மகாளய பட்சம் அமாவாசை
. புரட்டாசியில்
வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும்.
தந்தை, தாத்தா, கொள்ளுத்
தாத்தா, தாயார், பாட்டி,
கொள்ளுப் பாட்டி (தாயார் உயிருடன்
இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி,
எள்ளுப் பாட்டி), தாய் வழித் தாத்தா
பாட்டி என மூன்று தலைமுறையினர்,
நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் அனைவருக்குமாக இந்தக்
காலங்களில் தர்ப்பணம் செய்யலாம். சிலருக்குக் கர்ப்பத்திலேயே கரு கலைந்திருக்கலாம்; சிறு
குழந்தையாக இருக்கும்போதே இறந்திருக்கலாம்; சிலர், விபத்து போன்று
அகால மரணம் அடைந்திருக்கலாம். அந்த
ஆத்மாக்கள் அனைத்தையும் திருப்தி அடையச் செய்வதற்கான சிறந்த
நாளே மகாளய பட்சம்.
2021
மகாளய பட்சத்தில் விசேஷமாக உள்ள நாள்கள்:
21-9-21
பிரதமை திதி
22-9-21
துவிதியை
23-9-21
திருதிதியை
24-9-21
சதுர்த்தி (மஹாபரணி)
25-9-21
பஞ்சமி
26-9-21
ஷஷ்டி
28-9-21
ஸப்தமி (மஹா வியதீ பாதம்)
29-9-21
மத்யாஷ்டமி
30-9-21
நவமி
1-10-21
தசமி
2-10-21
ஏகாதசி
3-10-21
துவாதசி
4-10-21திரயோதசி
5-10-21
சதுர்தசி ( போதாயன அமாவாசை)
6-10-21 மகாளய அமாவாசை
மகாளய பக்ஷ நாள்களில் கடைப்பிடிக்க வேண்டியவை:
1.
தினமும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்.
2.
தாம்பத்யம் வைத்துக் கொள்ளக் கூடாது.
3.
சைவ உணவை மட்டும் சாப்பிட
வேண்டும்.
4.
உணவில் பூண்டு, வெங்காயம், சேர்ப்பதை
தவிர்க்க வேண்டும்.
5.
இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்முடன்
வசிப்பதால் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.
6.
நம் முன்னோர்களை வழிபட்ட பின்னரே, பூஜைகளை
செய்ய வேண்டும்.
7. தர்ப்பணம் செய்பவர்கள், தினமும் தர்ப்பணம் செய்த
பின்னர் வீட்டில் பூஜை செய்ய விளக்கேற்றி
வழிபட்டு அன்றாட பணிகளை தொடங்க
வேண்டும்.
சிறப்பு பலன்கள்:
தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்
No comments:
Post a Comment