அற்புத பானம்
நுரையீரல் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம்
மற்றும் வலிமையை அதிகரிக்க ஓர் அற்புத பானம் ஒன்று உள்ளது. அதைப் பருகினால் நுரையீரலில்
உள்ள சளி மட்டுமின்றி, இதர நச்சுப் பொருட்களும் வெளியேற்றப்பட்டுவிடும்.
பானம் செய்ய தேவையான பொருட்கள்: *
தேன் - 100 கிராம்
* தண்ணீர் - 100 மிலி * எலுமிச்சை சாறு - 4 டேபிள் ஸ்பூன் * இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
* ஓட்ஸ் - 50 கிராம்
செய்முறை: *
முதலில் ஓட்ஸை நீரில்
ஒருமுறைக் கழுவிக் கொண்டு, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 100 மிலி
நீரை ஊற்றி, துருவிய இஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும். * பின்பு அதனை அடுப்பில் ஓட்ஸ்
வேகும் வரை அடுப்பில் வைத்து இறக்கி குளிர வைக்கவும். * பிறகு அதைக் குளிர வைத்து,
தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஒர் இரவு முழுவதும் ஊற வைத்து, பின் அந்த
பானத்தை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 30-40 மிலி பருக வேண்டும். இந்த பானத்தை தொடர்ந்து 40 நாட்கள் பருகி வந்தால், சளி முற்றிலும் வெளியேறி, நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைந்திருப்பதை நன்கு உணரலாம். வேண்டுமானால் இந்த முறையை 15 நாட்கள் இடைவெளி விட்டு மீண்டும் 40 நாட்கள் பின்பற்றலாம்.
சளியை நீக்கும் வேறொரு வழி நுரையீரலில் தேங்கியிருக்கும்
சளியை உடனடியாக வெளியேற்ற மற்றொரு சிறந்த வழி ஆவிப் பிடிப்பது. அதற்கு நீரை நன்கு கொதிக்க
வைத்து, ஒரு போர்வையினுள் 10-15 நிமிடம் நீராவிப் பிடிக்க வேண்டும். இப்படி சளி பிடித்திருப்பவர்கள்
செய்து வந்தால், சளி கரைந்து வெளியேறிவிடும்.
No comments:
Post a Comment