Followers

Thursday, January 14, 2021

சிறுநீரகங்களின் அமைப்பு

 

                                    விஷத் தன்மை கொண்ட கழிவுப் பொருட்களை நீக்கி சிறுநீரகங்கள், சிறுநீரை உருவாக்குகின்றன. அப்படி சிறுநீரகங்களில் உருவான சிறுநீரானது யுரீட்டர் எனும் சிறுநீர்க் குழாய் மூலமாக சிறுநீர்ப் பைகளுக்குச் செல்கிறது. இறுதியில் குழாய் வழியாக வெளியேற்றப்படுகிறது.

* மிகப்பெரும்பான்மையோர் (ஆணோ அல்லது பெண்ணோ) இருசிறுநீரகங்களைப் பெற்றிருக்கின்றனர்.

* அடிவயிற்றுக்கு சற்று மேலும் முதுகெலும்பின் இரு பக்கங்களுக்கு ஒன்றாக இவை இருக்கின்றன.

* சிறுநீரகங்களாவன அடிவயிற்றின் ஆழ்ப்பகுதியில் உள்ளே அமைக்கப்பட்டிருப்பதால், சாதாரணமாக அவை இருப்பதை உணர முடியாது.

* சிறுநீரகங்கள் ஒரு ஜோடி அவரைக் கொட்டைகள் போல இருக்கும். பெரியோர்களுக்கு, ஒரு சிறுநீரகம் சுமார் 10செ.மி. நீளம் இருக்கும். 6 செ.மி. அகலம் இருக்கும் மற்றும் 4 செ.மி. கனம் இருக்கும். சுமார் 150 லிருந்து 170 கிராம்கள் எடை கொண்டது.

* சிறுநீரகங்களில் உருவான சிறுநீர், சிறுநீர்ப்பையை குழாய்கள் மூலம் சென்று அடைகிறது. அந்தக் குழாய் சுமார் 25 செ.மி. நீளமுடைய ஒன்றாகும். அதன்வழியாகவே சிறுநீர்செல்கிறது. தனிச்சிறப்பு குணமுடைய தசைகளால் அவை உருவானவை.

* சிறுநீர்ப் பையானது ஒரு வெற்றிடமாக இருக்கும். அங்கம் தசைகளால் ஆனது அடிவயிற்றுக்கு கீழும் பின்புறமும் அமைந்திருக்கின்றன.

* வயதானவர்களுக்கு இந்த சிறுநீர்ப் பையானது சுமார் 400 லிருந்து 500 மி.லி. வரை சிறுநீரைச் சேகரித்து வைக்கும். அந்தப் பை நிரம்பியவுடன், சம்பந்தப் பட்டவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

* சிறுநீர் அந்தயுரீத்ரா எனும் குழாய்கள் வழியே வெளிவருகிறது. பெண்களுக்கு இந்த குழாய் சற்று சிறியதாக இருக்கும். ஆண்களுக்கு அதைவிட நீளமாக இருக்கும்.

சிறுநீரகங்கள் உடலுக்கு ஏன் தேவை?

* ஒவ்வொரு நாளும் நாம் வித விதமான உணவு வகைகளை உண்பது மட்டுமல்லாமல், வெவ்வேறு அளவு உண்கிறோம்.

* நாம் எடுத்துக் கொள்ளும் நீரின் அளவு, உப்புக்களின் அளவு மற்றும் அமிலங்களின் அளவுகளும் அன்றாடம் வேறுபட்டுக் கொண்டிருக்கின்றன.

* தொடர்ச்சியாக இடைவிடாது உணவுப் பொருளை சக்தியாக மாற்றும் பணியானது விஷத்தன்மை கொண்டபொருட்களை அனவரதமும் உற்பத்தி செய்தவண்ணம் இருக்கிறது.

* இந்த செயல்பாடுகள் எல்லாமாகச்சேர்ந்து, உடலில் இருக்கும் திரவத்தின் அளவையும், மின்சாரம் பாயும் திரவ ஊடகங்களின் அளவையும் அமிலங்களின் அளவையும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. தேவையற்ற கழிவுப்பொருட்கள் கொண்டுவரும் விஷத்தன்மை சில சமயங்களில் எல்லையற்றுப்போகலாம்.

* சிறுநீரகங்கள் உடலிலிருந்து விஷம் தங்கியுள்ள அமிலங்களையும் தீய திரவங்களையும் அகற்றுகின்றன. அவை செய்யும் மிக மிக முக்கியமான சுத்திகரிப்பு தொழில் இதுவாகும். அதே சமயத்தில் உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலைப்படுத்துகிறது. அதே சமயத்தில் மின்சாரம் பாயும் திரவங்களையும், அமிலங்களின் அளவையும் சமநிலைப் படுத்திக் கொண்டே செல்கிறது.

சிறுநீரகங்களின் செயல்பாடுகள் என்ன?

சிறுநீரகங்களின் மிக முக்கியமான செயல்பாடு சிறுநீரை உருவாக்கி இரத்தத்தை சுத்திகரிப்பதாகும் அவை கழிவுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுகின்றன. உபரியாகவும் வீண் பொருட்களாகவும் உடலில் தங்கி விடும் உப்புக்கலையும் இதர இரசாயனங்களையும் அவை வெளியேற்றி விடுகின்றன. சிறுநீரகங்களின் முக்கியமான வேலைகள் கீழ்க்கண்ட வகையில் சித்தரிக்கப்படுகின்றன

கழிவுப் பொருட்களை அகற்றுதல்

சிறுநீரகங்களின் மிக முக்கியமான வேலையானது உடலுக்குள் சேரும் கழிவுப் பொருட்களை அகற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துவது ஆகும். நாம் உண்ணும் உணவில் புரதச்சத்து இருக்கிறது. புரதமானது உடல் வளர்ச்சிக்கும் உடலை அவ்வப்போது புதுப்பிக்கவும் தேவைப்படுகிறது. ஆனால் அப்படி புரதத்தை உடல் உட்கிரகித்துக் கொள்ளும்பொழுது, கழிவுப் பொருட்களை உருவாக்கி விடுகிறது. இந்த கழிவுப்பொருட்கள் உடலில் சேரச்சேர விஷத்தன்மை கூடுகிறது. சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டி கழிவுப் பொருட்களையும் வடிகட்டி சிறுநீருடன் வெளியேற்றி விடுகிறது.

கிரியட்டினைனும் யூரியா எனும் இரு உப்புக்களும் கழிவுப் பொருட்களிலேயே மிக முக்கியமானவை. அவை உடலில் இருக்கும் அளவை எளிதாக அளந்து விடலாம். இரத்தத்தில் அவை இருக்கும் அளவே சிறுநீரகங்களின் வேலைத் திறனைக் காட்டுகிறது. இரு சிறுநீரகங்களும் பழுதாகிவிடும்பொழுது, இரத்தத்தில் இருக்கும் மேற்கண்ட இரு உப்புக்களின் அளவு மிக அதிகமாகி விடுகிறது

உபரியான தேவையற்ற திரவங்களை வெளியேற்றுவது

சிறுநீரகங்களின் இரண்டாவது முக்கிய செயல்பாடு உடலில் தேவையற்று உபரியாகத் தங்கி விடும் நீரை சிறுநீராக மாற்றி வெளியேற்றுவது ஆகும். தேவையான அளவே உடலில் நீரை வைத்துக் கொள்ள உதவுவதாகும். இப்படித்தான் நீரின் சமநிலையை சிறுநீரகங்கள் பாதுகாத்துவருகின்றன.

சிறுநீரகங்கள் பழுதடைந்து விடும்பொழுது, அவையால் உபரியான நீரை வெளியேற்ற முடிவதில்லை. அப்படியே உடலிலேயே தங்கி விடும் நீரானது உடலை வீங்கச்செய்துவிடுகிறது.

No comments:

Post a Comment