Monday, November 4, 2019

நாடி என்றால் என்ன?


             நாடி என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்….அதை எப்படி சாமான்ய  ஆட்கள் கண்டுகொள்வது? மனித உடலில்  பத்து இடங்களில் நாடி பார்க்க முடியும். இது மருத்துவம்உடல் மாற்றம் மற்றும் பல விஷயங்களுக்கு நமது முன்னோர்கள் பார்த்து வைத்தியம் செய்திருக்கின்றனர். பல சிடி ஸ்கேன் செய்ய முடியாததை கூட இந்த நாடி டக்கென்று டாக்டர் அல்லாத ஒரு சாதாரண பாட்டி கூட சொல்லமுடியும் அதிசயம். நாடி பெரும்பாலும் கைமணிக்கட்டில் பார்ப்பது தான் பெஸ்ட்இதை பல்ஸ் ரீடிங் என கூறுவர். நாடி தலையில் இருந்து கீழ் நோக்கி வரும். இதை மூன்று கை விரல்களில் கண்டு கொள்ள முடியும்.கட்டை விரல் / மோதிர விரல் ஆள்
காட்டி விரல் தான் அவை. வாதம் /கபம் / பித்தம் இந்த நாடி மூலம் மிக
துள்ளியமாக கணிக்க முடியும்
இதை எப்படி கண்டுபிடிப்பது
         இதை எப்படி கண்டு பிடிப்பது மற்றும் பல நாடிகளை பற்றி விலாவாரியாக
கூறுகிறேன். வாத நாடிநாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது Index finger
எனப்படும் ஆள்காட்டி விரலில் தெரியும் வாத நாடி. பித்த நாடிநாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது நடு Middle Finger விரலில் தெரிவது வாத நாடி.
கப நாடிநாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது மோதிர விரலில் Ring Finger தெரிந்தால் அது கப நாடி. ஆத்ம நாடி – .நாடி அதாவது பல்ஸ் பிடித்து பார்க்கும் போது சிறிய விரலில் பிடித்து பார்ப்பது ஆத்ம நாடி பூத நாடிநாடி அதாவது பல்ஸ்
பிடித்து பார்க்கும் போது Suzhumunai Imbalance என்னும் மூளை தடுமாற்றம்தான் பூத நாடி. இது கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நடுவே தெரியும் அல்லது நெற்றியில் தெரியும் இது பாலச்சந்திரா அடங்கல் எனப்படும். குரு நாடிஎன்றால் வாதம் / கபம் / பித்தம் / ஆத்ம மற்றூம் பூத நாடிகளின் கூட்டு கலவை தான் குரு நாடி.
பிரனான் நாடிஇது சாதாரணமாக யாருக்கும் பார்ப்பதில்லை. இது சில விபத்து அல்லது பேச்சு மூச்சு இல்லாமல் யாரவது இருப்பின் அவர்களின் பிராணம்
செல்கிறதா என்று பார்ப்பது.ஆங்கில மருத்தவம்அல்லது ஸ்டெத்தஸ்கோப்
சில வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நாடியை நம்
மூன்னோர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து வைத்தியம்
செய்திருக்கின்றனர். வாதம் / கபம் / பித்தம் இந்த மூன்றை கன்ட்ரோல்
பண்ணீனாலே போதும்முக்கால்வாசி நோய்கள் மனிதனுக்கு வராது. நாடி எப்படி உண்டாகிறது? நம் உடலின் ரத்த ஓட்டத்தின் ஆதாரம் இதயம். இதயம் எப்படி
செய்லடுகிறதோ அதற்கு  ஏற்றார் போல்தான் நம் உடல் முழுவதும் இரத்த ஓட்டம் இருக்கும். மிகை ரத்த அழுத்தம், குறை ரத்த அழுத்தம் என்று சொல்வதெல்லாம் இதயத்தின் செயல்பாட்டைப் பொறுத்துத்தான். அப்படி இதயம் சுருங்கி விரியும் தன்மைக்கு ஏற்ப உருவாவதுதான்  நாடி. அதாவது  இதயத்துடிப்பும்  நாடியும் ஒன்றையொன்று ஒத்திருக்கும்.நாடி பார்க்கும் முறை:மணிக்கட்டுக்கு ஓர் அங்குலம் மேலே மூன்று விரல்களால் (நடு விரல், மோதிர விரல், ஆள்காட்டி விரல்)ஒரே நேரத்தில் மெதுவாக அழுத்தி நாடி பார்க்க வேண்டும். பிறகு, விரல்களை மாறி மாறி அழுத்தியும், தளர்த்தியும் பார்த்தால் நாடியின் தன்மையை முழுமையாக அறிந்து கொள்ளலாம்.(30 வினாடிகள் துடிப்பு கவனித்து அதை 2 ல் பெருக்கி வருவது நமது துடிப்பு எண்ணிக்கை.)18 வயதுக்கு குறைவானவர்களுக்கு சராசரியாக 70-100/
நிமிடம் துடிப்புகள். மற்றவர்களுக்கு சராசரியாக 60-100/நிமிடம் துடிப்புகள்
இருக்க வேண்டும்.ஆண்-பெண் நாடி பார்க்கும் முறை:ஆண்களுக்கு வலக் கையிலும்
பெண்களுக்கு இடக் கையிலும் நாடி பார்ப்பதுதான் சிறந்தது.

பத்துவகை நாடிகள்:

1.இடகலை நாடி எனப்படும் (வளி) வாத நாடி.
2. பிங்கலை எனப்படும் (அனல்) பித்த நாடி.
3. சுழிமுனை எனப்படும் ஐயநாடி
4. சிங்குவை எனப்படும் உள்நோக்குநாடி
5. புருடன் எனப்படும் வலக் கண் நாடி.
6.காந்தாரி எனப்படும் இடக்கண் நாடி
7. அத்தி எனப்படும் வலச் செவி நாடி
8. சங்கினி எனப்படும் ஆண், பெண் குறி நாடி.
9.அலம்புடை எனப்படும் இடச் செவி நாடி.
10. குருநாடி எனப்படும் எரு வாயில்

No comments:

Post a Comment