Thursday, December 2, 2021

தில்லைக்கூத்தனின் மிக முக்கியமான இடங்கள்!

 தில்லைக்கூத்தனின் மிக முக்கியமான இடங்கள்!

1, மதுரைவரகுன பாண்டியனுக்கு கால்மாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.

2, கீள்வேளூர்அகத்தியருக்கு 10 கைகளுடன் நடராஜர் கால்மாறி {வலதுபாதம்} தூக்கி ஆடியது.

3, திருவாலங்காடு, சிதம்பரம்இறைவன் காளியுடன் நடனமாடியது.

4, மயிலாடுதுறைஅம்பாள் மயில் வடிவம் கொண்டு ஈசன் முன்பு கௌரி தாண்டவம் ஆடினார்.

5, திருப்புத்தூர்சிவன் லட்சுமிக்கு கௌரி நடனத்தை ஆடி காட்டியது.

6, திருவிற்கோலம்காளி அம்மன் ஆலங்காடு பெருமானோடு தர்க்கித்து ரக்ஷா நடனம் ஆடி மகா தாண்டவம் ஆடியது.

7, திருவாவடுதுரைஇறைவன் வீர சிங்க ஆசனத்தில் சுந்தர நடனம் மகா தாண்டவம் ஆடியது.

8, திருக்கூடலையாற்றார்பிரம்மனுக்கு நர்த்தனம் செய்து காட்டியது.

9, திருவதிகைசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் ஆடிகாட்டியது. இறைவி பாட இறைவன் ஆடியது.

10, திருப்பனையூர்ஊரின் புறந்தே சுந்தரமூர்த்திக்கு நடன காட்சி தந்தது.

11, திருவுசாத்தானம்விஸ்வாமித்திரருக்கு நடன காட்சி தந்தது.

12, திருக்களர்துர்வாச முனிவருக்கு பிரம்ம தாண்டவம் ஆடி காட்டியது.

13, திருவான்மியூர்வான்மீகி முனிவர்க்கு இறைவன் பிரம்ம தாண்டவ நடன காக்ஷியும் கல்யாண காட்சியும் அருளியது.

14, கொடுமுடிசித்ரா பௌர்ணமியில் பரத்வாச முனிவருக்கு நடராஜர் சதுர்முகத்தாண்டவ நடன காட்சி அருளியது.

15, திருமழபாடிமார்கண்டேயருக்கு மழு ஏந்தி நடன காட்சி தந்தது.

16, கஞ்சனூர்பராசர முனிவர்க்கு முக்தி தாண்டவம் அருளியது.

17, திருக்காறாயில்பதஞ்சலி முனிவருக்கு 7 வகை தாண்டவங்களை காட்டியது. கபால முனிவருக்கு காட்சி தரல்.

18, அரதைபெரும்பாழிஉபமன்யு மகரிஷிக்கு இறைவன் திருநடனமாடி அருள் புரிந்தது.

19, திருவொற்றியூர்மாசி மாதத்தில் நந்திக்கு நாட்டிய காக்ஷி.

20, திருக்கச்சூர்திருமாலுக்கு நடன காட்க்ஷி தியாகராஜர் அருளியது.

21, திருப்பைஞ்ஜிலிவசிட்ட முனிவர்க்கு நடராஜர் நடன காட்க்ஷி அருளியது.

22, கொடுமுடி, கூடலையாற்றூர், திருகளர், திருமுருகன்பூண்டிபிரம்மனுக்கு ஈசன் நடன காட்க்ஷி.

23, திருத்துறைபூண்டிநடராஜர் சந்திர சூடாமணி தாண்டவமாடுகிறார். அகத்தியர் நடனத்தை கண்டும் வேதாரயேஸ்வரரின் மணக்கோலத்தையுக் கண்டார்.

No comments:

Post a Comment