Monday, May 6, 2019

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்கள் பெற


திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்கள் பெற


         திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.

         தேவஸ்தானம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு தனது இணையதளத்தில் ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஜனவரி மாதத்திற்கான 68,575 ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.

        இவற்றை பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு, ஏழுமலையானை ஆர்ஜித சேவையில் தரிசிக்கலாம். இதில் சுப்ரபாதம் உள்ளிட்ட சில முக்கிய ஆர்ஜித சேவா டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயர், ஆதார் எண், டிக்கெட் எண்ணிக்கை, செல்லிடப்பேசி எண் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு இந்த டிக்கெட்டுகளுக்காக விண்ணப்பிக்க வேண்டும்.
கிடைக்கப் பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் செல்லிடப்பேசி எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் கிடைத்த பக்தர்கள் 3 நாள்களுக்குள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ளாத டிக்கெட்டுகளை மீண்டும் தேவஸ்தானம் குலுக்கல் முறையில் விண்ணப்பித்த மற்ற பக்தர்களுக்கு வழங்கிறது.

           நேரடி முன்பதிவில் உள்ள மற்ற ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை பக்தர்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

            ஆன்லைன் மூலமாக ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் பெற பக்தர்களுக்காக புதிய திட்டத்தை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஒரு செல் போன் நம்பர் மூலமாக இரண்டு சேவை டிக்கெட்டுகள் மட்டுமே பெற முடியும். ஆதார் கார்டு பார்கோடிங் மூலமாக டிக்கெட்டுகளை சோதனை செய்யும் முறையை கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment