அகமுடையார்
அகமுடையார் (Agamudayar) (அகம்படியார் மற்றும் அகமுடையான் எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் தென்னிந்தியாவில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முக்குலத்தோர்களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக கள்ளர், மறவர், அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து முக்குலத்தோர் எனப்படுவர்.
பொதுவாக அகமுடையார் என்பதன் பொருள் நில உடைமையாளர், நம்பிக்கைக்குரியவர், பரந்த சிந்தனையாளர் என்று பலவாறாக பொருளில் இலக்கியங்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிகிறது.[சான்று தேவை] அகமுடையார் குலத்தில் சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட பட்டங்களே பெரும்பான்மையாக கொண்டுள்ளனர்.
அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் கொண்டுள்ளனர். குறிப்பாக ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் நாகப்பட்டினம் - திருவாரூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்கள் தேவர் பட்டமே கொண்டுள்ளனர். தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலப்பிரிவை சார்ந்துள்ளனர் மற்றும், ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” போன்றவையும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்கள் கொண்டுள்ளனர்.
அகமுடைய முதலியார் என்பது போர்ப்படை தளபதிகளைக் குறிக்கின்றது. முதலி என்பது ஒரு படையை தலைமை தாங்குகின்ற முதன்மையான தளபதி என்று பொருள் தருகிறது. வடதமிழகத்தில் வாழும் அகமுடையார்கள் அனைவருக்கும் பட்டம் என்பது உடையார், பிள்ளை என்று இருந்த போதிலும், அவர்கள் தங்களை அகமுடையார்களாகவே அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.
அகமுடையார் குல பிரிவுகள்
- ராஜகுலம்
- புண்ணியரசு நாடு
- கோட்டைப்பற்று (பதினெட்டு கோட்டைப்பற்று)
- இரும்புத்தலை
- ஐவளிநாடு
- நாட்டுமங்களம்
- ராஜபோஜ
- ராஜவாசல்
- கலியன்
- சனி
- மலைநாடு
- பதினொரு நாடு
- துளுவ வேளாளர் அல்லது துளுவன்
அகமுடையார் குல பட்டங்கள்
- தேவர்
- சேர்வை
- பிள்ளை
- முதலியார்
- உடையார்
- தேசிகர்
- அதிகாரி
- மணியக்காரர்
- பல்லவராயர்
- நாயக்கர்
- ரெட்டி
ஏனைய பட்டங்கள்
- வானவர்
- வில்லவர்
- உதயர்
- மலையன்
- மலையான்
- வானவன்
- வானவராயன்
- வல்லவராயன்
- பனந்த்தாரன்
- மலையமான்
- தலைவன்
- மனியக்காரான்
- பூமியன்
- கோளன்
- கொங்கன்
- அம்பலம்
- நாட்டான்மை
வாழும் பகுதிகள்
இவர்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பல்வேறு பட்டப்பெயர்களுடன் வசித்து வருகின்றனர். இதைத்தவிர்த்து இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும்பாலான அகமுடையார் குலத்தினர் பல தலைமுறைகளாக பூர்வீகமாக வசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து பகுதியிகளிலும் அகமுடையார் இனத்தினர் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
வட தமிழகத்தை பொருத்தவரையிலும் அகமுடையார் இனத்தினர் தனித்தே அடையாளப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் அகமுடையார் இனத்தினரின் பட்டங்களையும், பட்ட பெயர்களையும் வைத்து தமிழகம் முழுவதும் சிதறிக் காணப்படுகின்றனர். அகமுடையார்களை சேர்வை என்று தென் தமிழகத்திலும், முதலியார், பிள்ளை என்ற பட்டங்களுடன் வட தமிழகத்திலும், தேவர், பிள்ளை, அதிகாரி, உடையார், நாயக்கர், தேசிகர் போன்ற பல பட்ட பெயர்களுடன் மத்தியத் தமிழகத்திலும் காணப்படுகின்றனர்.
அகமுடைய தேவர்
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், திருநெல்வேலி, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தேவர் என்ற பட்டப் பெயரை கொண்டு அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.
அகமுடைய சேர்வை
இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் சேர்வை என்ற பட்ட பெயரை கொண்டு அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.
அகமுடைய முதலியார், துளுவவேளாளர், உடையார் மற்றும் பிள்ளை
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சென்னை, பெரம்பலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதலியார், துளுவ வேளாளர், உடையார் என்ற பட்ட பெயர்களைக் கொண்டு அகமுடையார் குலத்தினர் காணப்படுகின்றனர்.
No comments:
Post a Comment