கிட்னியை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்… இதை மட்டும் செய்யுங்க சிறுநீரகக்கல், செயல் இழப்பு தொல்லை இனி இல்லை!
பொதுவாக மனித உயிரின் அடிப்படையான செயல்பாடுகளை மேலாண்மை செய்வதே சிறுநீரகங்கள்தான். சிறுநீரகம் பாதிக்கப்படும் போது கழிவுகள் வெளியேறாமல் உடலுக்கு உள்ளேயே தங்கிவிடும். அதனால்தான் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. சிறுநீரகப் பாதிப்பானது எதனால் வருகிறது என்பதையும் அறிந்துகொள்ள வேண்டியது இப்போது அவசியமாகிறது. சரியாக தண்ணீர் குடிக்காமல் இருப்பது, அதிக அளவுக்கு சக்தி வாய்ந்த டோசேஸ் கூடிய மாத்திரைகளை சாப்பிடுவது, அதேபோல் கவனிக்காமல் விட்டுவிட்ட ரத்த அழுத்தம், சர்க்கரை நோயும் சிறுநீரகப் பாதிப்புக்கு காரணமாக இருக்கிறது.
இதையெல்லாம் சில உணவுப்பழக்கத்தின் மூலமே தவிர்க்க முடியும். துளசி இலை சாற்றோடு தேன் கலந்து ஆறுநாள்கள் சாப்பிட்டால் சிறுநீரகக் கல் உருவாகாமல் தடுக்கலாம். கூடவே சிறுநீரகக் கற்கள் இருந்தாலும் கரைஞ்சிடும். இதேபோல் வாழைத்தண்டு, பூண்டு, பூசணிக்காய், வெங்காயம், கேரட், முள்ளங்கி கத்திரிக்காய், பச்சைப்பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்ஆகிய காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்த்துகிட்டால் நன்கு சிறுநீர் பிரியும். இதனால் சிறுநீரகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதேபோல் ஓம இலையும் சிறுநீரக செயல்பாட்டுக்கு ரொம்ப நல்லது. இதை தினமும் உணவில் சேர்த்தால் சிறுநீரகம் சீராகும். இதேபோல் ஓமத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த தண்னீரை வாரத்துக்கு இருமுறை குடிக்கலாம். இதேபோல் புளியில் உள்ள டார்டாரிக் அமிலம் சிறுநீரகத்தில் ஆக்சலேட் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. நாம் சாப்பாட்டில் கொஞ்சம் புளி கூடிவிட்டாலே புளிக்கிறது என சொல்லி ஒதுக்கிவிடுவோம். ஆனா இந்தோனேசியா நாட்டு மக்களுக்கு சாப்பாட்டில் அதிக அளவில் புளி சேர்த்துக் கொள்வதால்தான் சிறுநீரகப் பிரச்னையே வருவதில்லை எனத் தெரியவந்துள்ளது. இதேபோல் மஞ்சளில் இருக்கும் சத்துகள் சிறுநீரக செயல் இழப்பைத் தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்ச்சி அடையவும் செய்யுமாம்.
No comments:
Post a Comment