Thursday, November 14, 2019

நிலத்தின் வகைகள்


நிலத்தின் வகைகள்



        நிலத்தை அதன் தன்மையைப் பொருத்து , பயன்பாட்டைப் பொருத்து, நிலத்தின் மீது நடந்த மனித முயற்சியினை வைத்து அதற்குப் பல்வேறு காரணப் பெயர்களையும் இடுபெயர்களையும், தமிழிலும், தமிழ் வட்டார வழக்குகளிலும் குறிப்பிடுவதை நாம் அறிவோம்.
பல்வேறு பத்திரங்களையும், பழைய ஆவணங்களையும் நாம் பார்த்த பொழுது இன்னும் பல பெயர்கள் பயன்படுத்தப்பெறுவதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது

இவ் வார்த்தைகளை முழு அர்த்தத்துடன் நாம் தெரிந்து கொள்ளும் பொழுது ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் நிலங்கள் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

1. ஊர் மானியம்ஊரின் பொது ஊழியத்திற்க்காக விடப்பட்ட வரியில்ல நிலம்
2. ஊரிக்கைஊரை சார்ந்த நிலம்
3. காவிதி புறம்அரசரை கவிதை பாடியதற்கு கொடுக்கப்பட்ட நிலம்
(வரிவிலக்கு)
4. சாந்து புறம்அரசருக்கு சந்தனம் கொடுத்து வருவதருக்கு விடப்பட்ட நிலம்  (வரிவிலக்கு).
5. மடப்புறம் மடத்திற்காக விடப்பட்ட நிலம் ( வரி விலக்கு)
6. அடிசிற்புரம்உணவிற்காக விடப்பட்ட நிலம் ( வரி விலக்கு )
7. அறப்புறம்தரும செயலுக்கு வரி விலக்குடன் விட்ட இடம்.
8. இறையிலிவரி நீக்கப்பட்ட இடம்
9. கடவுளின் () – கோயில் விடப்பட்ட இறையிலி இடம். - கோயில் இடம்
10. சுவாஸ்தியம் () – பரம்பரையாக வரும் நிலம் - சுவாதீயம்
11. பூர்வீக பாத்தியம்பரம்பரையாக வரும் நிலம்
12. அடுத்தூண்பிழைப்புக்கு விடப்பட்ட நிலம்
13. ஒரு போகுஒரே தன்மையுடைய நிலம்
14. இதைபுன்செய் சாகுபடி நிலம்
15. கூநிலம்
16. குறிஞ்சிமலையும் மலை சார்ந்த இடமும்
17. முல்லைகாடும் காடு சார்ந்த இடமும்.
18. மருதம்வயலும் வயல் சார்ந்த இடமும்
19. நெய்தல்கடலும் கடல் சார்ந்த இடமும்
20. பாலைபாலை நிலம்
21. கடறுபாலை
22. தெரிபாலை
23. உவர் நிலம்உப்பு தன்மை நிலம்
24. சுரம்பாலை
25. தண்பனைமருதநிலம்
26. காணபாட்சிஉரிமை நிலம்
27. கரம்புசாகுபடி செய்யாத நிலம்
28. கரம்பைவறண்ட களிமண் நிலம்
29. களர்சேற்று நிலம்
30. கொல்லைமுல்லை நிலம்
31. சோலைமுல்லை நிலம்
32. கடுந்தரைஇறுகிய நிலம்
33. கொத்துக்காடுகொத்தி பயிரிடுவதற்குரிய நிலம்.
34. விளை நிலம்விளையக்கூடிய இடம்
35. நன்செய் நிலம்நீர் கிடைக்கக்கூடிய, பாசனம் உள்ள இடம்
36. தோட்டக்கால்கிணற்று பாசனம்
37. இறவைகிணற்று பாசனம்
38. நதி மாதுருகம்ஆற்று பாய்சல் நிலம்
39. நீராம்பம்நீர்பாசன வசதி உள்ள நிலம்
40. நீர் நிலம்நன்செய் நிலம்
41. திருத்துநன்செய் நிலம்
42. கழனி நிலம்நன்செய் நிலம்
43. காணிநன்செய் நிலம்
44. புன்செய் நிலம்மழையை நம்பும் பாசனம்
45. காடுபுன்செய் நிலம்
46. வானம் பார்த்த பூமிபுன்செய் நிலம்
47. செய்கால் கரம்புதரிசாக விடப்பட்ட நிலம்
48. தரிசுசாகு படி செய்யப்பாடமல் கிடக்கும் நிலம்
49. தரைபூமி.
50. பூமிநிலம்
51. கீழ்மடைகிழக்கே இருக்கும் நீர் பாசன இடம்
52. மேல மடைமேற்கே இருக்கும் நீர் பாசன இடம்
53. கடை மடைஇறுதியாக நீர்பாயும் இடம்
54. தினைபுனம்தினை வகைகள் விளையும் நிலம்
55. திகர்மேட்டு நிலம்
56. உள்ளடி நிலம்ஏரியை அடுத்துள்ள நிலம்
57. ஆற்றுபகைநதிநீர் பாசனத்தால் உள்ள வண்டல் நிறைந்த நிலம்
58. கல்லாங்குத்து நிலம் – ( கற்கள் மிகுந்து காணப்படும் நிலம்)
59. வட்டகை நிலம்சுற்றிலும் வெளியிதப்பட்ட நிலம்
60. அசும்புவழுக்கு நிலம்
61. மேய்ச்சல் நிலம்கால்நடை மேயும் நிலம்
62. செம்பாட்டு நிலம்செம்மண் நிலம்
63. சேவலைசெம்மண் நிலம்
64. கரிசல்கருப்புமண் நிலம்
65. களிதரைகளிமண் நிலம்
66. நத்தம்கிராமத்தில் வீட்டுமனை
67. மேட்டு கழனிமேடான நன்செய்
68. பள்ளக்காடுபள்ளமான புன்செய்
69. பயிரிலிதரிசு நிலம்
70. பழந்தரைநீண்ட நாள் சாகுபடியில் இருந்து வளம் குன்றிய நிலம்
71. புழுதி காடுபுழுதியாக விடப்பட்ட புன்செய்
72. புண்புலம்தரிசு நிலம்
73. புன்னிலம்வறண்ட பயனற்ற நிலம்
74. மானாவரரிமழை நீரால் சாகுபடி
75. மாநிலம்
76. மென்பால்மருதநிலம்
77. வறுநிலம்பாழ்நிலம்
78. விடுநிலம்தரிசு நிலம்
79. மெல்லடி புலம்புநெய்தல் நிலம்
80. பார்கடினமான நிலம்
81. பற்றுகட்டுகுடியுரிமை நிலம்
82. பங்கு காடுகூட்டு பங்கு காடு
83. பாழ் நிலம்விளைச்சலுக்கு உதவாத நிலம்
84. புறவுமுல்லை நிலம்
85. புறணிமுல்லை நிலம்
86. விருந்திஒருவர் பிழைப்புக்கு மானிய நிலம்
87. விதைப்பாடுகுறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்
88. வித்துப்பாடுகுறிப்பிட்ட அளவு விதை விதைப்பதற்குரிய நிலம்
89. முதை புனம்நெடுங்காலம் பயன்பாட்டில் உள்ள நிலம்
90. மானியம்கோயில் நிர்வாகம் அறச்செயல்கள் போன்றவற்றிற்கு   முற்காலத்தில் வழங்கப்பட்ட வரியில்லாத நிலம்
91. மனைவீடு கட்டுவதற்கான நிலம்
92. போடுகால்தரிசு நிலம்
93. பொது நிலம்பிரிக்கபடாத நிலம்
94. மஞ்சள் காணிசீதன நிலம்
95. பொன்காணிசீதன நிலம்
96. பூசாவிருத்திகோயிற் பூசைக்கு விடப்பட்ட மானியம்
97. புறம்போக்கு நிலம்சாகுபடிக்கு ஏற்றவை அல்ல () பொது பயன்பாட்டிற்கு விடப்பட்ட தீர்வை விதிக்கப் படாத நிலம்.
98. புறம்இறையிலி நிலம்
99. புறவுஅரசனால் அளிக்கப்பட்ட மானிய நிலம்
100. பிரம்ப தேயம்பிராமணர்க்கு தரப்பட்ட மானிய நிலம்
101. பாதவக்காணிகோயில் பணியாளர்களுக்கு படியாக தரப்பட்ட நிலம்
102. படிபுறம்கோயில் அர்ச்சகருக்கு அளிக்கப்படும் மானிய நிலம்
103. வெட்டுக்காடுதிருத்தியமைத்த காட்டு நிலம்
104. வேலிநிலம்
105. வெங்கள் மண்சூரிய வெப்பத்தால் சூடேறிய மண்
106.தர்காசி நிலம்தரிசு நிலம்  என்று இன்னும்                    சொல்லிக் கொண்டே போகலாம்

No comments:

Post a Comment