Thursday, January 14, 2021

தத்தாத்ரேய ஜெயந்தி:

 




              மார்கழி மாதம் பௌர்ணமி தினத்தில் தத்தாத்ரேயர் அவதார தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வைகாசி மாதம் தசமி திதியில் தத்தாத்ரேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தத்தாத்ரேயர் உருவம் வித்தியாசமானது மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார். காளையும் அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன. உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள்.

                 ஸ்ரீதத்தாத்ரேயர் ஜெயந்தி தத்தாத்ரேயர் வழிபாடு ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம். உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேயருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது தத்தாத்ரேயர் அவதார தினத்தில் ஸ்ரீ தத்தாத்ரேய காயத்ரி மந்திரம் கூறி வணங்கலாம். 'ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே திகம்பராய தீமஹி தந்நோ தத்த பிரசோதயாத் ' என்ற மந்திரத்தை தினசரி ஜெபித்து வழிபட, நம் வாழ்வு அற்புதங்களால் நிறைந்து வளமுடன் காணப்படும் என்பது உண்மை என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்

'ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய  தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்'

1. தத்தாதிரிபுரம் தத்தாத்ரேயர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், தத்தாதிரிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்

2. தத்தாத்ரேயர் கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் போகும் பாதையில் *குடவாசல்* என்னும் ஊர் இருக்கிறது.   அங்கிருந்து நான்கு கி.மீ. தொலைவில் சேங்காலிபுரம் என்னும் கிராமம் உள்ளது.   அங்கு தத்த குடீரம் என்னும் கோவிலில் தத்தாத்ரேயரைத் தரிசிக்கலாம்.

இவருக்கு சேந்தமங்கலம், சுசீந்தரம் தானுமலையான் கோவில் மற்றும் ஆற்காடு அருகில் உள்ள வாலாஜாபாத் தன்வந்திரி பீடத்திலும் இவருக்கு தனிச்சன்னிதி உண்டு.

No comments:

Post a Comment