Followers

Sunday, July 26, 2026

மக்கன் பேடா

தொண்டைக்குள் நழுவிச்செல்லும் ஆற்காடு மக்கன் பேடா..



·         பல வரலாற்று சுவடுகளை தனக்குள் பொதிந்து வைத்திருக்கும் மிகப்பழைமையான நகரம், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு.

·         பிரியாணிக்கும் புகழ்பெற்ற இந்த ஊரின் மற்றொரு சிறப்புமக்கன் பேடாஎனும் இனிப்புத் தின்பண்டம்.

·         200 வருடப் பாரம்பரியம் கொண்ட இந்தப் பலகாரத்துக்குத் தாய்வீடும் ஆற்காடுதான்.

·         உருதுமொழியில்மக்கன்என்றால்நயம்என்றும், ‘பேடாஎன்றால் பாகில் ஊறவைக்கும்இனிப்புஎன்றும் பொருள்.

·         அப்படி, சொல்லுக்கேற்ப நயமாக தொண்டைக்குழிக்குள் நழுவிச் செல்லும் அமிர்த பலகாரமாக இருப்பதால், மக்கன் பேடா என்ற பெயர் வந்தது என்கிறார்கள்,

·         ‘‘200 வருடங்களுக்கு முன்பு ஆற்காட்டை ஆட்சி செய்த நவாப்கள் உள்ளூர்ப் பிரமுகர்களை அழைத்து விருந்து வைத்தனர்.

·         அந்த விருந்தில் பரிமாறப்பட்டமக்கன் பேடாஇனிப்பு பற்றி நவாப்பின் சமையற்கலைஞர்களிடம் கேட்டபோது, ‘பால்கோவாவுடன் மைதா மற்றும் உலர்பழங்களைச் சேர்த்துப் பனைவெல்லப் பாகில் ஊறவைத்தால் மக்கன் பேடா தயாராகிவிடும்என்றிருக்கிறார்கள்.

·         இந்தச் செய்முறையைத் தெரிந்துகொண்ட முன்னோர்கள், மக்கன் பேடா தயாரிப்பதில் ஆர்வம் காட்டினர்.

·         சர்க்கரைப் பாபாகுடன் மேலும் சுவைகூட்டும் வகையில் குங்குமப்பூ, அத்திப்பழம், பிஸ்தா, அக்ரூட், பாதாம், முந்திரி, சாரைப்பருப்பு, பேரீச்சை, வெள்ளரி விதை, தர்ப்பூசணி விதை, ஏலக்காய் விதை, உலர் திராட்சை, ஜாதிக்காய், ஜாதிபத்திரியைச் சேர்த்து மக்கன் பேடா தயாராகிறது.

·         ஆற்காடு என்றதும் இனிப்புப் பிரியர்களின் நினைவுக்கு வருவது் இந்த மக்கன் பேடா தான்.

·         ஆற்காட்டை ஆட்சி செய்த நவாப்புகள் காலத்தில் அறிமுகமான இந்த மக்கன் பேடா இன்றும் மக்களின் மனதில் மாறா ருசிக் கொண்டிருக்கிறது.

·         வேலூர் மாவட்டத்தில் நடக்கும் வீட்டு விசேஷங்கள், திருவிழா, பண்டிகை நாட்களில் மக்கன் பேடா கட்டாயம் பரிமாறப்படும்.

·         பால்கோவா, மைதா, தயிர், நெய் மற்றும் பலவகையான உலர்பழங்களை பதமாக பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுத்து தயாரிக்கப்படுவதுதான் இதன் ருசியின் ரகசியம்.

·         காண்பதற்குகுலோப்ஜாமூன்போன்று இருக்கும் இந்த மக்கன் பேடா சுவையை நாவின் அரும்புகள் அனைத்திலும் உணரச் செய்கிறது.

·         இன்றளவும் புகழ்பெற்ற ஒரு இனிப்பாக மக்கன் பேடா உள்ளது.

·         இந்த மக்கன் பேடா தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது.

மஸ்கோத் அல்வா

சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா 




·         மஸ்கோத் அல்வா என்றாலே இலங்கைதான். எனினும் தமிழகத்தில் மஸ்கோத் என்றால் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூர்தான் ஞாபகத்துக்கு வரும்.

·         திருநெல்வேலிதான் `அல்வாவிற்குப் பெயர்பெற்ற ஊர் எனச் சொன்னாலும், தூத்துக்குடியில் அதற்குப் போட்டியாகத் தயார் செய்யப்படும்முதலூர் மஸ்கோத் அல்வாவும் பிரபலமானது.

·         தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள முதலூரைச் சேர்ந்த ஜோசப் என்பவர், தேங்காய்ப்பாலில் தயார் செய்து அறிமுகப்படுத்திய அல்வாதான் `மஸ்கோத் அல்வா.’

·         இந்த மஸ்கோத் அல்வா, தற்போது `S J மஸ்கோத் அல்வாஎன்ற பெயரில் விற்பனையாகிறது.

·         முதலூர் கிராமத்தில் தயாரிக்கப்படும் 'மஸ்கோத் அல்வா' மிகவும் புகழ்பெற்றது.

·         தேங்காய்ப்பால், முந்திரி, மைதா, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு தயாரிக்கப்படும் இந்த அல்வா, அதன் தனித்துவமான சுவையால் அனைவரையும் ஈர்க்கிறது.

·         தேங்காய்ப்பால் கலக்கறதால மஸ்கோத் அல்வாவை ஒரு மாசத்துக்குள்ள சாப்பிட்டுடணும். பிரிட்ஜ்ல வெச்சிருக்கோம்னா நாலு மாசம் வரைக்கும் வெச்சு சாப்பிடலாம்.

·         இவ்வூரைச் சேர்ந்தவர்கள் தொலை தூரங்களில் தொழில் புரிந்தாலும் சொந்த ஊருக்கு வரும்போதெல்லாம் மஸ்கோத் அல்வாவை வாங்க மறப்பது இல்லை

·         இங்கு தயாரிக்கப்படும் அல்வா நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சென்னை, மும்பை, தில்லி மற்றும் மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது.

·         கோதுமையில் தயாரிக்கப்படும் மஸ்கோத் அல்வாவைப் போன்று தற்போது பேரிச்சை அல்வா, முந்திரி அல்வா, நெல் அல்வா என பலதரங்களில் அல்வா தயாரித்து விற்பனையில் உள்ளது.

·         பலரக அல்வா இருந்தாலும் மஸ்கோத்துக்குதான் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

கோத்தகிரி

வியூ பாயிண்ட்,நீர்வீழ்ச்சி,சோலைக்காடு என இயற்கை அழகுடன் அசத்தும் கோத்தகிரி



·         கோத்தகிரி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான மற்றும் அமைதியான மலைவாசஸ்தலம்.

·         கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,883 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம், ஊட்டி மற்றும் குன்னூருக்கு அடுத்தபடியாக நீலகிரியில் உள்ள மூன்றாவது பெரிய மலை நகரமாகும்.

·         இது சுற்றுலாப் பயணிகளின் நெரிசல் குறைவாகவும், இயற்கை எழில் கொஞ்சும் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளைக் கொண்டும் இருப்பதால் மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது.

கோத்தகிரியின் பார்க்க வேண்டிய இடங்கள்:

கொடநாடு வியூ பாயிண்ட்:

·         கோத்தகிரியிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து பார்த்தால், தேயிலைத் தோட்டங்கள், பவானி சாகர் அணை மற்றும் மைசூர் பீடபூமியின் கண்கொள்ளா காட்சிகளைக் காணலாம்.

கேத்தரின் நீர்வீழ்ச்சி:

·         அடர்ந்த காடுகளுக்கு நடுவே இரட்டை அடுக்கு வீழ்ச்சியாக பாய்கிறது. மலையேற்றப் பயணிகளுக்கு இது மிகவும் பிடித்த இடமாகும்.

லாங்வுட் சோலை:

இயற்கை ஆர்வலர்களுக்காகவும், பறவை கண்காணிப்பாளர்களுக்காகவும் இருக்கும் ஒரு அடர்ந்த மற்றும் அமைதியான சோலைக்காடு..

ரங்கசுவாமி தூண்:

·         மலையேற்றப் பாதைகளின் முடிவில் அமைந்துள்ள இந்த சிகரம், உள்ளூர் மக்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

·         கோத்தகிரி மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 33 கி.மீ தொலைவில் உள்ளது. ஊட்டியிலிருந்து 28 கி.மீ, குன்னூரிலிருந்து 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

·         அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையம் மேட்டுப்பாளையம் ஆகும். இங்கிருந்து நீலகிரி மலை ரயிலில் ஊட்டி வரை சென்று அங்கிருந்து சாலை வழியாகவும் கோத்தகிரியை அடையலாம்.