Friday, January 12, 2024

வாயுத் தொல்லையை விரட்டும் வீட்டு மருத்துவம்

 வாயுத் தொல்லையை விரட்டும் வீட்டு மருத்துவம்

சாப்பிட்டா வாயு பிரச்சனை சாப்பிடாம இருந்தா வயிறு பிரச்சனை. இப்படி எங்க போனாலும் அணைகட்டுற வாயு பிரச்சனைக்கு முடிவு கட்ட நம்ம வீட்டு மருத்துவமே போதும்.

 

வாயுத் தொல்லையை விரட்டும் வீட்டு மருத்துவம்

வாயுத் தொல்லை இருக்கே வந்தாலும் பிரச்னை. வரலன்னாலும் பிரச்னை. சில பேருக்கு சாப்பிட்டா உடனே வாயுத் தொல்லை அதிகமாகிவிடும். ’ கல்யாண வீட்டுக்குப் போன நிம்மதியா சாப்பிட முடியல, விருந்துக்கு போனா பிடிச்சதைச் சாப்பிட முடியலஎன்று இப்படி நினைப்பவர்கள் பெரும்பாலும் வாயுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்களாகத் தான் இருப்பார்கள். இதற்கு நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் என்னவோ தற்காலிகமாக தான் இருக்கும். ஆனால் இந்த வாயுத் தொல்லையைச் சரி செய்ய எளிமையான இயற்கை வைத்தியம் உண்டு, வீட்டில் இருக் கும் பொருள்களைக் கொண்டே வாயுத் தொல்லையை இல்லாமல் செய்து விடலாம்.


வாயுத்தொல்லை பெரும் தொல்லை
வாயுத் தொல்லை உங்களை நிம்மதியாக இருக்கவே விடாது. வாயு வந்தாலே வயிற்றுக்கு சிக்கல் தான். ஒரு பக்கம் ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் வயிறுக்குள்ளே ஏதோ பாறாங்கல்லைக் கட்டி வைத்தது போல் கனமாக இருக்கும்.

சிலபேருக்கு வயிற்றில் வலி, வயிறு வீக்கம், நெஞ்செரிச்சல் என்று மாறி மாறி ஒன்று வந்துகொண்டே இருக்கும். அதிகப்படியான வாயு வயிற்றில் தங்குவதால் தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

வாயுப்பிரச்சனைக்கு என்ன காரணம்
வயிற்றில் வாயு தங்க இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. உணவு சாப்பிடும் போதோ அல்லது தண்ணீர் குடிக்கும் போதோ ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்கள் வயிற்றுக்குள் நுழைந்து வாயுத் தொல் லையை ஏற்படுத்துகிறது.

மற்றொரு காரணம் உணவு செரிக்கப்படும் போது வேதி வினையிலிருந்து வெளியாகும் கார்பன் டை ஆக் சைடு, ஹைட்ரஜன், மீத்தேன் போன்ற வாயுக்கள் வயிற்றினுள் தங்கி விடுகின்றன. இந்த வாயுக்கள் வெளியே றாமல் அப்படியே இருப்பதால் வயிற்றுக்குள் அசெளகரியம் ஏற்படுகிறது.

கார்போஹைட்ரேட் அதிகமான உணவுகளான பீன்ஸ், முட்டை கோஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை மற்றும் இனிப்பு கலந்த ஜூஸ் வகைகள் போன்றவை எளிதாக சீரணிக்காது. இவை குடலின் வழியாக சென்று அங்குள்ள பாக்டீரியாக்களால் சிதைக்கப்படும் போது வாயுவை வெளியேற்றுகிறது.

இப்படி வெளியாகும் வாயுத் தொல்லையை போக்க உங்கள் சமையலறைப் பொருட்களை கையில் எடுத்தாலே போதும். போதும் வாயு காணாமல் போகும்.

 



ஓம விதைகள்
ஓம விதைகள் தைமோல் என்ற சீரண சாறை உருவாக்குகிறது என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர். அஞ்சு சூட் . வாயுப் பிரச்சனை இருப்பவர்கள் 1/2 டீ ஸ்பூன் ஓம விதைகளைத் தண்ணீரில் போட்டு ஒரு நாளைக்கு என குடித்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

 

சீரகத் தண்ணீர்
சீரகத் தண்ணீர் வாயுத் தொல்லையைப் போக்க சிறந்த மருந்து. சீரகம் நமது உமிழ் நீரை அதிகமாக சுரக்கச் செய்து உணவை எளிதாக சீரணிக்க உதவுகிறது. இதனாலும் வாயுத் தொல்லை ஏற்படாமல் தடுக்க முடியும் என்கிறார் டாக்டர் அஞ்சு சூட்.


1
டேபிள் ஸ்பூன் சீரகத்தை 2 கப் தண்ணீரில் போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து சாப்பிட்ட பிறகு குடித்து வருங்கள். வாயுத் தொல்லை விரைவில் நீங்கி விடும்.


பெருங்காயம்
1 டீ ஸ்பூன் பெருங்காயத்தூளைச் சிறிது வெந்நீரில் கலந்து கொள்ளுங்கள். வாயுவை போக்கும் சிறந்த மருந்து பெருங்காயம். இது குடலில் அதிகமான பாக்டீரியாக்கள் உருவாகுவதைத் தடுத்து வாயுவை வெளியேற்றுகி றது.

ஆயுர்வேதத்தின் படி பெருங்காயம் வாத தோஷத்தைச் சரி செய்ய பயன்படுகிறது. ஆயுர்வேத வீட்டு வைத்தி யம்என்ற தனது புத்தகத்தில் டாக்டர் வசந்த் லாட், வாத தோஷத்தைப் பற்றி விளக்கியிருக்கிறார். இந்த வாத தோஷ பிரச்சனை என்பது வயிற்றில் உருவாகும் வாயுவைக் குறிக்கிறது. எனவே வாதத்தை சமன் செய்து விட் டால் வாத தொல்லை நீங்கிடும் என்கிறது ஆயுர்வேதம்.


இஞ்சி


ஆயுர்வேத மருத்துவரான வசந்த் லாட் தினமும் சாப்பிட்ட பிறகு 1 டீ ஸ்பூன் இஞ்சி மற்றும் 1 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து பருகி வாருங்கள். இப்படி இஞ்சி டீ குடித்து வரும் போது வாயுத் தொல்லை நீங்கி விடும். இஞ்சி இயற்கையாகவே வாயு விரட்டியாக செயல்படுகிறது என்கிறார்.


எலுமிச்சைச்சாறு மற்றும் பேக்கிங் சோடா
1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறுடன் 2 சிட்டிகை பேக்கிங் சோடாவை சேர்த்து ஒரு தம்ளர் நீரில் கலந்து கொள்ளுங் கள். இதைச் சாப்பிட்ட பிறகு குடிக்கும் போது வாயுத் தொல்லை நீங்கிடும்.


திரிபுலா
வாயுத் தொல்லை நீங்க திரிபுலா பவுடர் பயன்படுகிறது. 1/2 டீ ஸ்பூன் திரிபுலா பொடியை நீரில் போட்டு 5-10 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இதைக் குடித்து வந்தால் வாயுத் தொல்லை இருக்காது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிறு மந்தமாக இருக்கும்.


வாயுத் தொல்லை ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் இது அடிக்கடி ஏற்பட்டால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சனை, ஹார்மோன் சமநிலையின்மை, குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகளின் அறிகுறிகளாக கூட இருக்கலாம். எனவே இதை உடனடியாக சரி செய்வது நல்லது.

மருந்துகளை விட இயற்கை பொருட்களைப் பயன்படுத்தும் போது பக்க விளைவுகள் இருக்காது. ஆனால் இயற்கை பொருள்களாலும் கட்டுப்படுத்த முடியாத வாயுப்பிரச்சனையை உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது நல்லது. ஏனெனில் வாயுப் பிரச்னை பெரும் பிரச்சனை..


No comments:

Post a Comment