Saturday, April 23, 2022

சலீம் அக்பர் & அனார்கலி

 சலீம் அக்பர் & அனார்கலி

இன்றைக்கும் பாகிஸ்தானில் இருக்கிற லாகூரில் அனார்கலி பஜார் என்ற இடத்தில் பளிங்கு கற்களால் ஆன ஒரு மாளிகை உள்ளது. அந்த மாளிகையின் நடுவில் பளிங்கு கற்களால் ஆன ஒரு கல்லறையும் உள்ளது. அத்துடன் அந்த கல்லறையில் ஒரு வாசகம் உள்ளதுஎன்னுடைய காதலியின் முகத்தை பார்ப்பதற்கு அல்லாஹ் கருணை காட்டினால், நான் இறந்த பின்னும் கூட அவருக்கு நன்றிக்கடன் செலுத்திக் கொண்டே இருப்பேன்.” இவ்வாறு அந்த கல்லறையின் மேல் ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும் அந்த வாசகத்தை எழுதியவர் மஜ்னூன் சலீம் அக்பர்.

அக்பரின் மகனான சலீமிற்கும் இந்த கல்லறைக்கும் ஒரு தொடர்பு இருக்கு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த கல்லறைக்கு உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதற்கு இன்றுவரை பதில் தெரியவில்லை. லாகூரில் இருக்கிற மக்களிடம் சலீம் பற்றியும் அந்த கல்லறை பற்றியும் ஒரு கதையை உள்ளது.

இது ஒரு செவிவழிச் செய்தியாக இருந்த கதைதான். பின்பு அதை நாடக வடிவில் மெருகேற்றி அதற்கு அனார்கலி என்று பெயரிட்டார்கள்.

இந்த கதை இவ்வளவு பிரபலமாக பேசப்பட்டதற்கான காரணம் இவர்களின் காதல் ஆழம் மட்டுமல்லாது, சலீம் பேரரசர் அக்பரின் மகனாவார். ஆகையால் இந்த கதை மிகவும் பிரபலமாக பேசபடுகிறது.

இந்த சலீம் அனார்கலி கதை மட்டும் உண்மையானதாக இருந்தால் அக்பரின் வரலாற்றிற்கு இது ஒரு மிகப்பெரிய கரும்புள்ளியாக இருக்கும். ஏனென்றால் அக்பர் மிகவும் நல்லவர் பாசமான அவர் அன்புக்கு மதிப்பு கொடுப்பவர் என்ற அவரின் வரலாறு பற்றி நாம் அறிந்திருப்போம். ஒருவேளை இது அக்பரின் வரலாற்றை கொச்சைப்படுத்துவதற்க்காக உருவாக்கப்பட்ட கதையா என்பது தெரியவில்லை. அப்படி உண்மையாக இருந்திருந்தால் இந்த கதை உள்நோக்கத்துடனே வரலாற்றிலிருந்து அளிக்கப்பட்டது என்றே கூறலாம்.

அது பதினாறாம் நூற்றாண்டின் இறுதிக்காலம். பேரரசர் அக்பரின் ஆட்சி காலம். அக்பருக்கு சலீம் என்று ஒரு மகன் இருந்தார். சலீம் போன்று அக்பருக்கு நிறைய மகன்கள் இருந்தாலும், அக்பருக்கு சலீம் ரொம்ப பிடிக்கும். தனக்கு பின்பு சலீம் தான் ஆட்சியை தொடர வேண்டும் என்று அக்பர் ஆசைப்பட்டு இருந்தார். ஆகையால் சலீமிற்கு அனைத்து அரச பயிற்சிகளும் வழங்கப்பட்டன. ஆனால் சலீம் சிறுவயதில் மிகவும் குறும்புக்காரன் மற்றும் பிடிவாதக்காரனாக இருந்தான்.

இவன் தன்னுடன் இருந்தால் இவன் பிடிவாதமும் குறும்புத்தனமும் அதிகமாகவே ஆகிக் கொண்டிருக்கும் என்று எண்ணி அக்பர் சலீமை 14 ஆண்டுகள் வேறு ஒரு இடத்தில் ராணுவ பயிற்சி எடுத்துக்கொள்ள அனுப்பியிருந்தார். 14 ஆண்டுகள் ராணுவ பயிற்சி முடிந்து நாட்டிற்கு திரும்பிய சலீமிற்கு திருவிழா போன்ற வரவேற்பளிக்கப்பட்டது.

சிறுவனாக சென்ற சலீம் இளைஞனாக திரும்பி வந்தான். விழா மிக அருமையாக இருந்தது. அந்த விழாவில் சலீம் கதாநாயகனாக விளங்கினான். புலவர்கள் கவிஞர்கள் என அனைவரும் விழாவில் பங்கேற்றனர். ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அதில் அனைத்து இசைக்கலைஞர்களும் தங்களது இசைக்கருவிகளைக் கொண்டு அரசை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.

இவ்வாறு நடந்து கொண்டிருக்க கடைசி நிகழ்ச்சியாக ஒரு நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நடன நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் அனைவரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர். ஏனென்றால் அந்த நடன நிகழ்ச்சியில் ஆடவிருப்பது பேரழகியான அனார்கலி. அனார்கலி என்பது அவளுடைய பெயர் கிடையாது. அது அவளுக்கு வழங்கப்பட்ட பட்டம்.

அனார்கலியின் உண்மையான பெயர் ஷாரிப் உன் நிஷா (Sharif un-Nissa). ஒருநாள் அனார்கலி அக்பரின் அரண்மனையில் நடனமாடிக் கொண்டிருக்கும் போது அவளின் நடனம்மொட்டவிழ்ந்த மாதுளை மலர் போல் இருந்ததால்அவளுக்கு அனார்கலி என்று பெயர் சூட்டினர். அதன் பிறகு யாரும் அவளின் இயர் பெயர் கொண்டு அழைப்பது இல்லை. அனார்கலி என்றே அழைத்தார்கள்.

அனார்கலி தான் அந்த அரண்மனையில் வந்து ஆட போகிறாள் என்று தெரிந்ததும் மக்கள் அனைவரும் சந்தோசமாகவும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அனார்கலி மிகவும் அழகாக இருப்பாள். அத்துடன் அவனுடைய நடனமும் மிகவும் நளினமாகவும் இருக்கும். அனார்கலி மிக மெதுவாக நடந்து அரண்மனையின் நடன மேடையை அடைந்தாள். மிக மெல்லிய பாடல் ஒன்றை பாடிக்கொண்டே நடனத்தை ஆரம்பித்தாள்.

அனார்கலி நடனமாடிக் கொண்டிருக்கும் போது சலீம் அவளின் கண்ணசைவுகள், கால் அசைவுகள் என அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்தான். அந்த நொடிப் பொழுதிலே சலீம் அவளின் மேல் காதல் கொண்டான். விழா முடிந்ததும் மக்கள் அனைவரும் வீடுகளுக்கு திரும்பினர். அனார்கலி தன் அந்தப்புரத்திற்கு திரும்பினார். ஆனால் சலீம் அனார்கலி பற்றி நினைத்துக் கொண்டே இருந்தான்.

இவ்வாறு அனார்கலி நினைவாகவே இருந்ததால், சலீம் மாறுவேடம் பூண்டு அந்தப்புரம் சென்று அனார்கலியை தனிமையில் சந்தித்து தன்னுடைய காதலை தெரிவித்தான். ஆனால் அனார்கலி அந்த காதலை முற்றிலுமாக மறுத்தாள்.

தாங்கள் யார் தங்கள் அக்பரின் மகன். அக்பர் அவருக்கு அடுத்து நீங்கள் தான் ஆட்சியை தொடர போகிறீர்கள். ஆனால் நான் ஒரு சாதாரண நடன மங்கை. நடன மங்கையாக பிறந்து, நிறைய மேடைகளில் நடனங்கள் ஆடி, அந்தப்புரத்தில் முடங்கிக் கிடந்து எங்கள் வாழ்க்கை முடியும், இதுதான் எங்களின் நியதி என்று கூறினாள். “ ஆகையால் உங்களின் காதலை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று கூறினார். ஆனால் சலீம் இதெல்லாம் கேட்டபாடில்லை. அடிக்கடி அனார்கலியை வந்து சந்திப்பான்.

அடிக்கடி அனார்கலியை வந்து சந்திக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு முறை வரும்போதும் அனார்கலியை பார்த்து நீ இந்த அந்தப்புரத்தில் முடங்கிக் கிடப்பதாக பிறக்கவில்லை, எனது ராணி ஆகவே நீ பிறந்துள்ளாய் என்று கூறுவான். எறும்பூரக் கல்லும் தேயும் என்பதுபோல் அனார்கலியின் மனதும் இழக்கத் துவங்கியது.

ஒரு சில நாட்களில் அனார்கலி சலீம் என் காதலை ஏற்றுக் கொண்டாள். வெகு சில நாட்களிலே காதல் பற்றிய விவரம் ஒற்றர்கள் மூலமாக அக்பரின் காதிற்கு எட்டியது. ஆரம்பத்தில் அக்பர் இது வெறும் மோகம் ஆக இருக்கலாம், ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும் என்று எண்ணினார். ஆனால் நாட்கள் நகர நகர நன்றாக புரிந்தது, சலீமிற்கு அனார்கலி மேல் இருப்பது மோகம் அல்ல காதல் என்பது. இது உண்மையாகவே காதல் என்னும் பட்சத்தில் இது மிகவும் விபரீதமாக முடியும்.

ஏனெனில் ஒரு இளவரசன் நடன மங்கையை மணம் புரிந்தால் நாட்டு மக்கள் எவ்வாறு விமர்சிப்பார்கள் என்று யோசித்தார். அவ்வாறு நடன மங்கையை மணம் முடித்தால் சலீமா அரசனாக முடியாது. அக்பருக்கு சலீமை தவிர வேறும் மகன்களை அரசராக அமர்த்த மனமில்லை. தன் ஆட்சியை காப்பாற்றும் தகுதி சலீமிற்கு மட்டுமே உள்ளது என்று ஆணித்தரமாக அக்பர் நம்பினார்.

ஒருவேளை அனார்கலியின் காதலால் அரியணையை நிராகரித்தால், தான் கட்டிவைத்த இந்த சாம்ராஜ்யம் என்னவாகும் என்று அக்பர் கலங்கினார். உடனே அக்பர் அனார்கலி அழைத்து கடுமையாக கண்டித்தார். இன்னொரு முறை உன்னை சலீமுடன் பார்த்ததாக காவலர்களின் என்னிடம் கூறினால் உன் உடலில் உயிர் இருக்காது என்று மிரட்டி விட்டுச் சென்றார். அனார்கலி எவ்வளவோ மறுத்தும் சலீம் மீண்டும் மீண்டும் அவளை சந்திக்க வந்தான்.

இருவரும் சலீம் அனார்கலி சந்திப்பது அக்பரின் காதிற்கு எட்டியது. அவர் மிகவும் கடுமையான கோபத்திற்கு உள்ளானார். உடனே அனார்கலியை சிறையில் அடைத்தார். சிறையில் இருந்து அனார்கலியை தன் நண்பர்களின் உதவியுடன் மீட்டு வேறு ஒரு இடத்தில் பதுக்கி வைத்திருந்தான் சலீம். இந்த செய்தி அக்பரின் காதிற்கு வந்ததும் அவரின் கோபத்திற்கு அளவே இல்லை. கூடிய சீக்கிரத்தில் அக்பர் அனார்கலியை கண்டுபிடித்துவிடுவார்.. கண்டுபிடித்தால் அனார்கலியின் உயிருக்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என்று சலீமின் நண்பர்கள் சலீமிற்கு எடுத்துரைத்தார்கள்.

அந்த சமயத்தில் சலீமிற்கு ஒரு யோசனை தோன்றியது. 14 வருடம் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த நண்பர் அனைவரையும் அழைத்துக்கொண்டு அக்பரை எதிர்த்து போர் தொடுத்தான். அக்பரின் படைக்கு முன்னால் பெரிய பெரிய அரசர்களின் படையே தோல்வியை சந்தித்தன. இதனால் இந்த சலீமின் சிறிய படையினால் அக்பரின் படையை எதுவும் செய்ய முடியவில்லை. அந்த போரில் தோற்ற சலிம் அக்பரால் கைதுசெய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

அடுத்தநாளே அக்பர் ஒரு அரசாணையை வெளியிட்டார். அந்த அரசாணையில் அனார்கலி எங்கிருந்தாலும் விரைவில் வந்த அரசரை சந்திக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், சலீமிற்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பித்து இருந்தார்.

இதை அறிந்த அனார்கலி அரசரை சந்திக்க முடிவு செய்தாள். ஆனால் சலீமின் நண்பர்கள் அனார்கலிக்கு அறிவுரை கூறினார்கள். அக்பர் சலீமை கொள்ளமாட்டார், இது ஒரு சூழ்ச்சி போன்றே தோன்றுகிறது தயவு செய்து எந்த முடிவும் எடுத்து விடாதே என்று கூறினார்கள். தன்னால் சலீமிற்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்று பயந்த அனார்கலி யார் பேச்சையும் கேட்காமல் அரசரின் முன் போய் நின்றாள்.

அரசரிடம் அனார்கலி, சலீமிற்கு பதிலாக அந்த தூக்கு தண்டனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனக்காக அவர் எந்த தண்டனையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறினார். அத்துடன் ஒரே ஒரு மாலை பொழுதில் நான் சலீமை சந்திக்க வேண்டும் என்றும் அரசரிடம் வேண்டிக் கொண்டாள். அவளின் வேண்டுகோளுக்கு இணங்க ஒருநாள் மாலை வேளையில் சலீமை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. அனார்கலியை பார்த்ததில் மிகவும் ஆனந்தம் அடைந்தான் சலீம். நிறைய பேசினான். ஆனால் அனார்கலியால் எதுவுமே பேச முடியவில்லை. ஏனென்றால் அனார்க்கலி நன்கு தெரிந்திருந்தது இதுதான் சலீமை தான் சந்திக்கும் கடைசி நாள் என்று.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது அனார்கலி தன் கையாலேயே சலீமிற்கு மயக்க மருந்து கொடுத்தாள். சலீம் மயங்கி விழுந்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே காவலர்கள் அனார்கலியை கைது செய்து அழைத்துக் கொண்டு சென்றார்கள். மயங்கி கிடந்த சலீமின் முகத்தை பார்த்தபடியே அனார்கலி காவலர்களுடன் நடந்து சென்றாள். அனார்கலியை கடைசியாக லாஹூரில் இருக்கும் ஒரு இடத்திற்கு கூட்டி சென்றார்கள்.

அங்கு ஏற்கனவே ஒரு குழி தோண்டப்பட்டு இருந்தது. அதன் இரு புறமும் சுவர்கள் இருந்தன. ஒரு கல்லறை கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு மரப்பலகையில் அனார்கலியின் இரு கைகளையும் கட்டி அந்த மரப்பலகையை அந்த குழிக்குள் அனுப்பினார்கள். அந்தக் குழி மிகவும் இருட்டாகவும் மூச்சு விட மிகவும் சிரமமாகவே இருந்தது.

அறியாமல் இந்த தண்டனையை ஏற்றுக்கொண்டுவிட்டோமோ என்று அனார்கலிக்கு தோன்ற ஆரம்பித்தது. அனால் நிலைமை கை மீறிச் சென்றுவிட்டது. அனார்கலி உயிரோடு இருக்கும்போதே ஒவ்வொரு செங்கல் களாக வைத்து கல்லறை கட்ட ஆரம்பித்தார்கள். கடைசி செங்கல் வைத்து கல்லறை கட்டி முடிக்கும்போது மூச்சு விட முடியாமல், மிகுந்த துன்பத்துக்கு ஆளாகி அனார்கலி கல்லறையில் தனது கடைசி மூச்சை விட்டாள். அடுத்தநாள் மயக்கம் தெளிந்து எழுந்த சலீமிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அனார்கலியின் மரணம் பற்றி தெரியப்படுத்தப்பட்டது.

அதைக்கேட்டதும் சலீம் உடனே லாஹூக்கு சென்றான். ஆனால் அந்த கல்லறையை நெருங்காத படி காவலர்கள் சூழ்ந்து இருந்தார்கள். தூரத்திலேயே உட்கார்ந்து தன்னை அடித்துக்கொண்ட அழுதான். அப்போது சலீம் சொன்ன வாக்கியம் தான் இவைகள்இந்த இடத்தில் என் காதலி உறங்கிக் கொண்டிருக்கிறாள்என் காதலியின் முகத்தை பார்ப்பதற்கு அல்லாஹ் கருணை காட்டினால் இறந்தபின்னும் அவருக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருப்பேன்..” என்று. இந்த சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் கழித்து அக்பருக்கு அடுத்து சலீம் ஆட்சியை தொடர்ந்தார்.

பல போர்களில் திறமையுடன் செயல்பட்டு வெற்றி கண்டதால் சலீமிற்கு ஜஹாங்கீர் என்று பட்டம் சூட்டப்பட்டது. இந்த ஜஹாங்கீருக்கு திருமணம் நடந்தது, குழந்தைகள் பிறந்தது, இவ்வாறு நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. அனைவரும் அரசர் அனார்கலியை மறந்து விட்டார் என்றே நினைத்தார்கள். ஆனால் மரணப்படுக்கையிலும் கூட சலீம் கூறிய கடைசி வார்த்தை அனார்கலி என்பதேயாகும்.

இந்த கதையானது வரலாற்றில் இருந்து நீக்கப்பட்ட ஒன்று என்றே நமக்கு தோன்றுகிறது. இந்த கதை உண்மை என்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன.

·  எடுத்துக்காட்டாக லாகூரில் இருக்கும் அனார்கலியின் கல்லறை, அதில் எழுதப்பட்டிருக்கும் வாசகம் மற்றும் அதில் எழுதப்பட்டிருக்கும் பெயர்.

·  அக்பரை 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் சலீம் எதிர்த்து போர் செய்ததும் உண்மைதான்.

ஆகையால் கண்டிப்பாக இந்த கதையும் உண்மையாகவே இருந்திருக்கும் வேண்டுமென்றே இது வரலாற்றில் இருந்து நீக்கப்பட்டதாக கூட இருக்கலாம்.

இவ்வாறு நாம் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில் சிலர் சலீம் அனார்கலி கதையை எதிர்க்கவும் செய்கிறார்கள். ஏனென்றால் சலீமின் சுயசரிதையில் அனார்கலி என்ற பெயர் இடம் பெறவே இல்லை . மற்றொன்று அக்பரின் மற்ற செயல்கள் அதாவது அன்பு, கொடை, மக்களின் பாதுகாப்பு என அனைத்தையும் வைத்து பார்க்கும்போது ஒரு பெண்ணை உயிருடன் வைத்து சமாதி செய்யுமளவிற்கு அக்பர் கொடூரமாக இருந்திருக்க மாட்டார் என்றும் ஒரு தரப்பு வாதம் இருக்கிறது.

உண்மையோ பொய்யோபிறப்பால் உயர்வு தாழ்வு பார்த்து பிரிக்கப்பட்ட காதல்களுள் இந்த காதலும் ஒன்று!!

 

No comments:

Post a Comment