Friday, February 28, 2020

தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் (என்ஆர்சி) புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?


அஸ்ஸாமில் அமலில் உள்ள தேசிய குடிமக்கள் பதிவேடுக்கும் (என்ஆர்சி) புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கும் உள்ள வேறுபாடு என்ன?

என்ஆர்சி என்பது, இந்திய குடிமகனாக தகுதி பெறுவோர் யார் என்று வரையறுக்கப்படும் குடிமக்களின் பட்டியல். அதன்படி, 1971-ஆம் ஆண்டு, மார்ச் 24-ஆம் தேதி அன்றோ அதற்கு முன்பாகவோ இந்தியாவுக்குள், வங்கதேச போர் காலத்தில் வந்தவர்களோ அல்லது அவர்களின் மூதாதையர்களோ வந்ததை நிரூபிக்கக் கூடியவர்களாகவோ இருந்தால், அவர்கள் அனைவரும் இந்திய குடிமகனாக தகுதி பெறலாம்.
இந்திய அரசு வரையறுத்துள்ள இந்த தேதிக்கு மறுநாள்தான், வங்கதேச விடுதலைப்போர் தொடங்கியது. அப்போதுதான் ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
என்ஆர்சி திட்டம், எதிர்காலத்தில் இந்தியா முழுவதும் விரிவு படுத்தப்படலாம். அந்த வகையில், அந்த பதிவேடு முறைக்கும், தற்போது இந்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ல இந்திய குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
 IMAGES

என்ஆர்சி முறைக்கு அஸ்ஸாமில் ஏன் எதிர்ப்பு வலுக்கிறது?

1971, மார்ச் 24-ஆம் தேதிவரை வந்தவர்கள் மட்டுமே இந்திய குடிமகனாக விண்ணப்பிக்க தகுதி பெறுவார்கள் என வகைப்படுத்திய 1985-ஆம் ஆண்டு அஸ்ஸாம் ஒப்பந்தத்தை, தற்போதைய இந்திய குடியுரிமை சட்டம் செல்லாததாக்கி விடும் என எதிர்ப்பாளர்கள் கருதுகிறார்கள்.
உண்மையில், இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் குடியேறிகளை நாடு கடத்தவோ, தடுப்பு மையங்களில் வைப்பதையோ நோக்கமாகக் கொண்டுள்ளதுதான் என்ஆர்சி நடைமுறை.

என்ஆர்சி மீது இந்திய குடியுரிமை சட்டம் தாக்கத்தை ஏற்படுத்துமா?

என்ஆர்சி பதிவில் இடம்பெறத் தவறியவர்களுக்கு, இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம் உதவலாம் என்று இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி கூறுகிறது.
மேலும், அஸ்ஸாமின் போடாலாந்து, கார்பி ஆங்லோங் ஆகிய பழங்குடியின பகுதிகள், இந்திய குடியுரிமை சட்டத்திருத்த வரம்புக்குள் வராமல் விலக்கப்பட்டுள்ளன.
இந்திய உள்துறை அமைச்சகமும் இதை தெளிவுபடுத்தியுள்ளது. இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம் என்பது ஒரு தனிச் சட்டம். என்ஆர்சி என்பது ஒரு தனி நடைமுறை.
இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், என்ஆர்சி நடைமுறையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான விதிகள் குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்றும் தற்போதைக்கு அது அஸ்ஸாமில் மட்டும் உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமலில் உள்ளதாகவும் இந்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment