Thursday, December 5, 2019

சிவன் கோயிலில் சடாரி வைக்கும் அதிசயம்! - இது திருநல்லூர் ஸ்பெஷல்!



             நாம் பெருமாள் கோயில்களுக்குச் செல்லும்போது, நமக்கு தீர்த்தப் பிரசாதம் கொடுப்பதுடன், நமக்கு பகவானின் திருவடி ஸ்பரிசம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பகவானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரியை நம் தலையில் வைத்து எடுப்பார்கள். அப்படி பெருமாள் கோயில்களில் சடாரி வைப்பதுபோலவே, ஒரு சிவன் கோயிலிலும் சடாரிவைத்து எடுக்கிறார்கள். பக்தர்களின் தலையில் சடாரி வைக்கும் நடைமுறை, தொன்மைச் சிறப்பு வாய்ந்த, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது.

          இந்த ஆச்சர்யமான பழக்கத்துக்குக் காரணம், சிவபெருமான் திருநல்லூரில் திருநாவுக்கரசரின் முடியில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வாதம் செய்ததுதான். இதன் பின்னணியில் ஒரு சம்பவம் சொல்லப்படுகிறதுதிருச்சத்திமுற்றம் தலத்தைத் தரிசித்த திருநாவுக்கரசர், ``இறைவா, யமன் என்னைக் கொண்டுபோகு முன்னர் உன் திருவடியை என் தலை மீது சூட்டி ஆசீர்வாதம் செய்யுங்கள்" என மனமுருகி வேண்டினார்
திருச்சத்திமுற்றத்தில் வேண்டிக்கொண்ட திருநாவுக்கரசருக்கு, நல்லூர் திருத்தலத்தில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வதித்தார். அதை நினைவுகூரும் வகையில், இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சிவபெருமானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரிவைக்கப்படுகிறது.
திருநாவுக்கரசருடைய தலைமீது இறைவன் தன் திருவடியை வைத்து ஆசீர்வதித்த நிகழ்வு நடந்த இந்த நல்லூர்த் திருத்தலம் பல்வேறு சிறப்புகளை உடையது.
  • தினமும் ஐந்து முறை சிவலிங்கம் நிறம் மாறுகிறது. ஆதலால் கல்யாண சுந்தரேஸ்வரர் `பஞ்சவர்ணேஸ்வரர்என்று அழைக்கப்படுகிறார்.
  • நவகிரகம் எதுவும் இல்லாத சிவ திருத்தலம் இது.
  • குந்திதேவிக்கு தோஷ நிவர்த்தி அளித்தசப்த சாகரதீர்த்தம் இருக்கும் இடம்.
  • யானை நுழைய முடியாத மாடக் கோயில் இது.
            இத்தனை சிறப்புகள் வாய்ந்த பஞ்சவர்ணேஸ்வரர் கோயில், தஞ்சை - கும்பகோணம் சாலையில் பாபநாசம் அருகிலிருக்கும் திருநல்லூர் கிராமத்தில் அமைந்திருக்கிறதுபஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலுக்கு முன் பெரிய 'சப்த சாகரம்' எனும் தீர்த்தக்குளம் காணப்படுகிறது. கும்பகோணம் மகாமகக் குளத்தின் பெருமைக்கு ஈடாக இது போற்றப்படுகிறது. கர்ணனை ஆற்றில் விட்டதால் ஏற்பட்ட பாவத்தை குந்தி தேவி சப்த சாகரத் தீர்த்தத்தில் போக்கிக்கொண்டாள். 'சப்த சாகரம்' என்றால் ஏழு கடல்கள் ஒரே இடத்தில் சங்கமித்திருக்கும் இடம் என்று பொருள்மாசி மகம் அன்று கும்பகோணம் மகாமக குளத்தில் மூழ்கினால் பெறக்கூடிய புண்ணியம், சப்த சாகரத்தில் நீராடி, பஞ்சவர்ணேஸ்வரரை வழிபடுபவர்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்

                மாடக் கோயில் வகையைச் சேர்ந்த இந்தத் திருக்கோயில், கோச்செங்கட் சோழன் கட்டியது. யானை உள்ளே புக முடியாதவாறு கோயில் அமைந்திருக்கிறது. முதன்மையான வாயிலும், அடுத்தடுத்த வாயிலும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்காமல், சில படிக்கட்டுகளைக் கடந்தே ஏறிச் சென்று மூலவர் சந்நிதியை அடைய இயலும்.

           இந்த இறைவனின் திருமேனி ஆன்மிக மற்றும் அறிவியல் அற்புதங்களில் ஒன்று. தினமும் ஆறு நாழிகைக்கு ஒருமுறை நிறம் மாறிக்கொண்டிருக்கும் சுயம்பு லிங்கம். தாமிரம், இளஞ் சிவப்பு, தங்கம், நவரத்தினப் பச்சை... எனத் தொடர்ந்து நிறம் மாறிக்கொண்டே இருக்கிறார் பஞ்சவர்ணேஸ்வரர். கடைசி ஆறு நாழிகையில் என்ன நிறம் என்று அடையாளம் காண இயலாதபடி காட்சியளிக்கிறார் சிவபெருமான்.
அம்பாளின் பெயர் கல்யாண சுந்தரி. அகத்தியருக்கு கல்யாணக் கோலத்தில் காட்சி தந்ததால், இறைவனும் தாயும் `கல்யாண சுந்தரரேஸ்வரர்என்றும், `கல்யாண சுந்தரிஎன்றும் அழைக்கப்படுகிறார்கள். அம்பாளை கிரிசுந்தரி (மலையழகி) என்றும் அழைக்கிறார்கள்.

            சிவபெருமானும் அம்பாளும் கல்யாணக் கோலத்தில் காட்சி தருவதால்திருமணத் தடை உள்ளவர்கள் சிவனது பாதமான 'சடாரி'யைத் தம் தலையில் சூடி ஆசி பெற்று வந்தால் விரைவில் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment