Tuesday, May 14, 2019

சுப ஹோரையை அறிந்துகொள்ள எளிய வழிகள்!


சுப ஹோரையை அறிந்துகொள்ள எளிய வழிகள்!


            சு ஹோரையை அறிந்துகொள்ள எளிய வழிகள். நாள் நட்சத்திரம் பார்ப்பது போலவே சுபஹோரையில் செய்யும் செயல்களும் ஒரு செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்க, நமக்கு பெரிதும் உதவிடும். இதை அறிந்துகொள்வது எப்படி 
           இதைப் பற்றி அறிந்துகொள்ள ஜோதிடப் புலமையோ, பெரிய அளிவிலான நிபுணத்துவமோ தேவையில்லை. சாதாரணமாக தேதி காலண்டரைப் பார்த்தே இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம். இதற்கு, பஞ்சாங்கமோ, ஜோதிட நூல்களோ தேவையில்லை. இது மணியை வைத்து ஜோதிடம் கூறும் முறை.
ஒரு நாளின் 24 மணியில் ஒவ்வொரு மணிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செலுத்தும். நவக்கிரகங்களில் ராகு, கேது என்ற சாய கிரகங்களுக்கு இதில் இடமில்லை. ஆக மீதமிருக்கும் சப்த (ஏழு) கிரகங்கள் மட்டுமே மாறி மாறி தொடர்ச்சியாக தமது ஆதிக்கத்தை செலுத்துகின்றன
1. சூரியன், 2. சந்திரன், 3. செவ்வாய், 4. புதன், 5. வியாழன், 6. வெள்ளி, 7. சனி ஆகிய ஏழு கிரகங்களும் தங்களுக்குள் முறையான ஒரு அலைவரிசையில் மாறிமாறி ஆதிக்கம் செலுத்துகின்றன
வாரத்தின் ஏழு நாட்களுக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி ஆகும். அவை, ஞாயிற்றுக்கிழமைக்கு சூரியன் அதிபதி, திங்கள்கிழமைக்கு சந்திரன் அதிபதி. செவ்வாய்க் கிழமைக்கு செவ்வாய் அதிபதி,
புதன் கிழமைக்கு அதிபதி புதன், வியாழக்கிழமைக்கு அதிபதி குரு, வெள்ளிக் கிழமைக்கு அதிபதி சுக்கிரன், சனிக்கிழமைக்கு அதிபதி சனி
கிரகம் ஆகும்

ஒரு நாளின் அதிபதியாக வருகின்ற அந்த கிரகமே அந்த நாளின் முதல் ஹோரைக்கு அதிபதி. இது சூரிய உதயத்திலிருந்து முதல் ஒரு மணிநேரமே முதல் ஹோரை. அதிலிருந்து ஒவ்வொரு மணிநேரமும் ஒரு ஹோரையாகக்  கருதப்படும். உதாரணமாக, வியாழக்கிழமை அன்று முதல் ஹோரைக்கு அதிபதி குரு.
இரண்டாவது ஹோரையின் அதிபதியை கணக்கிட வியாழக்கிழமைக்கு முந்தைய நாளான புதன்கிழமையை விடுத்து, அதற்கும் முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிரகம்தான் வியாழக்கிழமையின் இரண்டாவது ஹோரைக்கு அதிபதி
அடுத்து செவ்வாய்க்கிழமைக்கு முந்தைய நாள் திங்கள்கிழமையை விடுத்து, அதற்கும் முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையின் அதிபதியான சூரியன்தான்  முன்றாவது
ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய நாள் சனிக்கிழமையை விடுத்து, அடுத்து வரும் வெள்ளிக்கிழமையின் அதிபதியான சுக்கிரன்தான் நான்காவது.
வெள்ளிக்கிழமைக்கு  முந்தைய நாளான வியாழக்கிழமையை விடுத்து, அடுத்து வரும் புதன்கிழமையின் அதிபதியான புதன்தான் ஐந்தாவது.  
புதன்கிழமைக்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமையை விடுத்து, அடுத்து வரும் திங்கள்கிழமையின் அதிபதியான சந்திரன்தான் ஆறாவது.  
திங்கள்கிழமைக்கு  முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையை விடுத்து, அடுத்து வரும்  சனிக்கிழமையின் அதிபதியான சனிதான் ஏழாவது ஹோரை.
அப்படிப் பார்க்கும்போது 1. குரு 2. செவ்வாய், 3. சூரியன், 4. சுக்கிரன், 5. புதன், 6. சந்திரன், 7. சனி ஹோரை என்று வரும்.
 8-
வது மணி முதல் மீண்டும் குரு ஹோரை துவங்கும். இப்படி தொடர்ச்சியாக  வந்து மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் ஹோரையாக சுக்கிர ஹோரையே வரும்.
இப்படி வருவதில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய ஹோரைகள் சுப பலன்களைத் தரக்கூடியதாகும். சூரியன் மத்திம பலனை தரவல்லதாகவும் சனி, செவ்வாய்  தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் அமையும்
ஒரு காரியத்தை செய்யத் துவங்கும் நாம் சுபகிரக ஹோரைகளில் ஆரம்பித்தால் அந்தக் காரியம் நமக்கு காரிய சித்தியைக் கொடுக்கும். அசுப கிரஹ ஹோரைகளில் ஆரம்பித்தால், அந்த காரியத்தில் தடை ஏற்பட்டு தோல்வியைச் சந்திக்கநேரிடும்.


No comments:

Post a Comment