வயிற்றுவலி
அறிகுறிகள் |
சாத்தியமான காரணங்கள் |
நடவடிக்கைக்கான ஆலோசனை |
வாய்வுடன் தொப்புளைச்
சுற்றியும் கீழும் வலி |
மலச்சிக்கல் அல்லது வாய்வு |
மருந்துக் கடைகளில் கிடைக்கும்
வாய்வுமருந்து அல்லது மலமிழக்கிகள். வலி இரண்டு வாரங்களுக்கு மேலாக இருந்தால்
மருத்துவரை நாடவும். |
குமட்டல், காய்ச்சல், வாந்தி,
பசியின்மை, முக்கி மலம் கழித்தலுடன் தொப்புளைச் சுற்றித் திடீர் வலி |
குடற்வால் அழற்சி
(அப்பெண்டிசைட்டிஸ்) |
மருத்துவரை அணுகவும். குடல்
வால் அழற்சிக்கு உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டும் அல்லது அது வெடித்து
தொற்றுள்ள திரவம் வயிற்றின் பிற பாகங்களில் பரவும். |
வலது புற வயிற்றில் திடீர் வலி
தோன்றி வயிற்றின் பிற பாகங்களுக்கும் முதுகிலும் பரவுதல். |
பித்தப்பைக் கல் அல்லது
பித்தப்பைத் தொற்றுநோய் |
கொழுப்புணவை உண்ட பின் வலி
நீடித்தாலோ கூடினாலோ மருத்துவரை அணுகவும் |
தொப்புளுக்குக் கீழே வலி
தொடங்கி இரு புறமும் பரவினால். |
பெருங்குடல் நோய், சிறுநீர்ப்
பாதைத் தொற்று, அல்லது இடுப்பு அழற்சி நோய் |
வலி நீடித்தால் மருத்துவரிடம்
செல்லவும் அவர் கண்டறியும் சோதனைக்கு ஆலோசனை கூறலாம். |
பொதுவாக நல்ல சாப்பாட்டுக்குப்
பின் மார்பு எலும்புக்கு கீழே எரிச்சல் உணர்வு |
நெஞ்செரிச்சல் |
கடைகளில் கிடைக்கும் அமில முறிவு
மருந்துகளை எடுக்கவும், கொழுப்புப் பொருட்களைத் தவிர்க்கவும் |
கீழ்ப்புற விலா எலும்புகளில்
திடீரென வலி தொடங்கி அரைக்குப் பரவுதல் |
சிறுநீரகக் கல் |
மருத்துவரிடம் செல்லவும்.
நீராகாரம் அதிகம் பருகவும். |
சிறுவலி அல்லது உபாதைகள்
மெதுவாகத் தோன்றி வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் அல்லது வீக்கத்துடன் பல வாரங்கள்
அல்லது மாதங்கள் தொடர்தல். |
லாக்டோஸ் ஏற்பின்மை, உறுத்தும்
குடல் நோய், புண்கள், உணவு ஒவ்வாமை ஆகியவற்றில் ஒரு நீடித்த நோய் |
மருத்துவரை நாடவும். அவர் ஓர்
இரப்பை குடல் நிபுணரிடம் ஆலோசிக்க அனுப்பக்கூடும். |
No comments:
Post a Comment