மத அடிப்படையில் இந்தியாவில் வாழும் குடிமக்களை என்ஆர்சி விலக்கி வைக்குமா?
இந்தக் கேள்விக்கும், என்ஆர்சி எப்போது இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டாலும் அது மதத்தின் அடிப்படையில் யாரையும் அணுகாது. எவரையும் அப்படி செய்ய முடியாது என்று இந்திய உள்துறை அமைச்சகம் விளக்கியுள்ளது.
என்ஆர்சி நடைமுறைக்கு வந்தால், அப்போது இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் இந்தியராக நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுமா?
என்ஆர்சி என்பது, குடிமக்களுக்கான பதிவேடு. அது ஒரு இந்தியருக்கான அடையாள அட்டை அல்லது வேறு அத்தாட்சி ஆவணத்தை காட்டி இந்தியராக ஒருவரை பதிவு செய்து கொள்ள தகுதி வழங்கும் பதிவு.
அப்படியென்றால் இந்திய குடியுரிமையை எந்த ஆவணங்கள் மூலம் நிரூபிக்கலாம்?
இந்திய குடிமக்கள் விதிகள் 2009-இன்படியே ஒருவருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது முடிவு செய்யப்படுகிறது. 1955-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஒருவர் தமது பிறப்புச் சான்றிதழ், வம்சாவளி சான்றிதழ், பதிவு முறை, வேறு நாட்டு குடியுரிமைக்கான சான்றிதழ், இந்தியாவுடன் ஒரு பிராந்தியம் இணைவதன் மூலம் கிடைக்கும் குடியுரிமை ஆகிய 5 வழிகள் மூலம் ஒருவர் தனக்கான இந்திய குடியுரிமை தகுதியை நிரூபிக்கலாம்.
இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ் அல்லது விவரங்களை தர
வேண்டுமா?
உங்களுடைய பிறந்த ஆண்டு, மாதம், தேதி, பிறந்த இடம் ஆகியவற்றை தருவதே போதுமானது. ஒருவேளை அந்த தகவல் இல்லாமல் போனால், பெற்றோரின் அந்த தகவல் தேவை. அதுவும் பெற்றோரின் பிறந்த தேதி, இடம் தொடர்புடைய ஆவணத்தை சமர்ப்பிப்பது கட்டாயம் கிடையாது.
இருப்பினும், எத்தகைய ஆவணங்கள் ஏற்கத்தக்கவை என்பது பற்றிய முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. அந்த ஆவணங்களில் வாக்காளர் அட்டை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, உரிமங்கள், காப்பீட்டு ஆவணங்கள், பிறப்புச் சான்றிதழ், பள்ளி விலகல் சான்றிதழ், வீட்டுப்பத்திரம் அல்லது சொத்துப்பத்திரம் அல்லது அரசு அத்தாட்சியுடன் கூடிய ஆவணங்கள் அதில் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த வரிசையில் மேலும் சில ஆவணங்களும் சேரலாம் என உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
1971-ஆம் ஆண்டுக்கு முன்பு, மூதாதையர்கள் வாழ்ந்த ஆவணத்தை சம்பந்தப்பட்ட நபர் சமர்ப்பிக்க வேண்டுமா?
1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய கட்டத்தில் பெற்றோர் அல்லது மூதாதையர் வாழ்ந்த ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
அத்தகைய நடைமுறை, அஸ்ஸாமில் அதுவும் என்ஆர்சி முறைக்காக மட்டுமே, அஸ்ஸாம் ஒப்பந்த அடிப்படையிலும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும் கட்டாயம்.
நாட்டின் பிற பகுதிகளில், என்ஆர்சி நடைமுறை வேறாக இருக்கும். அது இந்திய குடியுரிமை பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை விதிகள், 2003-இன்படி இருக்கும்.
ஒருவேளை படிப்பறிவற்றவர் வசம் போதுமான ஆவணங்கள் இல்லாமல் போனால் என்ன செய்வது?
அத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட நபர், தமது பிறப்பிடத்தையும் குடியுரிமையையும் நிரூபிக்கக் கூடிய வகையில், ஒரு சாட்சியை அழைத்து வர வேண்டும்.
சமுதாயச் சான்றிதழ் அல்லது உள்ளூர் வசிப்பிடச் சான்றிதழில் உள்ளூர் சமுதாய உறுப்பினர்கள் கையொப்பமிடும் அத்தாட்சி போன்றவை உரிய ஆவணமாக கருதப்பபடும்.
இந்தியராக உள்ள எவரும் இந்த நடைமுறையின்படி இன்னல்களுக்கு ஆளாகாதவாறு பார்த்துக் கொள்ளப்படும் என இந்திய உள்துறை கூறியுள்ளது.
No comments:
Post a Comment