Followers

Sunday, June 28, 2026

மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் 5 உறுப்புகள்

 மனிதனின் ஆயுட்காலத்தை நிர்ணயிக்கும் 5 உறுப்புகள்... என்ன, எப்படி?


மனிதனாகப் பிறந்தவர்களுக்குத் தினமும் ஒவ்வொரு நோயாக வந்த வண்ணம் உள்ளது. அதை எப்படி நிவர்த்தி செய்வது? இனி வராமல் எப்படி தடுப்பது என பார்ப்போமா....

இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்கும் போது எல்லாம் நாம் இன்னும் நம் உடலை நன்றாகப் பேண வேண்டும். உடல் எடையைக் குறைப்பது என உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது.

ஆனால் இது செயல்பாட்டுக்கு வந்தால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடும். நம் உடலைப் பேணிப் பாதுகாக்க இந்த உள்ளுறுப்பு களைக் கவனித்தால் போதும். நிச்சயம் நீண்ட ஆயுள் உண்டு. அந்தவகையில் 5 முக்கிய உறுப்புகள் உள்ளன. பார்க்கலாமா….

அந்த 5 உறுப்புகள் இவைதான்.

கல்லீரல்

மண்ணீரல்

நுரையீரல்

கணையம்

இதயம்

இவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

கல்லீரல்

இது உடலின் டோசின்களை நீக்குகிறது. இவற்செரிமானம், புரத உருவாக்கம், ஹார்மோன்களின் சமநிலையை பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்கிறது.

பலப்படுத்துவது எப்படி?

காய்கறி, பழங்கள், முழு தானியங்கள், கொழுப்பு குறைந்த உணவுகள், மதுபானங்களைத் தவிர்ப்பது, அதிக எடையைத் தவிர்ப்பது, சரியான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி.

மண்ணீரல்

உடலின் அனைத்துக் கழிவுகளையும் நீக்குவது, ரத்தத்தில் உள்ள நீர், உப்பின் அளவை சமநிலைப்படுத்துவது ஆகிய வேலைகளைச் செய்கிறது. இதன் சரியான செயல்பாடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

பலப்படுத்துவது எப்படி?

அதிக நீர், குறைந்த உப்பு. சரியான உணவுப்பழக்கம், காய்கறி, பழங்கள், முழு தானியங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். புகையிலை தவிர்ப்பது, புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது நலம் பயக்கும்.

கணையம்

இது அடிவயிற்று சுரப்பி. செரிமான அமைப்பின் பகுதி. இன்சுலினை உற்பத்தி செய்வது, உணவை உடைக்க உதவும் திரவத்தை சுரப்பது இதன் வேலை. இதில் பிரச்சனை வந்;தால் நீரிழிவு, கணையம் அழற்சி உண்டாகும்.

பலப்படுத்துவது எப்படி?

ஆரோக்கியமான உணவு. குறைந்த சர்க்கரை உள்ள நார்ச்சத்து உணவுகள், காய்கறி, பழங்கள், முழு தானியங்கள். மீன், முட்டை, பருப்பு போன்ற அதிகமான புரதச்சத்து உணவுகள் சாப்பிடுவது நலம்.

முறையான உடற்பயிற்சி, உடல் எடையைக் கட்டுப்படுத்தி இதன் செயல்பாட்டை மேம்படுத்தும். போதிய அளவு நீர் குடிப்பது அவசியம். செரிமானத்தை மேம்படுத்தி கணைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் என 3 ஈரல்களும், கணையம், இதயம் என்று 2 இயங்களும் முக்கியமானவை. மன அழுத்தம் குறைக்க தியானம், யோகா அவசியம். புகை, மதுவைத் தவிர்ப்பது நலம்.

நுரையீரல்

ஆக்சிஜனைப் பெறுவது, கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றுவது இதன் வேலை. நன்றாக செயல்பட்டால் உடல் புத்துணர்வு, ஆரோக்கியமாக இருக்கும்.

பலப்படுத்துவது எப்படி?

மூச்சுப்பயிற்சி, ஆழமான மூச்சுப்பயிற்சி, பிராணாயாமம் அவசியம். இது ரத்தத்தில் அதிகமான ஆக்சிஜனைக் கொண்டு வர வழிவகுக்கும்.

புகைப்பிடிப்பது மிகவும் தீங்கானது. இது நுரையீரலை செயல் இழக்க வைக்கும். ஆயுள் குறையும். உடற்பயிற்சி, ஓட்டம், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் நலம்.

இதயம்

உடலின் மைய இயக்கம். ரத்த ஓட்டத்தை சரியாக பராமரித்து உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்சிஜனைக் கொண்டு செல்ல உதவும். இதயத்தின் ஆரோக்கியமே வாழ்நாள் நீடிக்க முக்கியமானது. இதய நோய்கள் ஆயுட்காலத்தைக் குறைத்து விடும்.

பலப்படுத்துவது எப்படி?

உடற்பயிற்சி, ஓட்டம், நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் நலம். ஆரோக்கியமான உணவுகள், கொழுப்பு, உப்பு அளவைக் குறைப்பது, பழங்கள், காய்கறிகள், சிறு தானியங்கள் நல்ல மருந்து.

தியானம், யோகா மிகவும் நல்லது. உணவு, உடற்பயிற்சி, மன அமைதி ஆகியவற்றைப் பராமரிப்பது எனச் செய்தால் நம் உடல் இதயத்தோடு இணைந்து வாழ்நாளின் நேரத்தை அதிகரிக்க உதவும்.

 

அம்மாக்கள் அன்றும், இன்றும், என்றும்...

அம்மாக்கள் அன்றும், இன்றும், என்றும்...

1960...


எப்ப பாரு கதை புக் படிக்கிறதே வேலையா போச்சு, பாட புத்தகம் படிக்கிற நேரத்தை விட, விகடன், கல்கி, அப்புறம் இந்த கருமம் புடிச்ச குமுதம். இன்னொரு வாட்டி கையில் குமுதத்தை பார்த்தேன் அவ்வளவுதான்...

1970...

புத்தகத்தை விட்டாச்சு, எப்ப பாரு transistor radio அதுல இந்த Radio Ceylon 12 மணி நேரமும் காபி கடை மாதிரி ஒரே சத்தம். இளையராஜாவா, MSVயான்னு சண்ட வேற... ஜானகியா, லதா மங்கேஷ்கர், யார் நல்லா பாடறாங்கன்னு ஒரே இம்சை. ஒரு பக்கம் ஹிந்தி பாட்டு ஒரு பக்கம் தமிழ் பாட்டு...

1980...

புதுசா வந்திருக்கிற இந்த TVயை போட்டு உடைக்கணும். மழை காலத்துல கோடு கோடா கொர்ன்னு ஒரே சத்தம்... வராத ரூபவாஹினியை கூட்டிட்டு வர்றேன்ன்னு பாதி நேரம் மொட்டை மாடியில ஒத்த கால்ல தவம்... வெள்ளிக்கிழமை விளக்கேத்தி வைச்சா இந்த வெள்ளை புடவை கட்டிட்டு ஓன்னு அழற பாட்டா போடறானுங்க.

1990...

எவண்டா இந்த வீடியோ கேசட் ப்ளையரை கண்டு பிடிச்சவன்? 18 மணி நேரம் கேசட் வாடகைக்கு எடுத்துட்டு வந்து வீட்டையே தியேட்டராக்கி வச்சுருக்கீங்க... Evil Dead எத்தனை வாட்டி போட்டு உயிரை எடுப்பிங்கடா? ஓடி போயிடு வெளியில...

2000...



கேபிள் TV போட்டுட்டு எப்ப பாரு அதுக்கு முன்னாடியே உக்காந்துக்கிறான்... சாப்பாடு, டிபன் எல்லாமே ஹால்லயே... பாலசந்தர் சீரியல் திங்கட்கிழமை வருமே, அது தான் பாக்கற மாதிரி இருக்கு. புதன்கிழமை வர்ற விடாது கருப்பு செமயா இருக்கு. என்ன இருந்தாலும் ரூப வாஹினி மாதிரி வருமா?

2010...

24 மணி நேரமும் இந்த இண்டர்நெட்ல என்ன பாக்கிறானோ...!!?? படிக்கிறானா... இல்லையான்னே தெரியல... இப்படியே போனா எப்படித்தான் படிச்சு வேலைக்கு போயி ஹம்.?..

2020...



Netflix, Amazon , WebTV இந்த கர்மங்கள் வந்த பிறகு முகத்தை பாத்து பேசறதேயில்லை. சாப்பிடும்போது கூட, மொபைலையே முறைச்சிட்டு இருக்கானுங்க...

இந்த வார்த்தைகள் ஒலிக்காத தமிழக இல்லங்கள் மிகவும் குறைவே...

உங்க வீட்டில எப்படி??....