Friday, February 28, 2020

என். ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ: நீங்கள் இந்திய குடிமகன்தானா? - இதுதான் மத்திய அரசின் விளக்கம்


என். ஆர்.சி மற்றும் சி.ஏ.ஏ: நீங்கள் இந்திய குடிமகன்தானா? - இதுதான் மத்திய அரசின் விளக்கம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
"யார்-யார் இந்தியக் குடிமக்கள்?"
யார்-யார் இந்திய குடிமக்கள் என்பது பற்றி மத்திய அரசு திடீர் விளக்கம் அளித்துள்ளது.
நாடு முழுவதும் என்.ஆர்.சி. என்று அழைக்கப்படுகிற தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவித்துள்ளார்.
தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு பெரும் வன்முறை போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள்பதிவேடு தயாரிப்பும் நாட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதைப் பீகாரில் அமல்படுத்தப்போவதில்லை என்று அந்த மாநில முதல்-மந்திரி நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்தில் 2004-ம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின்படி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, பிற இடங்களில் பெற்றோர் இந்தியராக இருந்தாலோ அல்லது சட்டவிரோத குடியேறியவர்களாகவோ இல்லாதபோது அவர்கள் இந்தியர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
 IMAGES
இந்த சூழ்நிலையில், தற்போது யார், யார் இந்தியக் குடிமக்கள் என்பது பற்றிய மத்திய அரசு தரப்பில் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர், "இந்தியாவில் 1987-ம் ஆண்டு, ஜூலை மாதம் 1-ந் தேதி அல்லது அந்த தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் அவர்களின் குழந்தைகள் சட்டப்படி இந்தியக் குடிமக்கள் ஆவர். அவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-க்காகவோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்காகவோ கவலைப்படத் தேவையில்லை." என்றார்.
குடியுரிமை விவகாரத்தில், ஆவணங்களைக் காண்பிப்பது தொடர்பாக எந்தவொரு இந்திய குடிமகனும் தேவையற்ற முறையில் துன்புறுத்தப்படவோ அல்லது சிரமத்துக்கு ஆளாக்கப்படவோ மாட்டார் என மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.


குடியுரிமை திருத்தச் சட்டம் என்ன சொல்கிறது? மத்திய அரசின் விளக்கம்

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய அரசு உறுதி அளித்துவருகிறது. இருப்பினும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து திரித்துக் கூறப்படுகிறது என்று பா.. குற்றம் சாட்டிவருகிறது.

இதுகுறித்து தெரிவித்த மத்திய அரசின் உயர் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியபோது:

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து இந்திய இஸ்லாமிய மக்கள் அச்சம் கொள்ளவேண்டுமா?


இல்லை. சி.. மற்றும் என்.ஆர்.சி குறித்து எந்த மதத்தைச் சேர்ந்த எந்தக் குடிமகன்களும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

மதத்தின் அடிப்படையில் தேசிய மக்கள் பதிவேட்டிலிருந்து(NRC)மக்கள் வெளியேற்றப்படுவார்களா?

இல்லை. என்.ஆர்.சி என்பது மதத்தின் அடிப்படையில் கிடையாது. என்.ஆர்.சி நடைமுறை செய்யப்படும்போது மதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படாது.எப்படி குடியுரிமை கணக்கிடப்படுகிறது? அது அரசின் கைகளில் இருக்குமா?

1955-
ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் கீழ், 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட குடியுரிமைக்கான விதிகளின் அடிப்படையில் குடியுரிமை முடிவு செய்யப்படுகிறது. அது பொதுமக்கள் பார்வைக்கு உள்ளது. ஒருவர் இந்தியக் குடிமகனாவதற்கு ஐந்து வழிகள் உள்ளன.

1.
பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் குடியுரிமை
2.
வம்சாவளியின் அடிப்படையில் கிடைக்கும் குடியுரிமை
3.
பதிவு செய்யப்படுவதன் மூலம் கிடைக்கும் குடியுரிமை
4.
இயல்பாக்கத்தின் அடிப்படையில் கிடைக்கும் குடியுரிமை
5.
குறிப்பிட்ட இந்தியாவுடன் இணைவதன் மூலம் கிடைக்கும் குடியுரிமை(Citizenship by incorporation of territory)

என்.ஆர்.சி அமலுக்கு வரும்போது, என்னுடைய குடியுரிமையை நிரூபிக்க என்னுடைய பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழை நான் சமர்பிக்க வேண்டுமா?

உங்களுடைய பிறந்த தேதி, மாதம், வருடம் மற்றும் பிறந்த இடத்துக்கான ஆவணங்கள் மட்டும் போதுமானது. அது இல்லாத பட்சத்தில், உங்களுடைய பெற்றோர்களின் பிறந்த ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும். உங்களுடைய பெற்றோரின் எந்த ஆவணங்களும் கட்டாயம் கிடையாது. பிறந்த நாள் மற்றும் இடம் தொடர்பான உங்களுடைய குடியுரிமை நிரூபிக்க போதுமானது.

அத்தகைய ஏற்றுக்கொள்ளத்தக்க ஆவணங்கள் எது என்று இதுவரையில் முடிவு செய்யப்படவில்லை. வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், காப்பீடு ஆவணம், பிறந்தநாள் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் வீட்டு ஆவணம் ஆகிவற்றைச் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இத்தகைய ஆவணங்கள் மிக நீண்ட காலமாக உள்ளது. அதனால், எந்தக் குடிமக்களும் தேவையற்ற துன்புறுத்தல்களுக்கு ஆளாக மாட்டார்கள்.

என்.ஆர்.சி அமல்படுத்தப்படும்போது, என்னுடைய மூதாதையர்கள் 1971-ம் ஆண்டுக்கு முன்னர் இங்கே இருந்தார்கள் என்பதை நிரூபிக்க வேண்டுமா?

இல்லை. 1971-ம் ஆண்டுக்கு முன்னர் உங்களது பெற்றோர்கள் இந்தியாவில் இருந்தார்கள் என்பதை நிரூபிக்க பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட எந்த ஆவணங்களையும் காண்பிக்கத் தேவையில்லை. இது, அசாம் என்.ஆர்.சிக்கு மட்டுமே பொருத்தமானது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அசாம் என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்படுகிறது. பிற பகுதிகளில் நடைமுறைபடுத்தப்படவுள்ள என்.ஆர்.சி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அது, குடிமக்களுக்கான பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்கலின் விதிகள் அடிப்படையில் அமையும்.

படிப்பறிவில்லாத ஒருவர் எந்த உரிய ஆவணங்களும் இல்லாமல் இருந்தால் என்னவாகும்?

இத்தகைய விவகாரத்தில் சாட்சிகளைக் கொண்டுவர அதிகாரிகள் அனுமதிப்பார்கள். மேலும், பல்வேறு சரிபார்ப்பு அம்சங்கள் உள்ளன. அதற்கென உள்ள முறைகள் பின்பற்றப்படும். எந்த இந்தியக் குடிமகன்களுக்கும் தேவையில்லாத தொந்தரவுகள் வராது.

யாரேனும் திருநங்கை, கடவுள் மறுப்பாளர்கள், பழங்குடிகள், தலித், பெண்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் நிலமற்றவர்கள் என்.ஆர்.சியிலிருந்து நீக்கப்படுவார்களா?

இல்லை. என்.ஆர்.சி கொண்டுவரப்படும்போது மேற்கூறிய எவரும் பாதிக்கப்படமாட்டார்கள்.

இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019
2019 இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் (Citizenship (Amendment) Act 2019), பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானித்தான் ஆகிய இசுலாமிய மத அடிப்பப்டை நாடுகளில் வாழ்ந்த மதச்சிறுபான்மையோரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி, இந்தியாவில் குடியேறியவர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சட்டத் திருத்த மசோதா, இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா 09 டிசம்பர் 2019 அன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. [2][3][4]

மக்களவையில் இச்சட்டத் திருத்தத்திற்கு ஆதராவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்ததால் இச்சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. [5][6] மாநிலங்களவையில் இச்சட்டத் திருத்த மசோதா 10 டிசம்பர் 2019 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட போது, மசோதாவிற்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்ததால் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. [7][8][9]இச்சட்டத்திருத்த மசோதாவிற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் 12 டிசம்பர் 2019 அன்று ஒப்புதல் அளித்ததால், இது சட்டமாக உடனடியாக நடைமுறைக்கு வந்தது.[10][11][12]

No comments:

Post a Comment