Monday, November 1, 2021

1906-என்கிற எண்ணின் அத்தியாவசியம்

 1906-என்கிற எண்ணின் அத்தியாவசியம்

*1906-என்கிற எண்ணின் அத்தியாவசியம் பற்றி நம்மில் எத்தனை நபர்களுக்குத் தெரியும்*

 

 ஞாயிற்றுக்கிழமை எனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம் ஏற்பட்டதுநான் எரிவாயு சிலிண்டரை மாற்ற வேண்டியிருந்ததுபுதிய சிலிண்டரை இணைத்து இயக்கிய போது, ​​நான் வாயு கசிவதை உணர்ந்தேன்நான் புதியதாக மாற்றிய எரிவாயு சிலிண்டரின் திறப்பானை Lock செய்து மூடிவிட்டேன்.

 உடனடியாக  நான் ஒன்று அல்லது இரண்டு ஏரியா ஏஜென்சிகளை அழைத்தேன், ஆனால் அது ஒரு ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவர்கள்  திங்களன்று ரிப்பேர் செய்ய ஆட்கள் வருவார்கள் என்று சொன்னார்கள்.

 ஏதேனும் அவசர எண் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள விரும்பினேன், எனவே Google முயற்சித்தேன்கூகிள் *1906* என்ற என்னை அழைக்கச் சொல்லி காண்பித்ததுநான் *1906* என்ற எண்ணிற்கு முயற்சித்தேன்ஒரு பெண்மணி தொலைபேசியை எடுத்து  பேசினார்என் பிரச்சினையை அவரிடம் விளக்கினேன்ஒரு மணி நேரத்திற்குள் ஒரு நபர் பணிக்கு வருவார் என்று அவர் கூறினார்வருகைக்கு கட்டணம் ஏதும் இல்லை என்றும், ஒரு வேளை குழாய் (Tube) மோசமாகிவிட்டால் ஒழிய நான் அவருக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஒரு இளம் வயது நபர் அரை மணி நேரத்திற்குள் வந்து, எரிவாயு சிலிண்டரை சரிபார்த்து சிலிண்டருக்கு ஒரு புதிய வாஷரை மாற்றினார்இது ஒரு சிறிய வேலை என்றார்அவர் எந்த ஊதியத்தையும் ஏற்கவில்லைஇந்த சேவை மத்திய அரசிடமிருந்து எந்த நேரத்திலும் வழங்கப்படுகிறது

  அதே பெண்மணி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் போன் செய்து, வேலைக்கு வந்தாரா, தங்களுடைய பிரச்சினையை சரி செய்து தந்தாரா என்று சோதித்தார்.

  *1906* என்கிற இந்த தொலைபேசி எண்ணை உங்களுக்கு தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 இது 24x7 சேவையாகும், இது அனைத்து எல்பிஜி நிறுவனங்களையும் உள்ளடக்கியது.

No comments:

Post a Comment