Tuesday, October 29, 2019

இராஜராஜனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தை சார்ந்தவர்

இராஜராஜனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தை சார்ந்தவர்


தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரவலாக வாழ்ந்து வருகின்றனர். தென்தமிழகத்தில் அகமுடையார்களை முக்குலத்தோர் பிரிவுகளில் ஒன்றாகவும் கருதி வருகின்றனர். வட தமிழகத்தை பொறுத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்டப் பெயர்களையும் வைத்து பலவாறு தமிழகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றனர்.
தென் தமிழகத்தில் அகமுடையார்களை சேர்வை என்றும் மேலும் முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்திய தமிழகத்திலும் அறியபடுகின்றனர். அகமுடையருக்கு என்னிறைந்த விருது பெயர்கள் உண்டு:

உடையார், முதலி, மலையான் ,வானவன் ,வானவராயன், வல்லவராயன், பனந்த்தாரன், பொறையான், மலையமான் ,தலைவன், படையாட்சி ,மனியக்காரான், பூமியன், கோளன், வர்மா, நாகன், பாண்டியன், கொங்கன், அம்பலம், சேர்வை, நாட்டான்மை, தொண்டைமான், தேவர் ,என்பது போல பல பட்டங்கள கான படுகின்றனர். அகமுடையாரது பின்னனி பெரும்பாலும் சேர மன்னரையே பின்பற்றியது. இதை பதிற்றுபத்து போன்ற சேரர் புகழ்பாடும் இலக்கியங்ககளும் மெய்பிக்கின்றன.
கல்வெட்டுகளில் அகமுடையாரை பற்றிய கல்வெட்டு சின்னமனூர் கல்வெட்டில்,
“பிள்ளை குலசேகர மாவலி வானாதிராய அகம்படிய முதலி சிங்க தேவன் ” என்று குலசேகர மாவலி வானதிராயரை பற்றிகுறிப்பிடுகிறது.

யார் இந்த வானாதிராயர்?

வானர் என்ற மன்னர்குலத்தோர் புகழ பெற்ற சேர மரபினர் ஆவார். மூவேந்தருடனும் மன உறவு பூண்டவர்.கரிகால சோழனின் மனைவியும் வானர் குல பென்மனி, ராஜ ராஜனின் அக்காவின் கனவருமான் வந்திய தேவர் இந்த வானதிராயர் குலத்தாவர்.
சேரனுக்கு வானவன்,மலையன்,வானவரம்பன் என்ற பெயர்கள் உண்டு. வானவன் (அ) வானவரம்பன் என்ற சொல்லுக்கு வானை முட்டும் மலையினை உடையவன் என்று பொருள்.
சேரன்- மலை நாட்டிற்க்கு சிகரத்தை போன்றவன். சிகரன் எனற வார்த்தை மலை நாட்டின் தலைவன் என்று பொருள். இதிலிருந்து அகமுடையார் பிறப்பால் சேரர்கள் என்று புரியும்.
வானர்கள் மகாபலி சக்கரவர்த்தியின் இனத்தை சார்ந்தவர்கள் என்று கல்வெட்டுக்கள் கூறுகிறது. மகாபலி பிற்பிறவியில் இந்திரன் ஆவார். இந்தியப் புராணங்களில் முக்கியமான ஓர் வேந்தன் மகாபலி ஆவான். சேர நாட்டில் இருந்து மகாபலி மன்னன் துளு மொழி வழங்கிய கர்நாடகக் கடற்கரைப் பகுதி வரை ஆண்டதாகவும்க கூறப்ப்டுகறது.
இவர் சேர வம்சத்தை சார்ந்ததாகவும் அதனால் தான் இன்றும் மலையாள தேசத்தில் கொண்டாடுகின்றனர்.
இவரை அசுர மன்னனாக திரித்து கூறியது சேரர்கள் மேல் படை எடுத்த திபேத்திய பிராமனர்களால்(நம்பூதிரிகள்) புனையபட்ட பொய் கட்டு கதையே ஆகும்.

வாமன அவதாரம் எடுத்து, விஷ்ணு இம்மன்னனை பாதாள உலகிற்கு அனுப்பியதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன. மகாபலி பாதாள உலகத்துக்கு அனுப்பப்பட்ட நாளாகிய ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர். அன்றைக்கு ஒருநாள் மட்டும் மகாபலி தமது நாட்டைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் பாதாள உலகம் சென்றுவிடுவதாக கருதப்படுகிறது. இந்த ஓண நாளை ‘வாமன ஜெயந்தி’ என்று இந்து மதப் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
சிவகங்கை சீமையில் உள்ள மானாமதுரை(வானாதிராய மதுரை),இராசகம்பீரம்(வானராய கம்பீர கோட்டை) முதலிய இடத்தில் வானாதிராய இனமாக ராஜ குல அகமுடையரே அதிகமாக வாழ்கிறனர். சின்னமனூர் அகமுடைய பனந்தாரன்(வானாதிராயன்),பந்தளம்(அகமுடைய பனந்தார ராம வர்மா)[சுவாமி ஐய்யப்பன் வழி வந்த மன்னர் போன்றவர்கள் பனந்தார வம்சத்து அகமுடையரே.இருவருக்கும் இன்னும் திருமன உறவு உண்டு.கொங்கு நாட்டில் உள்ள சமத்தூர் ஜமீந்தார் வானவராயர்,வல்லவராயர்(எஜமான் திரைபடத்தில் வரும் கதாபாத்திரங்கள்) யாவரும் அகமுடைய குல கவுண்டர்கள் ஆகும். வானாதிராய சேர அரச வம்சமானதால் தான் அகமுடையார் தம்மை ”ராஜகுல அகமுடையார்’ என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.
இவர்களுக்குஆதியிலிருந்துசேரன்,மலையன்,வானவராயன்,மலையமான்,மலைராயன்,வானகோவரயன்,மலைராயன்,குறு வழுதி, மகதை நாடாழ்வான்,செம்பை நாயகன்,பொன் தின்னன் முதலிய பல பெயர்களால் அழைக்கபட்டனர்.

மலையமான்:

மலையமான் திருமுடிக்காரி,தெய்வீகன் என்ற தேர்வீகன்,சோழியவேனாதி திருக்கண்ணன்,மலையமன்னர் நரசிங்க முனையரையர்,நத்தமன்னர் மெய்ப்பொருள் நாயனார்,சுருதிமன்னர் குலசேகரன்,மலையன்,தேர்வண் மலையன்,வேள் பாரி, கிளியூர் மலையமான் பெரியுடையானான இராஜராஜச் சேதிராயன்,கிளியூர் மலையமான் ஆகாரசூரனான இராஜகம்பீரச் சேதிராயன்,பாண்டியராய திரணி சுருதிமான்,குட்டன் வனராயன் திரணி சுருதிமான்,நுணாங்குறிச்சி சுருதிமான் அணஞ்சா ஆனைவிடப்பாடி,ஊற்றத்தூருடைய சுருதிமான் சனனாதர் அரைய தேவனான வாண விச்சாதிர நாடாழ்வான்.
போன்ற எண்ணற்ற வேளிர்களையும்,அரசர்களையும் கொண்ட அரச குடும்பமே பார்க்கவகுலம். வல்வில் ஓரியை போரில் கொன்றவர் மலையமான் திருமுடிக்காரி. ஓரி அதியமான் குலமாக கூறப்பட்டாலும் அதியமான்களும் மலையமான் பட்டத்துடனேயே ஆண்டுள்ளனர். அரசர்களாகவும்,வேளிர்களாகவும் இருந்த காலத்தில்முனையரையர்,மலையமான்,கொங்கராயர்,சேதிராயன்,மிலாடுடையார்,மலாடுடையார்,நத்தமான்,சுருதிமான்,உடையான், மலையமான்,சேதிய ராயன்,வன்னிய நாயகன்,பாண்டியராயர், கோவலராயர்,வாணகோவரையன்,சற்றுக்குடாதான்,காடவராயன்,(காடவர்களை ஆண்டவன்)பல்லவராயர்,அரைய தேவன்,நாடாழ்வான் போன்ற பட்டங்களுடன் ஆண்டு வந்தவர்கள்.
மலையமான்,நத்தமான்,சுருதிமான்,இம்மூவரும் அரசன் என்று பொருள் படும் உடையார் என்ற பொதுப்பட்டம் கொண்டவர்கள்.(சுருதிமான்)மூப்பனார் என்ற பட்டம் குல முதல்வர் (HEAD MAN)கத்திரியர்,கத்திக்காரர் என்ற படை பயிற்றுனர் என்ற அர்த்தத்தையும்,நயினார்,என்றபட்டம் சமண மதத்தைத்தழுவியவர்கள் அல்லது நாயன்மார் (மெய்ப்பொருள் மன்னர்)என்ற அர்த்தத்தையும் கொண்டது.உடையார் என்பதின் உட்பிரிவு பட்டங்களே மேற்காண்பவர்கள்.
(கன்னட,தெலுங்கு பேசும் உடையார்கள் என  உடையார் பட்டம் கொண்டு பலர் இருப்பினும்,பார்க்கவ குலத்தாருக்கு ஆதியிலிருந்தே  உடையார் பட்டம் மலைநாட்டு  அரசன் என்ற பொருளில் மலாடுடையார் என்ற பொருளில் வந்துள்ளது.மேற்கண்டோருக்கும் பார்கவ குலத்தாரோடு எத்தொடர்பும் கிடையாது. அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.

அகமுடையாரும் மலையமானும் ஒரே சேர வம்ச வழியினர்:

அகமுடையார் தம்மை ராஜ குல அகமுடையர் என்றும் தம்மை மகாபலி வம்ச வழியினர் எனவும் கூறுகன்றனர். மலையமான் இனத்தவர்கள் தம்மை மாபலி வம்சத்தவர் என்றும் மகாபலியின் குருவான சுக்ராச்சார்யரின்(பார்க்கவன்) பெயரால் பார்க்கவ குலத்தவர்கள் என்று கூறுகன்றனர்.
இதற்க்கு அவர்கள் கூறும் காரனம்,
அதே போல பிருகு வம்ச பார்க்கவராகிய சுக்கிராச்சார்யரை குல குருவாக கொண்ட(மகாபலி)சேர மன்னரின் வழிவந்த மலையமான் குலத்தவரான இவர்களும் சத்திரிய மரபுப்படி பார்க்கவ கோத்திரமாக கூறிக்கொள்கின்றனர்.
இதை மெய்பிக்கும் வித்மாக பார்க்கவகுலத்தவர்கள் அகமுடையாராக வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது, பார்கவ குலத்தார் வானவன்,சேரன்,மலையன் என்றும் குடிப்பெயருடைய மலையமான்களின் நேரடி வம்சத்தாராகவும் பாரி மற்றும் மூவேந்தரின் பெண்ணடி வாரிசாகவும் உள்ள குடும்பத்தினர்கள். காளியை குலதெய்வமாக கொண்ட போர் மறவர் குலமான இவர்கள் சோழர்களுக்கு அநேக வெற்றிகளைப்பெற்றுத்தந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
சோழனது படை பலமாக விளங்கிய போர்க்குடிகளில்  மலையமான் இனம் முதன்மையானது மன்னர்காலத்திற்கு பின்னர் போர்க்குடியினர் அனைவரும் விவசாயத்தில் ஈடுபட்டனர் என்னும் காலமாற்றத்திற்கு ஏற்ப இவர்களும் விவசாய குடிகளானார்கள்.குறுநில மன்னர்கள், வேளிர்கள்,போர் மறவர்கள் ஆகிய இவ்வினத்தார் ஜமீன்களாகவும்,பண்ணையார்களாகவும் மாறினர். வட தமிழகத்தில் மன்னர் ஆட்சி முடிவுற்ற வேளையில் ஊர்க்காவலையும்,போரையும்தவிர வேறு தொழில் அறியாத காரணத்தால்,அப்போது மன்னராட்சி நடை பெற்ற திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு  பார்கவ குல சுருதிமான்களான உடையார் குல மூப்பனார்கள் கத்திக்கார படைவீரர்களாக(கத்திரியர்கள்) அகமுடையாராக பணி புரிய சென்றனர்.அவ்வாறு சென்ற பார்கவ குல சுருதிமான்களின் வாரிசுகள் இன்றைக்கும் திருநெல்வேலி,கன்னியாகுமரி,ராம்நாடு,மதுரை போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.
அவர்களை இன்றைக்கும் அவ்விடங்களில் கத்திக்கார மூப்பனார்கள் என்று பட்டமிட்டு அழைக்கப்படுவதைக்காணலாம்.மூப்பனார்கள் பதினாறாம் நூற்றாண்டு வரை சோழ நாட்டின் அகமுடைய மறவர்களாக,தளபதிகளாக,குறுநில மன்னர்களாக இருந்துள்ளார்கள் என்பதை சுருதிமான்களைப்பற்றிய கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.

ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தவரே

: பாண்டியபுரம் என்ற ஊரில் ஆண்டிமலை என்ற இடத்தில் உள்ள பாறையில் கி.பி.953 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட கல்வெட்டில் உள்ள செய்தி, “பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்”என்பதாக அமைகிறது,பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்கிறது செய்தி.இவரது மகளான வானவன் மாதேவி என்பவர் தான் தஞ்சையை ஆண்ட சுந்தர சோழனின் மனைவி,ராஜராஜ சோழனின் தாயார். பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு அகமுடையார்(மலையமான்) மட்டுமே.
“முத்தமிழ்க் கபிலன் மூரி வெண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப் பெண்ணை மலையர்க்கு உதவி” –எனத்தொடங்கும் இராசராச சோழன் கல்வெட்டும் கூறும் பாரி வம்சமாக அறியப்படுபவர்கள் பார்கவ குல சத்திரியர்கள் மட்டுமே..
சுந்தர சோழன் இறந்தவுடன் அவரோடு சேர்ந்து உடன்கட்டை ஏறியவர் பார்கவ குல மலையமானின் மகளான வானவன் மாதேவி.க்ஷத்ரியப்பெண்கள் மட்டுமே உடன் கட்டை ஏறுதல் வழக்கம்.இன்றைக்கும் நத்தமான்,சுருதிமான்,மலையமான் பரம்பரையினர் பார்க்கவ குல க்ஷத்ரியர் என்று அழைக்கப்படுகின்றனர்.சோழர்களில் சுந்தர சோழனுக்கும் இரண்டாம் ராஜராஜனுக்கும்மலையமான் மகள் அவனிமுழுதுடையாள்)பெண் கொடுத்த இவர்கள் மூவேந்தரோடும்,வேளிர்களோடு மண உறவு கொண்டுள்ளனர்.
பார்க்கவ குல க்ஷத்ரியர்(மலையமான்) என்பரும் அகமுடையாரும் ஒன்றே. எனவே ராஜராஜ சோழனின் தாயார் அகமுடையார்(மலையமான்) இனத்தவரே
நன்றி : செம்பியன் மறவன்

இரும்புதலை அகமுடையார் பெயர் காரணம்.

இரும்புதலை அகமுடையார்


சேர நாடு சிதைந்துபோது நாட்டில் ஏற்பட்ட குழப்பம் மக்கள் விரக்தியில் நாட்டை விட்டு வெளியேறி விரும்பிய பகுதியை அடைந்தனர் அப்படி காஞ்சிபுரம் (வேங்கடம் ) வாழ்ந்த அகமுடையாரில் ஒரு பகுதியினர் தெற்கே நகர்ந்தனர் அவர்கள் அடைந்த இடம் தஞ்சை வந்து கோட்டைகளை கைப்பற்றினர் அதன் முதல் தளம் தம்பிகோட்டை, மற்றொரு குழுவினர் கோவில்வெண்ணி க்கு அருகில் இரும்பு தலை கைப்பற்றினர் ; இவர்களுக்கு இரும்புதலை அகமுடையார் என்று பெயர் பெற்றனர்..

அகமுடையார் வரலாற்று சுருக்கம்

அகமுடையார் வரலாற்று சுருக்கம்


அகம் + உடையார் = அகமுடையார்

அகமுடையார் என்றால் அகத்திற்கு தேவையான அறிவும் - வீரமும் இயல்பாக உடையவர் என்று பொருள். மேலும் அகம்படியர் என்பதற்கு எதிரிகளை படிய வைக்கும் திறனை அகத்தில் கொண்டவர் என்றும் பொருளும் உண்டு. பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் முக்குலத்தோர் சமுதாயத்தில் ஒன்றாகவே அகமுடையார் குலம் இனம்காணப்படுகிறது. அகமுடையார் குலத்தில் சேர்வை , தேவர், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட இந்த நான்கு பட்டங்களே பெரும்பான்மையான காணமுடிகிறது.

அகமுடையார்களில் "சேர்வை" என்றால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட குழுவினர் எனப்படும். பொதுவாக மன்னராட்சி காலங்களில் ஒவ்வொரு படைப்பிரிவின் தளபதிகளும் சேர்வை என்றே அழைக்கப்பட்டனர். அதுவே, காலப்போக்கில் சேர்வை என்று பட்டமாக மருவி இன்று அடையாளப்படுகிறது. மேலும், சேர்வை என்றால் அக்குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் என்று பொருள் படும். அரசுக்கு அமைச்சரவை சார்ந்த அனைத்துவிதமான சேவை செய்தவர்களை சேர்வைக்காரர் என்றும் அழைத்தனர். மாமன்னர் மருது பாண்டியர்களின் வழிவந்த அகமுடையார் குலத்தினர், ”ராஜகுல அகமுடையார்” என்று இன்று அடையாளப்படுகின்றனர்.

அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்களுக்கு தேவர் பட்டமே. தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலபிரிவை சார்ந்த்துள்ளனர். தமிழக வரலாற்று ஆவணங்களின் வாயிலாக முற்கால சோழர்கள் அனைவருமே அகமுடையார் குலத்தை சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. கல்லணையை கட்டிய கரிகால சோழனும் ”இரும்புத்தலை அகமுடையார்” குல பிரிவை சார்ந்தவரே. இதை தவிர்த்து, ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” என்ற பிரிவும் இன்றளவும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்களுக்கு உண்டு.

அகமுடையார்களில் பொதுவாக "பிள்ளை" பட்டம் என்பது நிலக்கிழார்களையே குறிக்கிறது. ”கள்ளர் மறவர் கணத்ததோர் அகமுடையார் மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினாரே” என்ற பாடல் வாயிலாக, போர்த்தொழிற்கு அடுத்த கட்ட நகர்வான வேளாண்மை தொழிலில் ஈடுபட ஆரம்பித்து, அதிலேயே நில நீட்சிகளோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் ”பிள்ளை” என்ற பட்டத்தோடு அறியப்பட்டனர்.

அகமுடையார்களில் "முதலியார்" என்ற பட்டம் உடையவர்கள் வட தமிழகத்தில் பெரும்பான்மையாக செருமி வாழ்கின்றனர். முதலியார் என்பதும் போர்ப்படை தளபதிகளையே குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமைத்தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. செங்குந்தர் சாதியினருக்கும் முதலியார் பட்டமிருப்பதால் ஒருசிலருக்கு குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது முதலியார் என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார் களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது.


சுமார் ஒன்றரை கோடி பேருக்கும் மேற்பட்ட மக்கள்[சான்று தேவை] தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளம் உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பலவேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். மேலும் இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலானோர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர்.

அகமுடையார்

அகமுடையார்


அகமுடையார் (Agamudayar) (அகம்படியார் மற்றும் அகமுடையான் எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தென்னிந்தியாவில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர்மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர்.
பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.[சான்று தேவை] அகமுடையார் குலத்தில் சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட பட்டங்களே பெரும்பான்மையாக கொண்டுள்ளனர்.
அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் கொண்டுள்ளனர். குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்கள் தேவர் பட்டமே கொண்டுள்ளனர். தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலப்பிரிவை சார்ந்துள்ளனர் மற்றும், ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” போன்றவையும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்கள் கொண்டுள்ளனர்.
அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளைக் குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமை தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது உடையார், பிள்ளை என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார்களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.

அகமுடையார் குல பிரிவுகள்

  1. ராஜகுலம்
  2. புண்ணியரசு நாடு
  3. கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
  4. இரும்புத்தலை
  5. ஐவளிநாடு
  6. நாட்டுமங்களம்
  7. ராஜபோஜ
  8. ராஜவாசல்
  9. கலியன்
  10. சனி
  11. மலைநாடு
  12. பதினொரு நாடு
  13. துளுவ வேளாளர் அல்லது துளுவன்

அகமுடையார் குல பட்டங்கள்

  1. தேவர்
  2. சேர்வை
  3. பிள்ளை
  4. முதலியார்
  5. உடையார்
  6. தேசிகர்
  7. அதிகாரி
  8. மணியக்காரர்
  9. பல்லவராயர்
  10. நாயக்கர்
  11. ரெட்டி

ஏனைய பட்டங்கள்

  1. வானவர்
  2. வில்லவர்
  3. உதயர்
  4. மலையன்
  5. மலையான்
  6. வானவன்
  7. வானவராயன்
  8. வல்லவராயன்
  9. பனந்த்தாரன்
  10. மலையமான்
  11. தலைவன்
  12. மனியக்காரான்
  13. பூமியன்
  14. கோளன்
  15. கொங்கன்
  16. அம்பலம்
  17. நாட்டான்மை

வாழும் பகுதிகள்

இவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரிகர்நாடகாஆந்திராகேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பல்வேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைத்தவிர்த்து இலங்கைமலேசியாபர்மாசிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து தமிழகம் முழுவதும் சிதறிக் காணப்படுகின்றனர். அகமுடையார்களை சேர்வை என்று தென் தமிழகத்திலும், முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, உடையார், நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்தியத் தமிழகத்திலும் காணப்படுகின்றனர்.

அகமுடைய தேவர்

தஞ்சாவூர்திருவாரூர்நாகப்பட்டினம்கோயம்புத்தூர்திண்டுக்கல்திருப்பூர்விருதுநகர்திருநெல்வேலிமதுரைதேனி ஆகிய மாவட்டங்களில் தேவர் என்ற பட்டப் பெயரை கொண்டு அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.

அகமுடைய சேர்வை

இராமநாதபுரம்சிவகங்கைமதுரைதேனிதிண்டுக்கல்புதுக்கோட்டைவிருதுநகர்திருநெல்வேலிதூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை கொண்டு அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.

அகமுடைய முதலியார், துளுவவேளாளர், உடையார் மற்றும் பிள்ளை

காஞ்சிபுரம்வேலூர்திருவண்ணாமலைவிழுப்புரம்கடலூர்சென்னைபெரம்பலூர்சேலம்தர்மபுரிகிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதலியார்துளுவ வேளாளர்உடையார் என்ற பட்ட பெயர்களைக் கொண்டு அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.

விமானம் பறப்பது எப்படி....?

விமானம் பறப்பது எப்படி....?


விமானம் பறப்பது எப்படி....? தெரிந்து கொள்வோம் 

அறிவியல் இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான். பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்.

சரி… எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

how-airplane-landing

ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு

A ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் (Lift)

B முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust

C கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight

D பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

ஒரு விமானம் ஒரே உயரத்தில், நேராக பறக்க இந்த கணிதக்கூற்று சமனாக இருக்க வேண்டும்

Weight=Lift

Drag=Thrust

த்ரஸ்ட், டிரேகைவிட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் கூடும். டிராக் த்ரஸ்டை விட அதிகமாக இருக்கும்போது விமானத்தின் வேகம் குறையும்
விமானத்தின் எடை ‘லிப்ட்’ விசையை விட கூடுதலாக இருக்கும்போது விமானம் கீழிறங்கும்

விமானத்தின் ‘லிப்ட்’ விசை விமானத்தின் எடையைவிட அதிகமாக இருக்கும்போது விமானம் மேல் எழும்பும் சரி… பலருக்கு இப்போ ஒன்று நன்றாக புரியும், விமானம் முன்னே செல்வதற்கான விசையை கொடுப்பது விமானத்தின் இஞ்சின் என்று, அதாவது த்ரஸ்ட் விசையை கொடுப்பது இஞ்சின்,

அதே போல விமானத்தில் ‘டிராக் விசையை கொடுப்பது’ காற்றினால் விமானத்தில் ஏற்படும் உராய்வுகள், இஞ்சின் ஆப் செய்யப்பட்டால் சிறிது நேரத்தில் விமானம் மெதுவாகிவிட காற்றினால் ஏற்படும் உராய்வே கார்ணம் (அதாவது வானத்தில்). ஒருவேளை பூமியில் காற்று இல்லையென்றால், இஞ்சினை ஆப் செய்தாலும் விமானம் மெதுவாக முடியாது.

(பலருக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கும், ஏன் விமானம் மேலே எழும்பியவுடன் சக்கரத்தை உள்ளே இழுத்துக்கொள்கிறது, வெளியிலேயே இருந்தால் என்ன கெட்டுவிட்டது என்று. இதை செய்வதற்கு காரணம், காற்றினால் சக்கரத்தில் ஏற்படும் உராய்வை தடுப்பதுதான். அந்த உராய்வுடன் பறந்தால் விமான எரிபொருள் செலவு இருமடங்காக இருக்கும், மேலும் அதிக வேகத்தை விரைவில் எட்ட முடியாது)

விமானத்தில் கீழ் நோக்கு விசையை கொடுப்பது இமானத்தின் சொந்த எடை மற்றும் புவி ஈர்ப்பு விசை இது எல்லோருக்குமே தெரிந்திருக்கும்

பலருக்கும் புரியாத புதிராக இருப்பது விமானத்தின் மேலிழுக்கும் விசை எங்கு உற்பத்தி ஆகிறது என்பதுதான். இது சற்று சுவாரஸ்யமானது

ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசை அதன் மேலிருக்கும் விசிறியால் வருகிறது என பலர் சொல்லிவிடுவார்கள், விமானத்திற்கு முன்னே செல்லும் விசைதானே உள்ளது, மேலே எப்படி எழும்புகிறது என்ற கேள்வி பலர் மனதில் இருக்கும். உண்மையில் விமானத்தின் மேலுழும்பு விசையை தருவதும் அதே எஞ்சின்தான் , சற்று மறைமுகமாக

விமானத்தின் மேல் நோக்கு தூக்கு சக்தி உற்பத்தி செய்யப்படுவது அதன் இறக்கை, விமானத்தின் வேகம், மற்றும் காற்றின் கூட்டணியில்தான் . இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் தூக்கு சக்தி உருவாகாது , விமானம் பறக்காது. அதாவது இறக்கைஇல்லாவிட்டாலும் பறக்க முடியாது, விமானத்தில் வேகம் இல்லாவிட்டாலும் பறக்க முடியாது, காற்று இல்லாமல் மீதி இரண்டும் இருந்தாலும் பறக்க முடியாது

விமானத்தின் இறக்கையை கூர்ந்து கவனித்தால் ஒன்று புரியும், (மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்). விமானத்தின் இறக்கையின் மேல்பாகம் சற்று, மிகவும் சற்று மேல் நோக்கி வளைந்திருக்கும். கீழ்பாகம் தட்டையாக இருக்கும். இதை சாதாரணமாக இறக்கையை பார்த்தால்கூட கண்ணுக்கு எளிதாக தெரியாது, அதை தொட்டுப்பார்த்தால் தான் தெரியும் இந்த மேல்நோக்கிய வளைவு எதற்காக? இங்கு தான் விஷயம் உள்ளது

காற்று அசுரவேகத்தில் விமானத்தின் இறக்கையோடு உராயும்போது, விமானத்தின் இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்).

விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்
அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்லதாக இருக்கும்.

இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மாணிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மாணிப்பது எது? விமானத்தின் இஞ்சின் , எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா?

அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது. (எலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் எலிகாப்டருக்கு வராது). இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் இப்படி டேக் ஆப் ஆகிறது.

ஓடுதளம்..

விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிகும் போது, சில ஓட்டு வீட்டு கூறைகள் பீய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பரப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா?

அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது

ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி வின்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது

சம்மணமிட்டு சாப்பிட சொல்வது ஏன்?

சம்மணமிட்டு சாப்பிட சொல்வது ஏன்?


தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.
விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபடுகிறது,
தண்ணீரை உறிந்து குடிப்பது நல்லதா? அல்லது தூக்கி குடிப்பது நல்லதா?
தண்ணீரை உறிஞ்சி குடிப்பதே நல்லது,ஏனெனில் செம்பு, அல்லது,பித்தளை, வெள்ளி பொருட்களில் உள்ள நீரை உறிஞ்சி குடிப்பதானால் அந்த உலோகத்தின் தன்மை நமது உடலில் நீருடன் அதிக அளவு கலக்கிறது, இதனால் கூடுதல் நன்மை ஏற்ப்படுகிறது,மேலும் காற்று குமிழ்கள் வயிற்ருக்கு செல்லாமல் தடுக்கிறது.
ஆனால் நெகிழி புட்டிகளில் தண்ணீர் தூக்கி குடித்தாலும், உறிஞ்சி குடித்தாலும், குடிக்கும்போது பலன் ஏதும் ஏற்ப்படுவதில்லை, அதனால் தூக்கி குடித்தால் அதன் விளிம்புகளில் உள்ள அசுத்தம் உதடுகளில் படாமலாவது இருக்கும்.

விஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல்:

விஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல்:


விஷ்ணுவின் 9 அவதாரங்கள் உணர்த்தும் அறிவியல்:
1. மச்ச அவதாரம்- இலகில் தோன்றிய முதல் உயிரினம் கடலில் தோன்றிய unicellular உயிரினமாகிய கடல் உயிரினம்.
2. கூர்ம அவதாரம்- reptiles ஊர்வன, அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சி..நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம்.
3. வராக அவதாரம்- mammals, பாலூட்டி உயிரினம். பரிணாம வளர்ச்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி. விலங்கு உயிரினம்.
4. நரசிம்ம அவதாரம்- பாதி மிருகம் பாதி மனிதன்..பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம்.
5. வாமண அவதாரம்- குள்ள மனிதன்...பரிணாம வளர்ச்சியின் முதல் மனிதன்...
6. பரசுராம அவதாரம்- மனிதனாக மாறிய பரிணாம வள்ர்ச்சி அவனை வேட்டையாட வேல், கத்தி செய்யும் தொழில்நுட்ப மனிதனாக மாற்றியது.
7. ராம அவதாரம்- விலங்குகளை வேட்டையாடும் மனிதனாக இருந்தவனை, தாய் தந்தை மக்கள் மனைவி சமுகம் என்ற சமுதாய மனிதனாக பரிணாம வளர்ச்சி அடைந்தான்.
8. பலராம அவதாரம்- வேட்டையாடி, ஒரு சமுகமாக வாழ ஆரம்பித்த மனிதன் அடுத்த பரிணாம வளர்ச்சியில் நிலங்களை உழுது பயிரிடும் வளர்ச்சியை அடைந்தான்.
9. கிருஷ்ண அவதாரம்- சமுகம், விவசாயம் செய்து வாழ்ந்த மனிதன் தனக்கான நீதி தர்மங்களை வகுத்தான். வாழ்க்கை நெறிமுறைகள்,தர்மம்,அதர்மம் என்பதை போதிக்கும் ஆசானாக பரிணாம வளர்ச்சியை அடைந்தான்
இந்து மதம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளுடன் கலந்து உருவான ஒரு கலாச்சாரம் ...

தூக்கம்

தூக்கம் 


கடைசியாக இரவு 9 மணிக்குள் படுத்துத் தூங்கியது எப்போது என உங்களுக்கு நினைவிருக்கிறதா?
கடந்த 20 ஆண்டுகளில் நாம் தூங்கச்செல்லும் நேரத்தின் சராசரி அளவு தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதைக் கவனித் திருக்கிறீர்களா?
8 மணிக்குள் இரவு உணவு முடித்து, 8:30-க்கு வெளிச்சம் அணைத்து, பேசிக்கொண்டே படுக்கையில் விழுந்தால் 9 மணிக்குள் உறங்கிப்போவோம். அது ஒரு காலம். 9 மணித் தூக்கம் 10 மணியாகி, நள்ளிரவாகி, இப்போது அதிகாலை வரை வந்துவிட்டது. அதிகாலை 3 மணி, 4 மணி வரைகூட விழித்திருக்கிறார்கள். இரவு வேலையின் காரணமாக கண் விழிப்பது, என்றோ ஒருநாள் தூக்கம் வராமல் இப்படி ஆவது... என்பது எல்லாம் தனி. எந்த உடனடி காரணமும் இல்லாமல் தொடர்ந்து இரவுகளில் கண் விழிப்போர் பெருகிக்கொண்டிருக்கின்றனர். இதன் விளைவுதான், இந்த 20 ஆண்டுகளில் புதிது புதிதாகப் பெருகிப் பெருக்கெடுக்கும் நோய்கள். இரவுத் தூக்கம் தள்ளிப்போவதற்கும், நோய்களின் வருகைக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தவறான வாழ்வியல்முறைகளால் ஏற்படும் உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், இதயநோய் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.
நம் இரவுத் தூக்கம் எதனால் தள்ளிப்போகிறது...நமக்கு ஏன் தூக்கம் வருவதில்லை?
இதற்கு `நமது உடல் பிரச்னைகள், மனக் கவலைகள்தான் காரணம்' என நினைக்கிறோம். இது முழு உண்மை அல்ல.
உண்மையில் நாம் உறக்கத்தைத் தள்ளிப்போடும் ஒவ்வொரு நிமிடத்திலும், பல நிறுவனங்கள் பல கோடிகளுக்கு வருமானம் பார்க்க ஆரம்பித்து விட்டன. இரவுச் சந்தையில்தான் இப்போது நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு `கோடி’கள் புரள்கின்றன. இரவுச் சந்தை என்பது, முழுக்க முழுக்க டிஜிட்டல் சந்தை. டிஜிட்டல் பொருட்களை நாம் சரியாக அணுகத் தெரியாமல் தடுமாறுவதையே வியாபாரம் ஆக்கிவருகிறார்கள்.
அதிகரித்துவரும் `காஸ்ட் ஆஃப் லிவிங்' மற்றும் குடும்பக் கடமைகளைச் சமாளிக்க, தனக்குப் பிடிக்காத வேலைகளையும் செய்தாக வேண்டும். அதுவும் தொழிலாளர் சட்டத்தை மதித்து 8 மணி நேர வேலை எல்லாம் கிடையாது. குறைந்தது 10 மணி நேரம் உழைக்க வேண்டும். அதில் டார்கெட்டை எட்டிப்பிடிக்க வேண்டும். மனஉளைச்சல் தரும் இந்த வேலையைச் செய்து விட்டு, வெளியே வந்தால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்க வேண்டும். சோர்வுடன் வீட்டுக்கு வந்து விழுந்ததுமே டி.வி-யை ஆன் செய்து விடுகிறார்கள். அந்த மாய உலகத்தில் விரியும் வண்ண வண்ணக் காட்சிகளில் மனம் மயங்குகின்றனர்.
இளம்வயதினர் மட்டுமின்றி, பலரும் ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என மூழ்க ஆரம்பித்துவிடுகிறார்கள். சமூக வலை தளங்கள் எனும் உலகத்துக்குச் சென்றுவிட்டால் அங்கு அதற்கான வேடம் தரித்து பலர் பிஸியாகிவிடுகிறார்கள். முன்னர் எல்லாம் இரவு உணவு முடித்ததும் திண்ணையில் ஓரிரு மணி நேரம் நண்பர்களோடு உட்கார்ந்து பேசிவிட்டே உறங்கச் செல்வார்கள். வீட்டுத் திண்ணை வாட்ஸ்அப் ஆனது. வாட்ஸ்அப் உரையாடலில் நேரம் போவதே தெரிவதில்லை.
சொந்த வீட்டில் இருப்பவர்களுடன்கூட, வீட்டில் இருந்துகொண்டே சமூக வலைதளங் களின் வழியே தொடர்புகொள்பவர்களும் இருக்கிறார்கள். தினமும் நள்ளிரவைத் தாண்டிய சாட்டிங்குக்குப் பிறகு `குட்மார்னிங்' சொல்லி விட்டுத்தான் படுக்கைக்குச் செல்கிறார்கள்.
இரவு உறங்கிக்கொண்டிருக்கும்போது திடீரென எழுந்து, `ஃபேஸ்புக்கில் போட்ட போட்டோவுக்கு எத்தனை லைக்ஸ், வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்திருக்கிறதா?'
என அடிக்கடி செக் செய்து கொண்டே இருப்பதை `கம்பல்சிவ் பிஹேவியர்' எனச் சொல்லும் ஒருவகையான மன நலப் பிரச்னை என்றும், `கண்டிஷனல் இன்சோம்னியா' எனும் தூக்கமின்மை நோய் என்றும் மருத்துவர்கள் சொல்கிறார்கள். பலர் தினமும் காலையில் விழித்து எழுந்ததும் செய்யும் முதல் வேலை என்ன?
தலையணை அருகே இருக்கும் மொபைலை எடுத்து இன்டர்நெட்டை ஆன் செய்து, வாட்ஸ்அப்பில் ஏதேனும் மெசேஜ் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதுதான். நாம் எவ்வளவு தூரம் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகிவருகிறோம் என்பதை உடனடியாக உணரவேண்டிய தருணம் இது.
இரவுத் தூக்கம் தடைபடுவதால் ஏற்படும் பிரச்னைகள்:
நமது உடலுக்குள் மனசுழற்சிக் கடிகாரம் இருக்கிறது. பொதுவாக சூரிய உதயத்தின்போது எழுந்து உற்சாகமாக வேலைசெய்வதும், சூரியன் மறைந்த பின்னர் இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதும்தான் இயற்கையோடு இயைந்த வாழ்வு. ஏன் நாம் சூரிய வெளிச்சத்தில் மட்டும் இயங்க வேண்டும் என்பதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு. சூரியன் மறைந்த பிறகு, இருட்டு நேரத்தில்தான்
" மெலட்டோனின் "
முதலான பல ஹார்மோன்கள் நமது உடலில் சீராகச் சுரக்கும். நாம் இரவு நேரத்தில் உடலுக்கு ஓய்வு தந்து உறங்கும் போதுதான் மெட்டபாலிசம் எனும் வளர்சிதை மாற்றம் உடலில் சீராக நடக்கும். நமது உடல் வளர்ச்சிக்குத் தேவையான குரோத் ஹார்மோன், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டீரான் போன்ற பிரத்யேக செக்ஸ் ஹார் மோன்கள் சமச்சீராகச் சுரக்கும். முறையற்ற இரவுத் தூக்கத்தால் ஹார்மோன்கள் சீராக உற்பத்திசெய்யப் படாமல் பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. கடந்த சில வருடங்களாக குழந்தைப் பேறின்மை பிரச்னை இளம் தம்பதிகளிடம் அதிகரித்துவருகிறது. பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, ஆண்களுக்கு விந்தணுக்களின் வீரியம் குறைவு ஆகியவற்றுக்கு, முறையற்ற இரவுத் தூக்கமே முக்கியக் காரணம்.
ஒழுங்கற்ற தூக்கத்தால் பயம், பதற்றம், சோர்வு ஆகியவை வருகின்றன. மனநலன் சார்ந்த பல பிரச்னைகள் வருவதற்கும் இதுதான் காரணம். இரவு நெடுநேரம் கழித்து உறங்குவதாலும், போதுமான நேரம் தூங்காததாலும், ஆழ்நிலை தூக்கம் அடையாமல் மேம்போக்காகத் தூங்கு வதாலும் மெள்ள மெள்ள உடற்பருமன், சர்க்கரை நோய், குறிப்பாக ரத்த அழுத்தம், ஸ்ட்ரோக் ஆகியவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
எல்லோராலும் இயல்பாக உடனடியாகத் தூங்கிவிட முடிவதில்லை. ஒவ்வொருவருக்கும் தூக்கம் தடைபடுவதற்கு வெவ்வேறு காரணிகள் இருக்கின்றன. பொதுவாக, தூக்கத்தைப் பாதிக்கும் காரணி வெளிச்சம்தான். இருள்தான் மனிதர்களுக்குத் தூக்கத்தைத் தூண்டும். அதனால்தான் வெளிச்சத்தை அணைத்துவிட்டுத் தூங்குகிறோம். சமீப ஆண்டுகளாக இரவிலும் வெளிச்சம் கண்களைப் பறிக்கிறது. வீதிகளில் மட்டும் அல்ல, வீட்டுக்குள்ளும் இரவு வெளிச்சம் அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிட்டது. ஒரு காலத்தில் மின்சார விளக்கு மட்டும்தான் நமக்கு இரவு வெளிச்சம். பிறகு டி.வி வந்தது, கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், டேப்லெட் எல்லாம் வந்துவிட்டன. அனைத்தும் அதிஉயர் வெளிச்சத்தை உமிழ்கின்றன. இதனால் நமது தூக்கம் தள்ளிப்போகிறது.
மொபைல் வெளிச்சம் தூக்கத்துக்குக் கடும் எதிரி. பலர் அறை விளக்குகளை அணைத்துவிட்டு மொபைலில் நோண்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். கண்களுக்கு அருகில் வைத்து மொபைலைப் பயன்படுத்தும் போது, அந்த வெளிச்சம் நமது கண்களையும் மூளையையும் பாதிக்கும்; தூக்கத்தைத் தாமதப்படுத்தும். ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் என்பது வித்தியாசப்படும். வேலைக்கு ஏற்ப தங்களது வாழ்வியல்முறையை ஆரோக்கியமான வகையில் மாற்றிக்கொண்டால் பிரச்னை வராது.
பொதுவாக இரவு 9 மணிக்குள் உறங்குவதும். காலை ஐந்து மணிக்குள் எழுவதும்தான் சிறந்தது.
அதிகத் தூக்கம் எப்படி ஆபத்தோ, அதுபோல குறைந்த தூக்கமும் ஆபத்தானது. இரவு தாமதமாக உறங்கினாலும் காலையில் அலாரம் வைத்து சீக்கிரமாக எழுந்துவிடுவது தவறு. அனைவருக்கும் ஆறு மணி முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.
நாம் அவசியம் நன்றாகத் தூங்கியே ஆக வேண்டும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம். நேர மேலாண்மையைச் சரியாகக் கையாளத் தெரியாதவர்கள் தடுமாறுகிறார்கள். நண்பர்களுக்கு, மொபைலுக்கு, டி.வி-க்கு என நேரம் ஒதுக்குவதில் தவறு இல்லை. உங்கள் உடலுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.
கடைசி காலத்தில் ஆரோக்கியம் மிக முக்கியம்

ஆரத்தி எடுப்பது ஏன்?

ஆரத்தி எடுப்பது ஏன்?

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பெற்றவை. ஆனால் நம் தலைமுறை அதைச் சரியாக உணர்வதில்லை. தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒன்று, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்பெறும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்பெறுவதில்லை.

ஓவ்வொரு நல்ல காரியம் நடந்தாலும் ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகமிட்டு வரவேற்பர். திருமணம், பிறந்த குழந்தையை வீட்டிற்கு வரவேற்பது என அனைத்துச் சுப காரியங்களிலும் ஆரத்தி இடம்பிடித்திருக்கும்.

ஆரத்தி தமிழர்களிடம் மட்டுமின்றி இந்துக்களின் சாங்கிய சம்பிரதாயங்களிலும் காணலாம். ஆரத்தி எடுப்பது கண் திருஷ்டியைப் போக்குவதற்கு என நம்முடைய பாட்டிமார்கள் சொல்லக் கேட்டிருப்போம்.

சாதாரண நிகழ்வாக இதைப் புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்பெறுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்துச் சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்துக் கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்குச் சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு முன் 3 முறை சுற்றுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.

ஆரத்தி என்றுமே வீட்டின் வாசலில்தான் எடுக்கப்பெறும். பெரும்பாலும் தூரப்பயணம் சென்று வீடு திரும்புகின்றவர்கள், புதுமணத் தம்பதியினர், மகப்பேறு பெற்று வரும் பெண்கள் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கப்பெறும்.

உடலில் இருக்கும் விஷக்கிருமிகளைப் போக்கவே இந்த ஆரத்தி எடுக்கப்பெறுகிறது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்குக் கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேணுவதோடு பிறருக்கும் அந்த விஷக்கிருமிகள் பரவாது தடுக்கமுடிகிறது.

இந்த ஆரத்தி எடுப்பதன் முலம் மனிதனின் சூட்சும பகுதியில் விஷக்கிருமிகள் அண்டாமல் தடுக்க இயல்கிறது. மேலும் அவனின் மேல் இருக்கும் கிருமிகள் வீட்டில் இருக்கும் பிறரைப் பாதிக்காமல் தடுக்கவே அவர்கள் வீட்டிற்குள் நுழையும் முன், நுழைவாசலிலேயே இந்த ஆரத்தி எடுக்கப்பெறுகிறது.

நம்முடைய கலை கலாச்சாரங்களில் புதையுண்டு இருக்கும் இந்த அறிவியல் அர்த்தங்கள் அடுத்த சந்ததியினருக்குத் தெரியாமல் காலத்தால் மறந்தும் மறைந்தும் போய்விட்டன.

இலட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகிய முப்பெரும் தெய்வங்களின் அருள் கிடைக்க வேண்டும்
என்பதற்காகவே இவ்வாறு ஆரத்தி எடுக்கப்பெறுகிறது என்பர். சரஸ்வதியின் நிறம் வெண்மை, இலட்சுமியின் நிறம் மஞ்சள். எனவே, சுண்ணாம்பும் மஞ்சளும், அதாவது வெள்ளையும் மஞ்சளும் கலந்து சிவப்பு என்கிற அதாவது பார்வதி தேவியின் நிறமாக ஆரத்தி உண்டாகிறது. இதனால் கலைமகள், அலைமகள் மற்றும் மலைமகள் அருள் கிடைப்பதாகவும் கண் திருஷ்டி அதாவது கண்ணேறு நீங்குவதாகவும் கருதுவர்.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்த இனம் தமிழினம் என்று மார்த்தட்டும் முன் நம் முன்னோர்களின் கண்டுபிடிப்புகளின் அர்த்தங்களை முறையாக அறிந்து செயல்படுகிறோமா என்பதை நினைத்துப் பார்ப்போம்! அறிந்து பின்பற்றிப் பெருமிதம் கொள்வோம்.

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!


வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.

கியாரண்ட்டி , வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி , வாரண்ட்டி என்றால் என்ன..?


கியாரண்ட்டி என்றால் என்ன..?

வாரண்ட்டி என்றால் என்ன..?

கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது. அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், மாற்றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.


மரகதலிங்கம்

மரகதலிங்கம்


மரகதம் பெரில் வகையைச் சேரந்த ஒரு கனிமம். வனேடியம் என்ற மூலகம் மரகதத்திற்கு பச்சை நிறம் தருகிறது. பச்சை நிறம் கொண்ட மரகதம் ஒளிரும் தன்மையுடையது. இதில் சிலிக்கான், அலுமினியம், மக்னீசியம் போன்ற இரசாயனக் கலவைகள் அடங்கியுள்ளன. இக்கற்கள் மிக மென்மையானவை; எளிதில் நொறுங்கும் தன்மை உடையவை. கண்ணாடிப் பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி அதில் மரகதத்தைப் போட்டால் பால் முழுவதும் பச்சை நிறமாகத் தோன்றும். நீர் நிறைந்த பாத்திரத்தில் போட்டால் நீர் முழுவதும் பச்சையாகத் தோன்றும். இப்படிப்பட்ட குணமுடைய கல் மிக விலை உயர்ந்த கல் ஆகும்.

மேற்கு ரஷ்யாவின் உரல்ஸ் மலைப்பகுதியில் விலை மதிப்புமிக்க மரகத கற்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இப்பகுதியில் 3 ஆயிரத்து 187 கேரட் மதிப்புள்ள மரகத கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கற்களை பட்டை தீட்டும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு 50 கிலோ மரகத கற்கள் ஏலம் விடப்பட்டது. இதில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் அரசுக்கு கிடைத்தது.இந்நிலையில் 5 ஆயிரம் கேரட் தரம் கொண்ட சுமார் ஒரு கிலோ எடையுள்ள அரிய வகை உயர்ரக பச்சை மரகத கல் ஒன்று இப்பகுதியில் மீண்டும் கிடைத்துள்ளது.

இந்த மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம் .

மரகதலிங்கம் ஒரு வகை சிவலிங்கம் ஆகும்,

புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவது மிக சிறந்த பலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன.இவ்வாறு மரகத லிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .

சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் . மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது.

ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில் உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.
சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.

அறுகம்புல்

அறுகம்புல்


அற்புத மூலிகை அறுகம்புல்

நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.

அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..

அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் உண்டு

காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்



தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.
சட்டம் எதற்கு?
அரசு அலுவலகங்கள் பொது மக்களுக்கு தகவல் சொல்லக் கடமைப்பட்டிருந்தாலும் இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன் நீங்கள் கேட்கும் தகவலை அவ்வளவு எளிதில் பெற இயலாது. நீங்கள் தகவல் கேட்டு அனுப்பும் கடிதம் குப்பைக்கு கூட செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இச்சட்டம் இயற்றப்பட்ட பிறகு தகவல் தர மறுத்தால் சட்டத்தை மீறுவதாகும். தண்டனை கிடைக்கும் என்ற அச்சத்தால் தகவல் கிடைக்கும் வாய்ப்பு உறுதியாகிறது.
எங்கிருந்து தகவல் பெறலாம்?
மத்திய மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிதி பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து தகவல் பெறலாம். தனியார் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.
என்ன தகவல் பெறலாம்?
அரசு அலுவலகங்களில் உள்ள கோப்புகள். ஆவணங்கள், சுற்றறிக்கைகள். ஆணைகள், ஈமெயில்கள், நோட் பைல் எனப்படும் அலுவலக குறிப்புகள் ஆகியவை பெறலாம். இது தவிர சாலை போடுதல், அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மாதிரிகள் கேட்டுப் பெறலாம்.
எவ்வாறு பெறுவது?
ஒரு தகவல் பெறுவதற்கென தனியான படிவம் ஏதும் கிடையாது. ஒரு சாதாரண வெள்ளைத் தாளில் வேண்டிய தகவல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம்.
கட்டணம் விவரம்
மத்திய அரசும். தமிழ்நாடு அரசும் தகவல் பெற ரூ.10/- என கட்டணம் நிர்ணயித்துள்ளன. இக்கட்டணத்தை ரொக்கமாகவோ, வரைவேலையாகவோ, நீதிமன்ற கட்டண வில்லை மூலமாகவோ செலுத்தலாம். நகல் பெறுகையில் ஒரு தாளுக்கு ரூ. 2/- எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யாரிடம் தகவல் கேட்பது?
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் உதவிப் பொதுத் தகவல் அலுவலர் அல்லது பொதுத்தகவல் அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொதுத் தகவல் அலுவலர்களின் மத்திய அரசுக்கான பட்டியல் www.tn.gov.in என்ற தளத்திலும் உள்ளன.
தகவல் ஏன் கேட்கிறோம் என சொல்ல வேண்டுமா?
பிரிவு 6 (2)ன்படி தகவல் கேட்பவர் எதற்காக தகவல் கேட்கப்படுகிறது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டியதில்லை. பதில் அனுப்ப ஒரு தொடர்பு முகவரியைத் தவிர வேறு எந்த விபரத்தையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வளவு நாட்களில் தகவல் பெறலாம்?
பிரிவு 7 (1)ன் படி ஒரு பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தர வேண்டும். கேட்கப்படும் தகவல் ஒரு நபரின் உயிர்ப்பாதுகாப்பு பற்றிய செய்தியாக இருந்தால் 48 மணி நேரத்தில் தர வேண்டும்.
மேல் முறையீடு
பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம்.
மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்களுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம்.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம்,
273/378, அண்ணாசாலை, (வானவில் அருகில்),
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
போன் : 044-24357580, 24312841, 24312842
தகவல் தராவிட்டால் தண்டனை உண்டா?
பிரிவு 20ன் கீழ் குறிப்பிட்ட காலத்துக்குள், உரிய நியாயமான காரணங்கள் எதுவுமின்றி தகவல் தர மறுத்தாலோ, தவறான தகவல் அளித்தாலோ அரைகுறையான முழுமையற்ற தகவல்கள் அளித்தாலோ, தகவல்களை அழித்தாலோ பிரிவு 20ன் கீழ் அதிகபட்சமாக ரூ.25,000/- அபராதம் மற்றும் துறை நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு.
விதி விலக்குகள் :
பிரிவு 8ன் படி நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டிருக்கும், சட்டமன்ற, பாராளுமன்ற உரிமைகள் மீறும், வியாபார ரகசியங்கள், வெளிநாடுகளிலிருந்து அரசுக்கு வந்த ரகசியங்கள், காவல் துறையின் ரகசிய தகவலாளர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் தகவல்கள், புலனாய்வில் உள்ள வழக்குகள், அமைச்சரவை கூட்ட குறிப்புகள் போன்றவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
மேலும் பிரிவு 24ன் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பட்டியலிடப்படும் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை நிறுவனங்கள் ஆகியன இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
எவ்வாறு இச்சட்டத்தை உபயோகமாய் பயன்படுத்தலாம்?
இச்சட்டத்தை பயன்படுத்திட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிமேம்பாடு நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்று கேட்கலாம். நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் வழங்கப்படும் நிதிகள் எவ்வாறு செலவிடப்படுகிறது எனக் கேட்கலாம். ஊழல் நடைபெறக் கூடும் என்று சந்தேகப்படும் அலுவலகங்களில் தகவல் கேட்கலாம். உங்கள் தெருக்களில் போடப்படும் சாலைகளிலோ அரசு கட்டுமானப் பணிகளிலோ மாதிரிகள் எடுத்து சோதனைக் கூடங்களுக்கு அனுப்பலாம். டெண்டர் விபரங்களைக் கேட்கலாம்.
தகவல் கேட்பவரை மிரட்டினால் என்ன செய்வது?
தகவல் கேட்பவரை மிரட்டுவது சில நேரங்களில் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக காவல் துறையினரிடம் தகவல் கேட்கையில் இது போல் நிகழும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நேர்ந்தால், எந்த தகவலை கேட்கையில் மிரட்டல் வந்ததோ, அதே தகவலை மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இருந்து நண்பர்களையோ உறவினர்களையோ, அதே தகவலை கேட்டு பல விண்ணப்பங்களை அனுப்பச் செய்யுங்கள். இது மிரட்டலை நிச்சயம் நிறுத்தும். இதையும் மீறி மிரட்டல் தொடர்ந்தால் வழக்கறிஞர்களை அணுகவும்.