Followers

Tuesday, October 29, 2019

சம்மணமிட்டு சாப்பிட சொல்வது ஏன்?

சம்மணமிட்டு சாப்பிட சொல்வது ஏன்?


தமிழக கலாச்சாரங்களில்முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது.
விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது ... .முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்..ஆனால் இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!!
முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன?
சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சுக ஆசனத்தில் அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும்.
ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் படி வலியுறுத்தபடுகிறது,
தண்ணீரை உறிந்து குடிப்பது நல்லதா? அல்லது தூக்கி குடிப்பது நல்லதா?
தண்ணீரை உறிஞ்சி குடிப்பதே நல்லது,ஏனெனில் செம்பு, அல்லது,பித்தளை, வெள்ளி பொருட்களில் உள்ள நீரை உறிஞ்சி குடிப்பதானால் அந்த உலோகத்தின் தன்மை நமது உடலில் நீருடன் அதிக அளவு கலக்கிறது, இதனால் கூடுதல் நன்மை ஏற்ப்படுகிறது,மேலும் காற்று குமிழ்கள் வயிற்ருக்கு செல்லாமல் தடுக்கிறது.
ஆனால் நெகிழி புட்டிகளில் தண்ணீர் தூக்கி குடித்தாலும், உறிஞ்சி குடித்தாலும், குடிக்கும்போது பலன் ஏதும் ஏற்ப்படுவதில்லை, அதனால் தூக்கி குடித்தால் அதன் விளிம்புகளில் உள்ள அசுத்தம் உதடுகளில் படாமலாவது இருக்கும்.

No comments:

Post a Comment