Sunday, October 11, 2020

அலட்சியப் படுத்தக்கூடாத அறிகுறிகள் -1

வயிற்றுவலி

அறிகுறிகள்

சாத்தியமான காரணங்கள்

நடவடிக்கைக்கான ஆலோசனை

வாய்வுடன் தொப்புளைச் சுற்றியும் கீழும் வலி

மலச்சிக்கல் அல்லது வாய்வு

மருந்துக் கடைகளில் கிடைக்கும் வாய்வுமருந்து அல்லது மலமிழக்கிகள். வலி இரண்டு வாரங்களுக்கு மேலாக இருந்தால் மருத்துவரை நாடவும்.

குமட்டல், காய்ச்சல், வாந்தி, பசியின்மை, முக்கி மலம் கழித்தலுடன் தொப்புளைச் சுற்றித் திடீர் வலி

குடற்வால் அழற்சி (அப்பெண்டிசைட்டிஸ்)

மருத்துவரை அணுகவும். குடல் வால் அழற்சிக்கு உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டும் அல்லது அது வெடித்து தொற்றுள்ள திரவம் வயிற்றின் பிற பாகங்களில் பரவும்.

வலது புற வயிற்றில் திடீர் வலி தோன்றி வயிற்றின் பிற பாகங்களுக்கும் முதுகிலும் பரவுதல்.

பித்தப்பைக் கல் அல்லது பித்தப்பைத் தொற்றுநோய்

கொழுப்புணவை உண்ட பின் வலி நீடித்தாலோ கூடினாலோ மருத்துவரை அணுகவும்

தொப்புளுக்குக் கீழே வலி தொடங்கி இரு புறமும் பரவினால்.

பெருங்குடல் நோய், சிறுநீர்ப் பாதைத் தொற்று, அல்லது இடுப்பு அழற்சி நோய்

வலி நீடித்தால் மருத்துவரிடம் செல்லவும் அவர் கண்டறியும் சோதனைக்கு ஆலோசனை கூறலாம்.

பொதுவாக நல்ல சாப்பாட்டுக்குப் பின் மார்பு எலும்புக்கு கீழே எரிச்சல் உணர்வு

நெஞ்செரிச்சல்

கடைகளில் கிடைக்கும் அமில முறிவு மருந்துகளை எடுக்கவும், கொழுப்புப் பொருட்களைத் தவிர்க்கவும்

கீழ்ப்புற விலா எலும்புகளில் திடீரென வலி தொடங்கி அரைக்குப் பரவுதல்

சிறுநீரகக் கல்

மருத்துவரிடம் செல்லவும். நீராகாரம் அதிகம் பருகவும்.

சிறுவலி அல்லது உபாதைகள் மெதுவாகத் தோன்றி வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது வீக்கத்துடன் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்தல்.

லாக்டோஸ் ஏற்பின்மை, உறுத்தும் குடல் நோய், புண்கள், உணவு ஒவ்வாமை ஆகியவற்றில் ஒரு நீடித்த நோய்

மருத்துவரை நாடவும். அவர் ஓர் இரப்பை குடல் நிபுணரிடம் ஆலோசிக்க அனுப்பக்கூடும்.