Monday, November 4, 2019

நாடி.நாடிகளின் தன்மை:

வாத நாடி அதிகமானால்

வாத நாடி:வாதம் அதிகமானால் உடல் முழுவதும் குத்தல் வலி இருக்கும். கை, கால் மூட்டுகளில் வலி அதிகமாக இருக்கும். கை கால்கள் முடங்கிப் போகலாம். குனிந்து நிமிர முடியாத படி அடிக்கடி மூச்சுப் பிடிப்பு ஏற்படும். வயிற்றுப் பொருமல் அதிகமாக இருக்கும். வயிற்றில் மந்தம் ஏற்பட்டு: சரியாகப் பசி எடுக்காது. மலச்சிக்கலும், சிறுநீர்க்கட்டும் ஏற்படும். வாய் புளிக்கும். அடிக்கடி பேதி ஆகும்.

வாத நாடி அறிகுறிகள்:

உடல் குளிர்ச்சியாக இருக்கும். முகம், கண்விழி, பல், மலம் கறுமை நிறத்தில் இருக்கும். கண்ணில் நீர் வடியும். நாக்கு கறுத்து வறண்டு போகும். சிறுநீர் கறுத்தும், அளவி;ல் கொஞ்சமாகவும் வெளியாகும்.

பித்த நாடி அதிகமானால்

உடல் நடுக்கம் ஏற்படும். உடல் வறட்சி ஏற்பட்டு எரிச்சல் அதிகமாகும்.  மண்டைக் குடைச்சல்,  நாவறட்சி, வாய்க் கசப்பு, தாகம், விக்கல், வாந்தி, தலைக்கிறுகிறுப்பு, காது அடைப்பு,  அயர்ச்சி, சோம்பல்,நெஞ்செரிச்சல், மந்தம், குளிர்க்காய்ச்சல், ரத்த சோகை, மஞ்சள் காமாலை, மயக்கம் உள்ளிட்ட வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். கண் பார்வை தெளிவில்லாமல் இருக்கும். கண்கள் உள்வாங்கி அடிக்கடி பார்வை இருண்டு போகும். சிறுநீர் மஞ்சள் நிறமாகவும் சில சமயத்தில் சிவப்பு நிறத்திலும்
இருக்கும்.

பித்த நாடிஅறிகுறிகள்:
உடல் சூடாகவும், முகம் கண்விழி, நாக்கு, பல், மலம் ஆகியவை சிவப்பாகவும் இருக்கும். சிறுநீர் மஞ்களாகவும் சில சமயங்களில் சிவப்பாகவும்  வெளியாகும்.

சிலேத்தும நாடி அதிகரித்தால்  

உடல் கரையும், வற்றும், வெளுக்கும், குளிர்ந்து நடுங்கும், உணவு சாப்பிடப் பிடிக்காது. விக்கல், வாந்தி, இருமல், மேல் மூச்சு, வியர்வை போன்றவை இருக்கும்.
நெஞ்சு மற்றும் விலாப் பகுதியில் வலி இருக்கும். உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்.
இருமினால் ரத்தம் வெளியாகலாம். சிறுநீர் குறைவாகப் போகும்.

சிலேத்தும நாடி அறிகுறிகள்:

 உடல் அடிக்கடி வியர்க்கும். முகம், கண்விழி, நாக்கு, பல், மலம், சிறுநீர் ஆகியவை வெளிர் நிறத்தில் இருக்கும். கண்களில் பீளை கட்டும்.

சுவாச சுத்தி என்ற நாடிசுத்தி :-

ஆராய்ச்சி ரீதியாக ஒரு நிமிடத்திற்கு 18 முறையென ஒரு நாளை க்கு 25,920
சுவாசங்களை சுவாசிக்கின்றோம். அது இயற்கையிலா சுவாசம் என்றாலும்,
சுவாசத்தை பல ப்படுத்த வைகிருதம் என்ற சுவாசப் பயிற்சியை சிறுக,சிறுக மேம்படுத்த வே ண்டும். வைகிரு தம் என்ற சுவாசப் பயிற்சியை சுகப்பிராணயாமம், சமவிருத்த பிராணயாமம், விவாகபிராணயாமம், மத்யம பிராணயாமம், ஆத் யபிராண யாமம், மகத்யோக பிராணயாமம் என்று பல வகையாக பிரிக்கலாம்.
ஆனால் இந்த பிராணயாமங்களின் அடிப் படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப் படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை
உள்ளிலுத்து பின்பு காற்றை அடக் காமல் வலப்புற நாசி யின் வழியே காற்றை
வெளியேற்ற வேண்டு ம். அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப் புற நாசி வழியே காற்றை வெளியிட வேண் டும். இவ்வாறாக மாறி மாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். இச்செயலின் காலத்தில் அதிக மாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது. நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியான தாகும். குளிர்ந்த நீரைப் பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சி யை மேற்கொள்ள வேண் டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும்
காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங் களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும். இப்ப டியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம்.
காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம்
சுவா சிக்கும் போது சுவாசத்தின் வழியாக உட லுக்குள் சென்று உடலை நோய் வாய்ப் படுத்துகின்றன.இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறி யடிக்க வாசுகி என்னும்
வாசிக்கலை முக்கியமானதாகிறது. மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப் பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூய காற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும்
பரிசுத்த தன்மை யுடன் விளங்குவன வாகஅமைகின்றன என்கிறார்கள்.

மனித உடலில் உள்ள மொத்த நாடிகள்:

தலையில்                     15000
கண்களில்                     4000
செவியில்                      3300
மூக்கில்                          3380
பிடரியில்                       6000
கண்டத்தில்                   5000
கைகளில்                       3000
முண்டத்தில்                 2170
இடையின் கீழ்              8000
விரல்களில்                   3000
லிங்கத்தில்                    7000
மூலத்தில்                       5000
சந்துகளில்                     2000
பாதத்தில்                        5150
மொத்தம்                       72000

              இப்போது நாடித்துடிப்பைக் கண்டு நோய் அறிதல் அற்று போய் விட்டது என்றே கூற வேண்டும். மருத்துவரிடம் சென்றவுடன் நாடித்துடிப்பு பார்க்கும் காலம் மாறி ஸ்டெத் வந்தது. இப்போது அதற்கெல்லாம் கூட விடை கொடுத்தாகி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ஸ்கேன் என்ற நிலையில் பழகிவிட்டனர் மருத்துவர்கள். என்பது ஒருபுறம். மறுபுறம் நவ நாகரிக மக்களின் பணத்தை நாடும், பகட்டை நாடும், பேரை நாடும், புகழை நாடும் பேராசை அவர்களை நாடி ஜோசியத்தை நாட வைத்துள்ளது. என்ன செய்தால் கோடிஸ்வரன் ஆகலாம என்ற ஆவல் நாடி ஜோசியத்தின் பக்கம் திசை திருப்பி விட்டுள்ளது. இந்த நம்மையே எண்ணி நமக்காகவே துடிக்கும் நாடியைப் பற்றி எவரும் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை.

No comments:

Post a Comment