Thursday, March 7, 2019

. கம்ப்யூட்டர் டிப்ஸ்...-5


. கம்ப்யூட்டர் டிப்ஸ்...-5



தானாக அப்டேட்

விண்டோஸ் அப்டேட் வசதியைப் பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக ரீஸ்டார்ட் செய்திடக் கட்டாயப்படுத்தும். அப்போதுதான், அப்டேட் செய்யப்பட்ட வசதிகள், உங்களுக்குக் கிடைக்கும்

அப்போது, நீங்கள் சேவ் செய்யப்படாத வேலை ஏதேனும் மேற்கொண்டிருந் தால், அது வீணாகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, கண்ட்ரோல் பேனலில், Windows Update திறக்கவும். இதில் Change Settings என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில் Download updates but let me choose whether to install them என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டருக்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பின் அந்த போல்டர் இருக்கும் டைரக்டரி சென்று, அந்த போல்டரை மவுஸால் தேடி, கிளிக் செய்து பெறுகிறீர்களா? அதற்குப் பதிலாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக அந்த போல்டரைத் திறந்த நிலையில் இருந்தால், நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அப்படியும் செட் செய்திடலாம். உங்களுடைய டாஸ்க் பாரில் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் என்பதனத் தேர்ந்தெ டுக்கவும். இதில் உள்ள டார்கெட் பீல்டில், ‘%windir%\explorer.exe’என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் விட்டு பைலுக்கான பாத் அமைக்கவும். அது ‘%windir%\explorer.exe C:\Users\yourusername\ என அமையலாம். இவ்வாறு அமைத்த பின்னர், விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக நீங்கள் விரும்பும் போல்டரைத் திறந்து,நீங்கள் வேலை செய்திடத் தயாராகக் காட்டும்


Megaupload Downloader

இணையத்தில் பல தளங்கள், பைல்கள் ஸ்டோர் செய்வதற்கென செயல்படுகின்றன. இவற்றில் நம் விருப்பத்திற்கு ஏற்ப பைல்களை அப்லோட் செய்து வைத்து, அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். யுட்யூப் போன்ற தளங்களில், வீடியோக்களையும் அப்லோட் செய்து மகிழ்ச்சி அடையலாம். ஆனால் எந்த சாப்ட்வேர் புரோகிராமினையாவது டவுண்லோட் செய்திட வேண்டுமாயின் நாம் சில தடைகளை அல்லது தாமதங்களை எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. விளம்பரங்களையும் சந்திக்க வேண்டி யுள்ளது. சில பைல்களை இலவசமாக டவுண்லோட் செய்கையில், குறைந்தது ஒரு நிமிடமாவது காத்திருக்க வேண்டியுள்ளது

அப்போது அந்த தளத்திலிருந்து நம்மைப் பற்றிய தகவல்களை அறிய, ஏதேனும் புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறதோ என்று பயம் ஏற்படுகிறது. இந்த சிரமங்கள் எதனையும் எதிர் கொள்ளாமல், புரோகிராம்களை டவுண்லோட் செய்திட, இணையத்தில் நமக்கு இலவசமாய் புரோகிராம் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் பெயர் Megaupload Downloader. இந்த புரோகிராம் டவுண்லோட் செய்வதற்கென உள்ள புகழ்பெற்ற தளங்களான Megaupload, Rapidshare, Sendspace, Depositfiles, 4Shared, Mediafire, ZShare, Easyshare, Uploaded.to ஆகியவற்றிலிருந்து புரோகிராம்களை இறக்க உதவுகிறது. யுட்யூப் போன்ற தளத்திலிருந்தும் வீடியோ பைல்களை இறக்கிப் பதிந்து கொள்ள உதவுகிறது.

இந்த புரோகிராமினை http://sourceforge.net/projects/mudownloader/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துகையில் தொடக்கத்தில் சில சிரமங்கள் ஏற்படலாம். அடிப்படையில் இதன் இன்டர்பேஸ் இத்தாலிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனவே இதனை செட் செய்திடுகையில், Language என்ற பிரிவிற்குச் சென்று ஆங்கிலத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் புரோகிராம்களைப் பட்டியலிட்டு வரிசையில் வைத்து ஒவ்வொன்றாக டவுண்லோட் செய்திடும் வசதியும் இதில் உண்டு.


ப்ரவுசர் ட்ரிக்ஸ் அண்ட் டிப்ஸ்

நாம் பயன்படுத்தும் அனைத்து பிரவுசர்களும், மேம்போக்காகத் தெரிவதைக் காட்டிலும், கூடுதலாகவே பல வசதிகளை நமக்குத் தருவதாய் அமைந்துள்ளன. நீங்கள் பயர்பாக்ஸ் நண்பராகவோ, அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பக்தராகவோ, குரோம் பிரவுசரின் தீவிர ரசிகராகவோ இருக்கலாம். அனைத்து பிரவுசர்களும் இந்த கூடுதல் வசதிகளைத் தருவதாகவே அமைந்துள்ளன. இங்கு அதற்கான டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்து வது உங்கள் கைகளில்தான் இருக்கின்றன. இந்த டிப்ஸ்களில் அறிமுகப்படுத்தப்படும் பல ஆட் ஆன் புரோகிராம்களும் இலவசமாகவும், எளிதில் பயன்படுத்தும் தன்மை கொண்டதாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பயர்பாக்ஸ் ரசிகர்களுக்கு மட்டும்:



1.
ஜிமெயிலைச் சிறப்பாக்க: ஜிமெயில் பயன்பாட்டில் நமக்குச் சில கூடுதல் வசதிகளைத் தர Better Gmail2 என்னும் சிறிய தொகுப்பு கிடைக்கிறது. https://addons.mozilla.org/enUS/firefox/addon/6076/)

இதில் சில ஸ்கிரிப்ட்களும், ஆட் அன் தொகுப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. ஜிமெயில் பட்டியலில், உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், அந்த மெயில் ஹைலைட் செய்யப்படும். இதனால், நெருக்கமாக உள்ள அந்த பட்டியலில், உங்கள் கர்சர் எங்கு நிற்கிறது என்று தெளிவாகத் தெரியும். கூடுதலாக நீங்கள் இன்னும் படிக்காத மெயில்கள் எத்தனை என்ற கணக்கு காட்டப்படும். மெயிலுடன் இணைக்கப் பட்டுள்ள பைல்களின் பெயர்களும் காட்டப்படும். இதன் முன் தொகுப்பான் ஜிமெயில்1, குரோம் பிரவுசருக்காக வடிவமைக்கப்பட்டுத் தரப்பட்டது.


2.
படிவத்தில் உள்ள டெக்ஸ்ட்டைக் காப்பாற்ற: சில படிவங்களில் தகவல்களை நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகிறது. நிச்சயமாக நிரப்பியது அனைத்தும் நினைவில் இருக்காது. மீண்டும் சரியாக பழையபடி தர முடியுமா என்பது சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவ லேசரஸ் பயர்பாக்ஸ் ஆட் ஆன் (Lazarus Firefox addon) QøhUQÓx. https://addons.mozilla.org/enUS/firefox/addon/6984/) கிடைக்கிறது. /6984/)
இதே போல இன்னொரு ஆட் ஆன் தொகுப்பு ஒன்று நாம் டெக்ஸ்ட்டை இணையப் பக்கங்களிலிருந்து காப்பி செய்திடுகையில் உதவுகிறது. இதன் பெயர் Copy Plain Text ஆகும். இந்த ஆட் ஆன் நாம் காப்பி செய்திடுகையில், டெக்ஸ்ட்டுடன் வரும், தேவையற்ற பார்மட்டிங் வகைகளை நீக்கி, டெக்ஸ்ட் மட்டும் தருகிறது
அனைத்து பிரவுசர்களுக்கும்



எட்டு கீகளை அழுத்தாதே

இணைய தளம் ஒன்றின் முகவரிகளை அட்ரஸ் பாரில் அமைக்கையில், எட்டு கீகளை இனி அழுத்தத் தேவையில்லை. . "www." or ".com" ஆகிய கீகளை பெரும்பாலான இணைய முகவரிகளில் அமைக்கத் தேவையில்லை. அந்த தளத்தின் தனிப் பெயர் மட்டும் அமைத்தால் போதும். எடுத்துக்காட்டாக dinamalar என மட்டும் அமைத்துப் பின் கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். உங்களுடைய பிரவுசர் "www." மற்றும் ".com" ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளும். இதே போல மற்ற வற்றில் முடியும் தளங்களின் பெயர்களை அமைக்கவும் சுருக்கு வழிகள் உள்ளன. "www" and ".net" என அமைய ஷிப்ட் + என்டர் தட்டவும். அடுத்துதீதீதீச்ணஞீ “.ணிணூஞ்என அமைய கண்ட்ரோல்+ஷிப்ட்+ என்டர் தட்டவும். ஏதேனும் இன்னொரு இணைய தளத்திற்கான லிங்க்கினை, ஒரு இணையதளம் தருமானால், அதில் ஸ்குரோல் வீலினால் தட்டவும். உடன் அந்த தளம், இன்னொரு டேப்பில் திறக்கப்படும். பெரும்பாலான இணையப் பக்கங்களில் அச்சில் வரக்கூடிய பக்கம் எப்படி உள்ளது என்று காட்டவும், அச்சில் நல்ல முறையில் வரவும் http://www.printwhatyoulike.com/ ”” வழங்கப்படுகிறது. இதனை எளிதாகப் பெற http://www.printwhatyoulike.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று உங்களுக்குத் தேவையான பக்கங்களை அச்சில் எப்படி இருக்கும் என்று பார்த்து, அச்சிற்குத் தரவும்.



முழுப்பக்க ஸ்கிரீன் ஷாட்

இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கு என்ற ரோகிராம்களும் இணையத்தில் கிடைக்கின்றன. கூகுள் சென்று இவை இருக்கும் தளம் அறிந்து ண்லோட் செய்து பயன்படுத்தவும்



பயர்பாக்ஸ் டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்தாவிட்டாலும், சிலவற்றை அதிலிருந்து தான் பெற முடியும். ஏனென்றால், மைக்ரோசாப்ட் தான் உருவாக்கிய விண்டோஸில் இருந்து கொண்டு மற்ற பிரவுசர்களைப் பயன்படுத்துகிறாயா! இது வேண்டுமென்றால், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்குச் செல் எனச் சொல்கிறது. சில வேளைகளில், குறிப்பிட்ட இணைய தளம், அது உங்களின் தளமாகவே இருக்கலாம், எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் செயல்படுகிறது என நீங்கள் அறிய விரும்பலாம். அந்த வேளையில், பயர்பாக்ஸ் பிரவுசரிலிருந்து வெளியேறி, இன்டர்நெட் எக்ஸ்புளோரரைக் கிளிக் செய்து, பின் உங்கள் வேலையைத் தொடர வேண்டியதில்லை. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பிரவுசரிலேயே, ஒரு டேப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை வைத்துக் கொள்ளலாம். இந்த டேப்பில் கிளிக் செய்தால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விரிந்து, உங்கள் பயன்பாட்டிற்குக் காத்திருக்கும். இவை IE Tab for Firefox, IE tab for Chrome என அழைக்கப்படுகின்றன

நீங்கள் பயன்படுத்தும், ஒவ்வொரு பிரவுசரிலும், ஒவ்வொரு கம்ப்யூட்டரில் உள்ள பிரவுசரிலும் பல புக்மார்க்குகளை வைத்திருக்கிறீர்களா! இவை அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்க்க முடிவதில்லையா! உங்களுக்காகவே, எக்ஸ் மார்க்ஸ் (XMarks)என்ற ஒரு ஆட் ஆன் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்ஸ்டால் செய்துவிட்டால், அனைத்து பிரவுசர்களிலும் அல்லது நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் உள்ள புக்மார்க்குகளை, இது தேடி எடுத்து இணைத்துத் தந்துவிடும்.


தளத்தின் நம்பிக்கை தன்மை

இன்டர்நெட் தரும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எந்த தளத்தில் நம்மை ஏமாற்றும் வழிகள் உள்ளன என்று நம்மால் அறிய முடிவதில்லை. ஒரு தளத்தின் நம்பிக்கைத் தன்மையை நமக்குக் காட்டும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு Web of Trust ஆகும். இது இணைய தளங்களில் நீங்கள் மேற்கொள்ளும் சுற்றுலாவினைப் பாதுகாப்பானதாக மாற்றுகிறது. நீங்கள் செல்ல இருக்கும் தளம் எத்தனை பேர்களால் பார்க்கப்படுகிறது, இதனை உருவாக்கியவரின் நம்பகத்தன்மை, குழந்தைகள் பார்க்கும் தன்மையுடையதா என்ற தகவல்களைத் தருகிறது



குரோம் மற்றும் கூகுள் தொகுப்புகளுக்கு 

அவுட்லுக் தொகுப்பிலிருந்து ஜிமெயிலுக்கு மாறியவரா நீங்கள்? புதிதாக வந்துள்ள மெசேஜ்களை, அவுட்லுக் காட்டியது போல ஜிமெயில் காட்டவில்லை என்ற குறை உங்களுக்கு உள்ளதா? கூகுள் மெயில் செக்கர் ப்ளஸ் (Google Mail Checker Plus) இன்ஸ்டால் செய்து இந்த குறையை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள். இது நீங்கள் புதிய செய்தி பெறுகையில், ஒலி எழுப்பும். புதிய செய்திகளுக்கான சப்ஜெக்ட் வரியினைக் காட்டும். இந்த செய்தியில் ஏதேனும் மெயில் டு லிங்க் இருந்து, நீங்கள் அதில் கிளிக் செய்தால், உடன் புதிய விண்டோ ஒன்றைத் திறக்கும்.
உங்கள் கூகுள் காலண்டரை அடிக்கடி திறந்து பார்க்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? புதிய பக்கம் எதனையும் திறக்காமல், புதிய டேப் எதன் பக்கமும் செல்லாமல், காலண்டரைப் பார்க்க டே ஹைக்கர் (Day Hiker) என்னும் ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்



பிரவுசரிலேயே யுட்யூப் தேட

யுட்யூப் தளத்தில் ஏதேனும் தேட வேண்டும் என்றால், மீண்டும் நீங்கள் ஒருமுறை "www.youtube.com" என டைப் செய்து, அந்த தளம் சென்று தேட வேண்டியதில்லை. You Tube Search என்னும் ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து கொண்டால், உங்கள் பிரவுசர் விண்டோ விலிருந்தவாறே, தேடலை மேற்கொள்ளலாம்



வேகமாக வெளியேறுங்கள்

சில வேளைகளில் இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்திடுகையில் முகவரியை அமைத்து என்டர் தட்டியவுடன் பாதி தளம் இறங்கிய நிலையில் அப்படியே திரையில் காட்டப்படும் காட்சி உறைந்து போய் நிற்கும். காரணமும் நமக்குக் காட்டப்பட மாட்டாது. இந்த சிக்கலிலிருந்து விடுதலை பெற ஒரு சிறந்த வழி எஸ்கேப் கீயை அழுத்துவதுதான். அழுத்தியவுடன் தளம் இறங்குவது நிறுத்தப்படும். அதன்பின் நீங்கள் வேறு தளத்திற்கான முகவரியை அமைத்து அந்த தளம் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்குவதைப் பார்க்கலாம். அல்லது முதலில் இறங்க மறுத்த அதே தளத்தினை மீண்டும் காட்டுமாறு முயற்சிக்கலாம். இந்த எஸ்கேப் கீ இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் இந்த பணியை மேற்கொள்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் சிஸ்டம்.


கம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்

நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து வைத்து, அந்த ஸ்டிக்கை, உங்கள் கம்ப்யூட்டருக்கான சாவியாகப் பயன்படுத்தலாம். இதனை எப்படி செயல்படுத்துவது எனப் பார்க்கலாம். http://www.montpellier-informatique.com/predator/en/index.php என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பிரிடேட்டர் புரோகிராமின் ஸிப் பைலை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் இதனை விரித்து, உங்கள் சி ட்ரைவில் இதனைப் பதிந்து கொள்ளுங்கள். யு.எஸ்.பி. ட்ரைவில் இதனைப் பதிய வேண்டாம். இப்போது பிரிடேட்டர் பைலை இயக்குங்கள். உங்கள் யு.எஸ்.பி.போர்ட்டில், யு.எஸ்.பி. ஸ்டிக்கினை இன்ஸெர்ட் செய்திடும்படி உங்களைக் கம்ப்யூட்டர் கேட்டுக் கொள்ளும். பின் இதற்கான பாஸ்வேர்ட் ஒன்றை நீங்கள் அமைக்க வேண்டும். அவ்வளவுதான்.

இனி விண்டோஸ் ஸ்டார்ட் செய்கையில், இந்த யு.எஸ்.பி. ஸ்டிக்கை அதன் போர்ட்டில் செருகி வைக்கவும். விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும்போது பிரிடேட்டரை இயக்கவும். பின், எப்போதெல்லாம், கம்ப்யூட்டரை லாக் செய்து செல்ல வேண்டும் என விரும்புகிறீர்களோ, அப்போது, இந்த யு.எஸ்.பி.ஸ்டிக்கினை எடுத்துச் செல்லலாம். எடுத்தவுடன் கீ போர்ட் மற்றும் மவுஸ் லாக் செய்யப்பட்டு, திரை கருப்பாக மாறிவிடும். மீண்டும் இதனை அதன் இடத்தில் செருகிப் பயன்படுத்தினால் மட்டுமே, கம்ப்யூட்டர் இயங்கும்

கம்ப்யூட்டரை லாக் ஆப் செய்து செல்லலாமே என நாம் நினைக்கலாம். விண்டோஸ் கீ + எல் கீயை அழுத்தினால், லாக் செய்திடலாமே என்ற எண்ணம் ஓடலாம். இதனையும் பயன்படுத்தலாம். இங்கு நீங்கள் மீண்டும் இயக்க பாஸ்வேர்டினை டைப் செய்திட வேண்டும். இந்த பாஸ்வேர்ட் மற்றவர்களுக்குத் தெரிந்துவிட்டால், தொல்லைதான். ஆனால் பிரிடேட்டர் ஒரு சாவி போலவே செயல்படுகிறது. யு.எஸ்.பி. ஸ்டிக்கினை கம்ப்யூட்டர் வீட்டின் சாவி போலப் பயன்படுத்தலாம்.


No comments:

Post a Comment