
தேசிய தீத்தடுப்பு குழும( NFA) புள்ளி விவரப்படி 42% தீ விபத்துக்கள் மின்சாரத்தின் மூலம் நிகழ்கிறது. அதற்கான காரணம், மின்சார சர்க்கியூட்டில் லூஸ் காண்டக்ட் மற்றும் ஓவர் லோடை தவிர்த்தும்,சரியான நில இணைப்பு தரமான பொருட்கள் உபயோகித்தும் உரிய பராமரிப்பு செய்தால் 100 சதம் மின்சார தீ விபத்து தவிர்க்கலாம்.
இராசாயணங்களை அதன் MSDS- ( Material Safety Data Sheet) ல் சொல்லி உள்ளவாறு கையாளுதல், கொண்டு செல்லுதல் குறிப்பாக சேமித்தலை கடைபிடித்தல்.
தீத்தடுப்பிற்கு தேவையான சாதனங்கள்,கருவிகள், அமைத்தல்,பராமரித்தல் தேவையான நேரங்களில் சரியான முறையில் உபயோகப்படுத்திட ஊழியர்களுக்கு அடிக்கடி பயிற்சி அளித்தல்.
சாலை விபத்துக்கள்: காரணங்கள் மற்றும் தீர்வுகள்:
உலக அளவில் சாலை விபத்துக்களில் இந்தியா,சீனா மற்றும் அமெரிக்கா முறையே முதல்மூன்று இடங்களை வகிக்கின்றன. காரணங்கள்:
1.சாலை விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டுதல்.
2.கவனக்குறைவாக வாகனங்கள் ஓட்டுவது.
3.ஓட்டுனர்களின் கவனக்குறைவே 82 சதவீத விபத்துக்களுக்கு காரணமாக அமைகிறது.
4.அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட மிக அதிகமாக வாகனங்களை ஓட்டுதல்.
5.,அதிக நேரம் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் ஓட்டுவது.
6.சரியாக பராமரிப்பு இல்லாத சாலைகள்.
7.உரிய பராமரிப்பு இல்லாத வாகனங்கள ஓட்டுதல்.
8.குடித்து விட்டு வாகனங்களை இயக்குதல்.
தீர்வுகள்:
1.சாலை பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
2.இளைஞர்கள் ,பள்ளி மாணவர்களிடம் அதிக அளவில் தொடர்ச்சியாக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதல், இதற்கென காவல்துறையில் தனி பயிற்சி மையம் மாவட்டம் தோறும் அரசு உருவாக்கி பயிற்சி அளித்தல்.
3.சாலைகளில் குறிப்பிட்ட தூரத்திற்குள் விபத்து அறிவிப்பு பலகைகள் மற்றும் சாலையின் தன்மை/ஓட்டுதல் வேகம் மற்றும் குடித்து விட்டு வாகனம் இயக்கக்கூடாது என்ற ஆபத்து அறிவிப்பு பலகை வைத்தல.
4.சாலை சீரமைத்தல்/சாலை பராமரிப்பு
5.அபாரதம் ,அரசின் கடுமையான தண்டனைகளால் மட்டுமை விபத்தினை குறைக்க இயலாது,எனவே மேற்கன்ட செயல்களின் மூலம் தொடர்ச்சியான விழுப்புணர்ச்சியை உருவாக்கி விபத்தினை தவிர்த்தல்.
6.சாலை விபத்துக்களுகளைக் குறைக்க விழிப்புணர்வு மற்றும் சாலை பாதுகாப்பு என்பதை ஒவ்வொரு மனிதரும் ஒழுக்க நெறியாக பின்பற்ற பாடங்களை ஆரம்ப்ப் பள்ளிமுதல் பாடத்திட்டங்களை கொன்டு வருதல்.
7.தலைக்கவசம் அணிந்து கொண்டும்,பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்குதல் குறித்து விழிப்புணர்வு தொடர்ச்சியாக உருவாக்குவோம்.
ஊழியர்களுக்கு பாதுகாப்பு கலாச்சாரத்தினை மேம்படுத்திட நடவடிக்கை எடுத்து நமது நோக்கம்
"ZERO HARM" தீங்கில்லா விபத்தில்லா " சூழ்நிலையை தொழிலகங்களில் உருவாக்கி விபத்தினை முழுமையாக தவிர்ப்போம்