தில்லைக்கூத்தனின் மிக முக்கியமான இடங்கள்!
1, மதுரை – வரகுன பாண்டியனுக்கு
கால்மாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.
2, கீள்வேளூர் – அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.
3, திருவாலங்காடு, சிதம்பரம் – இறைவன் காளியுடன் நடனமாடியது.
4, மயிலாடுதுறை – அம்பாள் மயில் வடிவம் கொண்டு ஈசன் முன்பு கௌரி தாண்டவம் ஆடினார்.
5, திருப்புத்தூர் – சிவன் லட்சுமிக்கு
கௌரி நடனத்தை ஆடி காட்டியது.
6, திருவிற்கோலம் – காளி அம்மன் ஆலங்காடு பெருமானோடு தர்க்கித்து
ரக்ஷா நடனம் ஆடி மகா தாண்டவம் ஆடியது.
7, திருவாவடுதுரை – இறைவன் வீர சிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.
8, திருக்கூடலையாற்றார் – பிரம்மனுக்கு
நர்த்தனம் செய்து காட்டியது.
9, திருவதிகை – சம்பந்தருக்கு இறைவன் திருநடனம் ஆடிகாட்டியது. இறைவி பாட இறைவன் ஆடியது.
10, திருப்பனையூர் – ஊரின் புறந்தே சுந்தரமூர்த்திக்கு நடன காட்சி தந்தது.
11, திருவுசாத்தானம் – விஸ்வாமித்திரருக்கு நடன காட்சி தந்தது.
12, திருக்களர் – துர்வாச முனிவருக்கு
பிரம்ம தாண்டவம் ஆடி காட்டியது.
13, திருவான்மியூர் – வான்மீகி முனிவர்க்கு
இறைவன் பிரம்ம தாண்டவ நடன காக்ஷியும் கல்யாண காட்சியும் அருளியது.
14, கொடுமுடி – சித்ரா பௌர்ணமியில்
பரத்வாச முனிவருக்கு
நடராஜர் சதுர்முகத்தாண்டவ
நடன காட்சி அருளியது.
15, திருமழபாடி – மார்கண்டேயருக்கு மழு ஏந்தி நடன காட்சி தந்தது.
16, கஞ்சனூர் – பராசர முனிவர்க்கு
முக்தி தாண்டவம் அருளியது.
17, திருக்காறாயில் – பதஞ்சலி முனிவருக்கு
7 வகை தாண்டவங்களை
காட்டியது. கபால முனிவருக்கு காட்சி தரல்.
18, அரதைபெரும்பாழி – உபமன்யு மகரிஷிக்கு இறைவன் திருநடனமாடி அருள் புரிந்தது.
19, திருவொற்றியூர் – மாசி மாதத்தில் நந்திக்கு நாட்டிய காக்ஷி.
20, திருக்கச்சூர் – திருமாலுக்கு நடன காட்க்ஷி தியாகராஜர் அருளியது.
21, திருப்பைஞ்ஜிலி – வசிட்ட முனிவர்க்கு
நடராஜர் நடன காட்க்ஷி அருளியது.
22, கொடுமுடி, கூடலையாற்றூர், திருகளர், திருமுருகன்பூண்டி – பிரம்மனுக்கு
ஈசன் நடன காட்க்ஷி.
23, திருத்துறைபூண்டி – நடராஜர் சந்திர சூடாமணி தாண்டவமாடுகிறார். அகத்தியர் நடனத்தை கண்டும் வேதாரயேஸ்வரரின்
மணக்கோலத்தையுக் கண்டார்.