Thursday, March 7, 2019

. கம்ப்யூட்டர் டிப்ஸ்...-6


. கம்ப்யூட்டர் டிப்ஸ்...-6



கூகுள் தேடல் 

கூகுளில் தேடும்போது, அந்த தேடும் சொல்லுக்கு பொருள் அறிய விரும்பினால் define: என்ற சொல்லை, நீங்கள் தேடும் சொல்லுக்குப் பின் இணைத்துக் கொடுத்தால், பல அகராதிகளிலிருந்து அந்த சொல்லுக்குப் பொருள் தரப்படும். ஆனால் இப்போது, அண்மைக் காலமாக, ஏதேனும் ஒரு சொல் குறித்த இணைய தளங்களைத் தேடினால், முதல் பதிவாக, அந்த சொல்லின் பொருள் தரப்படுகிறது. அந்த சொல் எத்தனை தொகுதிகள் கொண்டது எனக் காட்டப்பட்டு, பொருளும் தரப்படுகிறது.

அதனை அடுத்து, அந்த சொல் சார்ந்த தளங்கள் காட்டப்படுகின்றன. சொல்லின் பொருள் நம் கண்களிலிருந்து தவற விடாத வகையில், சிறப்பாகக் காட்டப்படுகிறது. இது நமக்குப் பலவகைகளில் உதவுகிறது. நாம் தேடுவது வேறு ஒரு வேலைக்கு என்றாலும், அதன் பொருள் கிடைப்பதனால், மேலும் தகவல்களை அறிய முடிகிறது



F1 Button அழுத்த வேண்டாம் !

ஏதேனும் இணையதளம் ஒன்றினைப் பார்க்கையில், அதில் F1 கீயை அழுத்தவும் என்று செய்தி தரப்பட்டால்; உடனே அதனை அழுத்த வேண்டாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை வழங்கியுள்ளது. இதன் மூலம் பல இணைய தளங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரை மோசமான தளங்களுக்கு இழுத்துச் சென்று, அவர்கள் கம்ப்யூட்டரில் பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களைப் பதிக்கின்றன. இதனால் தங்கள் கம்ப்யூட்டர்களில் உள்ள செக்யூரிட்டி சிஸ்டம் செட்டிங்குகளில், அவற்றை “high” என்ற அளவில் அமைக்குமாறும் மைக்ரோசாப்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் ActiveX Controls மற்றும் Active Scripting ஆகியவற்றைத் தடை செய்திட முடியும். இந்த மால்வேர் பெரும்பாலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துவோரையே இலக்காகக் கொண்டு இயங்கு வதாகவும் மைக்ரோசாப்ட் எச்சத்துள்ளது. விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் சர்வர் 2003 ஆகியவற்றைப் பயன்படுத்து வோரே இதற்கு இலக்காகுகின்றனர்.

இந்த மால்வேர் பாதித்த கம்ப்யூட்டரில், இணைய தளங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் எப்1 அழுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அழுத்தியவுடன் கம்ப்யூட்டர் ஹைஜாக் செய்யப்பட்டு, மால்வேர் புரோகிராம் பதியப்படுகிறது. இதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தீர்வு ஒன்றை வழங்கியுள்ளது. லிங்க் தரப்பட்டாலோ, அல்லது பாப் அப் விண்டோ வந்தாலோ, உடனே CTRL + ALT + DEL கீகளை அழுத்தவும். உடனே கிடைக்கும் கட்டத்தில் Internet Explorer task என்ற பிரிவு அல்லது உங்கள் பிரவுசர் பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெலீட் கீயினை அழுத்தவும்.பின் மீண்டும் பிரவுசரை இயக்கிப் பார்த்துக் கொள்ளலாம்.



கிளிப் பாக்ஸில் அடுக்கலாம்

விண்டோஸ் தரும் கிளிப் போர்டுக்கு, ஒருமுறை ஒரே ஒரு டெக்ஸ்ட் அல்லது படம் மட்டுமே அனுப்ப முடியும். அடுத்த என்ட்ரி அமைக்கையில், முதலில் உள்ளது நீக்கப்படும். எனவே நிறைய தனித்தனி டெக்ஸ்ட் அல்லது படத்தினை காப்பி மற்றும் பேஸ்ட் செய்திட வேண்டுமென்றால், தனித்தனியே ஒவ்வொரு முறையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் குறையை நீக்குகிறது கிளிப் பாக்ஸ் என்னும் புரோகிராம். இது கிளிப் போர்டின் ஒரு விரிவாக்கம் என்று கூடச் சொல்லலாம். இதில் 2,000க்கும் மேற்பட்ட விஷயங்களை காப்பி செய்து வைத்து, தேவைப்படும்போது தேவையான விஷயங்களை மட்டும் எடுத்து பேஸ்ட் செய்திடலாம். இதில் ஒரு சின்ன சிக்கல் உள்ளது. இந்த கிளிப் பாக்ஸில் டெக்ஸ்ட் என்ட்ரிகள் மட்டுமே காப்பி செய்து வைக்க முடியும். படங்கள் மற்றும் பிற விஷயங்களை இது ஒதுக்கிவிடுகிறது.

இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த அப்ளிகேஷனை இயக்கியவுடனேயே செயல்படத் தொடங்குகிறது. இந்த சாப்ட்வேர் சிஸ்டம் ட்ரேயில் ஒரு ஐகானை அமைக்கிறது. இதனைக் கிளிக் செய்தால், கிளிப் போர்டில் உள்ள அனைத்து காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட்களைக் காட்டுகிறது. இதில் காப்பி செய்யப்பட்டுள்ள டெக்ஸ்ட்டை, காப்பி செய்திட வேண்டும் எனில் இரண்டு வழிகள் உள்ளன. அந்த டெக்ஸ்ட் இருக்கும் இடம் சென்று டபுள் கிளிக் செய்திடலாம். அல்லது கண்ட்ரோல் + சி அழுத்தலாம். வேறு ஷார்ட் கட் கீகள் எதுவும் இதில் செயல்படவில்லை என்பது சிறிய ஏமாற்றமே.

இதில் ரைட் கிளிக் செய்தால், பல ஆப்ஷன்கள் அடங்கிய மெனு ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு டெக்ஸ்ட்டும் எப்போது கிளிப் பாக்ஸுக்குக் கொண்டு செல்லப்பட்டது என நாள் மற்றும் நேரத்தினைத் தானாக அமைக்கும் வசதி உள்ளது.

இந்த கிளிப் பாக்ஸ் விண்டோவினை எப்போதும் திறந்து வைத்து, வேகமாக டெக்ஸ்ட்களை எடுக்கலாம்.
கிளிப் பாக்ஸ் ஒரு ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர். இதனை இது போன்ற பல அப்ளிகேஷன்களைத் தரும் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இதற்கான முகவரி: http://sourceforge.net/ projects/clipbox/ ஆகும்.




PC speed

கணினியின் வேகம் அதிகரிக்க டிப்ஸ் 

Start - Run - msconfig என அடித்து எண்டர் கொடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Startup டேப்பை திறந்து அதில் இருக்கும் எல்லாவற்றையும் Disable செய்து விடவும் வேண்டுமானால் Anti Virus மென்பொருள் மட்டும் Enable செய்துகொள்ளவும் இதனால் கணினியின் Boot நேரம் குறையும்.

இனி வாரம் ஒரு முறையாவது Start - Run - temp என அடித்து எண்டர் கொடுத்து அதில் இருக்கும் பைல்களை அழித்து விடவும், மீண்டும் Start - Run - %temp% என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும் , அடுத்ததாக Start - Run - prefetch என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும்.

இன்னும் ஒரு சிறிய தகவல்: நம் தேவைக்காக இனையத்தில் கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள்களை தரவிரக்கி நம் கணினியில் பதிந்து வைத்திருப்போம் அப்படி பதிந்த புரோக்கிராம்கள் மீண்டும் அவசியமில்லை என்றால் மறக்காமல் அன் இன்ஸ்டால் செய்து விடவும் அப்படி உள்ள புரோகிராம்களை முழுவதுமாக நீக்க அன் இன்ஸ்டாலர் உபயோகிக்கவும்.


டீபிராக்மெண்ட் இது கணினியை டீபிராக்மெண்ட் செய்வதற்கானது இது நமது கணினியில் இந்த வசதி இருக்கிறது ஆனால் நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும் இந்த டீபிராக்மெண்ட் எதற்காக என நினைக்கும் நண்பர்களுக்காக சின்ன தகவல் நாம் கணினியில் பதியும் தகவல்கள் எல்லாம் ஒரே இடத்தில் பதிந்து வைக்கபடுவதில்லை ஒரு பைல் பல்வேறு இடங்களில் பிரித்து பதியப்படும் அதாவது நமது வண்தட்டு பல்வேறு கிளஸ்டர்களாக பிரிக்கப்பட்டிருக்கும் நாம் டீபிராக்மெண்ட் செய்கையில் பல இடங்களில் இருக்கும் பைல்களை எடுப்பதற்கு வசதியாக ஒருங்கினைக்கும் வேலையை தான் இந்த டீபிராக்மெண்ட் செய்கிறது.

சி சி கிளீனர் இது கணினியில் இருக்கும் தேவையில்லாத ரிஜிஸ்டரியை அழகாக கிளீன் செய்து விடும் உதாரணமாக நீங்கள் உங்கள் கணினியில் ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்து மீண்டும் அன் இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள் ஆனால் நீங்கள் அன் இன்ஸ்டால் செய்த புரோகிராமை ரிஜிஸ்டரியில் தேடிப்பார்த்தால் இருக்கும் அதை நீக்குவதற்காகத்தான் இந்த மென்பொருள் உங்களுக்கு தெரியும் கணினியின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த ரிஜிஸ்டரி வழிதான் மேற்கொள்ள படுகிறது நாமாக மாற்றங்கள் செய்ய நினைத்து தவறு நேர்ந்தால் கணினியின் இயக்கமே நின்று விடும் ஆனால் சிசி கிளீனர் உபயோகிக்கையில் அந்த பிரச்சினை வராது மேலும் சில நேரங்களில் Recycle Bin ல் சில பைல்களை அழிக்க முடியாமல் இருக்கும் அதையும் இந்த சிசி கிளீனர் கொண்டு அழித்து விடலாம்.



Blocked Web

தடைசெய்யப்பட்ட தளத்தில் இருந்து தகவல்களைப் பெறும் வழி

தடை செய்யப்பட்ட தள தகவல்களை எப்படி தெரிந்துகொள்வது? சில இடங்களில் கணினி தகவல் சம்பந்தப்பட்ட தளங்களை கூட இண்டர்நெட் சரிவீஸ் புரைவைடர்கள் ஏதாவது ஒரு காரணத்துக்காக தடை செய்திருப்பார்கள் அந்த நேரத்தில் புராக்ஸி சர்வரும் கூட உதவாது. அப்படியான நிலை ஏற்படும்போது பின்வரும் வழியினை பின்பற்றவும்

அதற்கு உங்களிடம் அவசியம் ஒரு மின்னஞ்சல் முகவரி இருக்கவேண்டும். உதாரணத்திற்கு ஜிமெயிலை எடுத்துக்கொள்வோம். உங்கள் ஜிமெயில் மின்னஞ்சலை திறந்து அனுப்ப வேண்டிய முகவரியில் www@web2mail.com என்பதை எழுதவும். இனி சப்ஜெகட் என்பதில் தடை செய்யப்பட்ட இனையதளத்தின் முகவரியை கொடுக்கவும். இனி வேறு ஒன்றும் செய்யவேண்டாம் அப்படியே மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள் குறைந்த பட்சம் நான்கு மணி நேரத்திற்குள் தடை செய்ப்பட்ட தளத்தில் உள்ள தகவல்கள் உங்கள் இன்பாக்ஸில் இருக்கும் சில நேரம் நேரம் கூடுதல் ஆகலாம் ஆனாலும் தகவல் எப்படியும் வந்துவிடும்

இதில் ஒரு பிரச்சினையும் இருக்கிறது. அதாவது நீங்கள் பார்க்க விரும்பும் தளத்தில் வீடியோ அல்லது இமேஜ்கள் இருக்குமானால் அவை உங்கள் இன்பாக்ஸிற்கு வராது டெக்ஸ்ட்டுகள் மட்டுமே வரும்




Kernel

கம்ப்யூட்டர் இயங்குவதில் கெர்னல் (kernel) என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இப்போது வரும் வைரஸ் பிரச்னைகளிலும் இது குறித்து எழுதப்படுகிறது. இது எதனைக் குறிக்கிறது

பலவகையான கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் கெர்னல் என்பது மிக மிக முக்கியமான ஒரு உறுப்பாகும். இது ஒரு கரு போன்றது. ஹார்ட்வேர் அளவில் நடக்கும் டேட்டா கையாளுதல் செயல்பாட்டிற்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பின் செயல்பாட்டிற்கும் இடையே ஒரு பாலமாக, இது இயங்கும். சிஸ்டத்தின் திறன்களை, ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் செயல்பாடு களுக்கெனத் திறமையாக நிர்வாகம் செய்வது கெர்னல் ஒன்றின் பொறுப்பு. சிஸ்டத்தின் திறன் என்பது சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட், ராம் நினைவகம், கீ போர்டு, மானிட்டர்,டிஸ்க் ட்ரைவ் மற்றும் பிரிண்டர் போன்ற உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகியவை ஆகும். இவற்றிலிருந்து கிடைக்கும் வேண்டுகோள் கட்டளைகளை, அவற்றின் நிலை அறிந்து, பெற்று இயக்குவது இந்த கெர்னலின் பொறுப்பு.

விண்டோஸ் இயக்கத்தில் இது எப்படி இடம் பெற்றுள்ளது என்றும் பார்க்கலாம். 1985ல், அப்போதிருந்த எம்.எஸ். டாஸ் இயக்கத்தின் ஆட் ஆன் தொகுப்பாகத்தான் விண்டோஸ் வெளியானது. விண்டோஸ் தன் இயக்கத்திற்கு, டாஸ் இயக்கத்தின் மீது சார்ந்து இருந்ததால், விண்டோஸ் 95 இயக்கத்திற்கு முன் வந்தவை, ஆப்பரேட்டிங் சுற்றுவட்டம் (என்விரான்மென்ட்) (கவனிக்க: ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லை) என அழைக்கப்பட்டது. இப்படியே விண்டோஸ் இயக்கம் 1980 முதல் 2000 வரை இருந்தது. பின்னர் படிப்படியாக கெர்னலிலேயே பயன்பாட்டு செயல்பாடுகளும் தரப்பட்டு, முழுமையான கெர்னல் இயக்கத்தில் விண்டோஸ் பயனாளர் பயன்பாடு அமைந்தது.

அண்மைக் காலத்தில் இந்த கெர்னல் செயல்பாட்டில், விண்டோஸ் 7 உட்பட, அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிழை இருப்பதாக அறியப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அவற்றைத் தீர்க்கும் பேட்ச் பைல்களைத் தருவதில் ஈடுபட்டுள்ளது.


No comments:

Post a Comment