மிளகுக்கீரை (புதினா) நிறைய உடல் கோளாறுகளுக்கு பயன்படுகிறது.
இது அதிக நெடியுடைய மூலிகை. மின்ட் குடும்பத்தைச் சார்ந்த இந்த தாவரத்தில் ஏராளமான
மருத்துவ குணங்கள் பொதிந்து உள்ளன. இதை வாயில் போட்டு மென்றாலே போதும் நல்ல புத்துணர்ச்சியை
கொடுக்கும். இதை டீ போட்டு குடிக்கலாம் இல்லையென்றால் எண்ணெய் வடிவத்தில் கூட பயன்படுத்தலாம்.
அதிகமாக இதை எடுத்துக் கொள்ளும் போது பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே சரியான
அளவு எடுத்து பலன்களை அள்ளுங்கள். இது எந்த மாதிரியான நன்மைகளைத் தருகிறது என்பதை காணலாம்.
செரிமானக் கோளாறு எனப்படும் சீரண சக்தி இந்த மிளகுக்கீரையை
வெறுமனே வாயில் போட்டு மென்று தின்றாலே உங்கள் சீரண சக்தி அதிகரிக்கும். வயிறு சம்பந்தமான
அனைத்து பிரச்சினைகளுக்கும் இது சிறந்த மருந்து. வயிற்று வலி, வயிறு மந்தம்,சீரணக்
கோளாறுகள் எல்லாவற்றையும் இந்த ஒன்றே சரி செய்கிறது.
உங்களுக்கு அடிக்கடி டென்ஷன், தலைவலி ஏற்பட்டால் இந்த
மிளகுக்கீரையை கையில் எடுங்கள். பத்தே நிமிஷத்தில் தலைவலி பறந்து போய் விடும். இதற்கு
மிளகுக்கீரை எண்ணெய்யை தலையில் தடவி வந்தால் போதும். மிளகுக்கீரை டீயை தொடர்ந்து குடித்து
வந்தால் மன அழுத்தம், டென்ஷன், அனிஸ்சிட்டி குறைந்து விடும். இதற்கு காரணம் இதிலுள்ள
மெந்தால் தசைகளை ரிலாக்ஸ் செய்கிறது. இனி தலைவலி உங்களை நெருங்காது. வாய் துர்நாற்றம்
சில பேருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும். இதனால் மற்றவர்கள் முன்னிலையில் சங்கடத்தை
சந்திப்பார்கள்.இந்த வாய் துர்நாற்றத்தை இரண்டு மிளகுக்கீரை இலையை வாயில் போட்டு மென்றாலே
போக்கி விடலாம். இதிலுள்ள ஆன்டி பாக்டீரியல் பொருள் வாய் துர்நாற்றத்திற்கு காரணமான
பாக்டீரியாவை அளிக்கிறது.
சாப்பிட்டால் என்னாகும்னு தெரியுமா? இனிமே சாப்பிடாதீங்க
பல் பிரச்சினை இதன் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் பற்களின் இடுக்குகளில் தங்கும் உணவுப்
பொருட்களால் வளரும் பாக்டீரியாக்களை அளிக்கிறது. அதனால் தான் இதை நிறைய டூத் பேஸ்ட்
தயாரிக்க பயன்படுத்துகின்றனர். எனவே இது நம் வாய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
மாதவிடாய் வலிகள் இந்த மிளகுக்கீரை தசைகளை ரிலாக்ஸ்
செய்து மாதவிடாய் வலிகளை போக்குகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியை
குறைக்கிறது. இதை மாத்திரை வடிவில் கூட மாதவிடாயின் முதல் 3 நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.
நல்ல நிவாரணம் கிடைக்கும். பெப்பர் மின்ட் டீ 2-3 கப் தண்ணீரை கொதிக்க விடுங்கள் தண்ணீர்
கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் இலைகளை போடுங்கள். இலைகளை நன்றாக கசக்கி போடுங்கள் சில
நிமிடங்கள் கொதிக்க விடவும் பிறகு தேன் கலந்து வடிகட்டி குடியுங்கள். உங்க எல்லா பிரச்சினைக்கும்
இந்த டீ போதும்ங்க
No comments:
Post a Comment