Wednesday, November 17, 2021

கட்டுமான கம்பி விஷயம்

 கட்டுமான கம்பி விஷயம்

வீடு கட்டும் எல்லோருக்கும் குழப்பமாய் இருக்கும் மற்றொரு விஷயம் இந்த கம்பி விஷயம் தான்.

கட்டிடத்திற்கு எப்படி சிமெண்ட், மணல், செங்கல் போன்றவற்றின் தரம் முக்கியமோ அதேபோல் கம்பியின் தரமும் முக்கியம்.

கட்டுமானத்திற்கு உபயோகப்படுத்தும் கம்பிகளில் மூன்று வகை உண்டு, ஒன்று

*சாதாரண கம்பி,

* இரண்டு முறுக்கு கம்பி.

* மூன்றாவது TMT முறுக்கு கம்பி

சாதாரண கம்பி.

சாதாரண கம்பி என்றால் ஆரம்ப காலங்களில் அதாவது கான்க்ரீட் உபயோகப்படுத்த ஆரம்பித்த காலங்களில் வெறும் உருட்டு கம்பிகளே உபயோகப்படுத்த பட்டது அதுவே சாதாரண கம்பி என்பார்கள். இப்போதும் ஜன்னல்கள் அல்லது வென்டிலேட்டர்களில் குறுக்கே உருட்டு கம்பிகள் உபயோக படுத்துகின்றோமே அந்த மாதிரி கம்பிதான்.

முறுக்கு கம்பிகள்.

நாம் சாதாரணமாக ஒரு துணியை கயிறாக பயன்படுத்த வேண்டி இருந்தால் என்ன செய்வோம் அதை ஒரு முறுக்கு முறுக்கி அதனை பலப்படுத்துவோம் தானே அதேதான் நமக்கே தெரியுமல்லவா சாதாரணமாக துணியை நாம் பயன்படுத்தினால் அதன் டெம்பர் குறைவு என்பது அதே விஷயம்தான் கம்பியில் பயன்படுத்தி தயாரிக்கப்படுவது முறுக்கு கம்பி. இது சாதாரண கம்பியை விட அதிக வலுவானது.

#TMT முறுக்கு கம்பிகள்.

முறுக்கு கம்பியை சூடு பண்ணி உடனடியாக குளிர்வித்து வலுவூட்டப்படும் கம்பியே TMT கம்பி (Thermo-Mechanically Treated Bars). இது முறுக்கு கம்பியை இன்னும் வலுவாக்கி தருகிறது. இதன் மூலம் நமது கம்பி பயன்பாட்டை 17% வரை குறைக்கிறது.  இப்போது உங்களுக்கே தெரிந்திருக்கும் என்ன கம்பியை உபயோக படுத்த வேண்டும் என்று.

இன்னும் சில விஷயங்கள் :

இந்திய தர நிர்ணய கட்டுப்பாட்டு ISO அமைப்பு கம்பிகளின் தரத்தையும் நிர்ணயித்துள்ளது. Fe415, Fe500 என்ற பிரிவுகளை கட்டுமானத்திற்கு என்று நிர்ணயித்து உள்ளது.

Fe415 என்பது ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 415 N (நியூட்டன்) அளவு இழுவிசை வலிமை கொண்டதாகும்,

ஒரு கிலோகிராம் = 9.81 நியூட்டன்

415/ 9.81 = 42.3 Kgf /சதுர மில்லிமீட்டர் (கிலோகிராம் இழுவிசை)

Fe415 என்ற குறியீடு கம்பி ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 42.3 கிலோகிராம் இழுவிசை வலிமை கொண்டது.

அதேபோல்

Fe500 என்பது ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 500 N (நியூட்டன்) அளவு இழுவிசை வலிமை கொண்டதாகும்,

ஒரு கிலோகிராம் = 9.81 நியூட்டன்

500/ 9.81 = 50.97 Kgf /சதுர மில்லிமீட்டர் (கிலோகிராம் இழுவிசை)

Fe500 என்ற குறியீடு கம்பி ஒரு சதுர மில்லிமீட்டர் அளவில் 50.97 கிலோகிராம் இழுவிசை வலிமை கொண்டது.

நாம் கம்பியில் பார்க்கும் 500 என்ற குறியீடு இந்த Fe500 என்ற அளவையே குறிக்கிறது.

சரி அது என்ன 500 D ?

Fe500 குறியீடு கம்பியையே சில சிறப்பு தரம் கூட்டப்பட்டு வருபவையே இந்த 500D என்ற வகை கம்பி அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா ?

சாதாரணமாக Fe500 வகை கம்பிகளில் கார்பன் அளவு 0.30 சதவிகிதம் இருக்கும் அதுவே 500Dயில் கார்பன் அளவு 0.25 சதவிகிதமே இருக்கும். அதேபோல் சல்பர் அளவு 500ல் 0.055 சதவிகிதம் மற்றும் 500Dல் 0.040 சதவிகிதம்.


No comments:

Post a Comment