தஞ்சாவூர் ... பழைய நினைவுகள்...
பழைய வெண்ணாற்று பாலமானது மராட்டிய கடைசி மன்னர் சிவாஜி ராஜா அவர்களால்
1830/40களில் கட்டப்பட்டது .. (அப்போது கட்டப்பட்ட பாலம் 2014 வரை உபயோகத்தில் இருந்தது .. பிறகு தான் புது பாலம் கட்டி திறக்கப்பட்டது) அப்போது பள்ளியகரஹாரம் பகுதி ஆங்கிலேயர் டாஞ்சூர் டிஸ்ட்ரிக்டின் பகுதியை சார்ந்ததாக இருந்தது ..
.. அப்போது ஆங்கிலேயர் கேட்டுக்கொள்ள ... தஞ்சை கோட்டை நகரத்துக்கு மட்டும் ராஜாவாக இருந்த சிவாஜி மன்னர் இந்த பாலத்தை பெருந்தன்மையோடு கட்டிக்கொடுத்தார். கடைசி மன்னர் சிவாஜி ராஜா 1855 காலமானார் ... அது முதல் தஞ்சை கோட்டை நகரமும் ஆங்கிலேயர் வசம் வந்தது .. ஏற்கனவே 1803 முதல் மானோம்புச்சாவடி பகுதியில் தான் ஆங்கிலேயர் நிர்வாக கட்டிடம் ..
"ரெசிடெண்சி"
இருந்தது .. இன்றும் இக்கட்டிடம் பராமரிப்பின்றி உள்ளது .. புளியமரத்தடி கோர்ட் தான் தஞ்சை டிஸ்ட்ரிக்டின் முதல் ஜில்லா கோர்ட் ... அதன் அருகில் தான் இந்த கட்டிடம் உள்ளது ...
Selvaraj Nayakkavadiyar:
பெயரளவில் மன்னராக இருந்த சிவாஜி ராஜா ....வருமானம் கிழக்கு இந்திய கம்பெனி நிருவாகம் வழங்கிய பென்ஷன் + ராஜ்ஜியத்தின் வருமானத்தில் 1/5 பாகம்.... இதை வைத்துக் கொண்டு தஞ்சை கோட்டை நிருவாகம் ...அரச குடும்பம் அதிகாரிகள், ஊழியர்கள் சம்பளம்... இந்த சொற்ப வருமானத்தில்...தஞ்சை கோட்டைக்கு வெளியே மன்னர் என்ற அதிகாரம் இல்லாத நிலையில் அவர்.... ஐந்து ஆற்றில் பாலங்கள் கட்டியுள்ளார்.....
வடவாறு.....வெண்ணாறு....வெட்டாறு.....குடமுருட்டி.... காவேரி....அப்போது ஆண்டு முழுவதும் ஆற்றில் நீரோட்டம் இருக்கும்.... இடையே உள்ள பாசன வாய்க்கால்கள்.....தஞ்சாவூரில் இருந்து திருவையாறு வரை சாலையும் போட்ட சாதனை இந்தியாவில் எந்த மன்னரும் செய்யாத மாபெரும் சாதனை.....இந்த பாலங்கள்... சாலை வேலையை கான்ட்ராக்ட் எடுத்து செய்தவர்கள் ஆங்கிலேயர்கள்தான்....வெண்ணாற்று பால வேலை நடைபெறும் போது ஒரு ஆங்கிலேய என்ஜினியர் இறந்து போனார்.... மன்னர் சிவாஜியின் இந்த சாதனை இதுவரை பொது வெளியில் பேசப்படவில்லை என்பது வருத்தமான செய்தி.....
Gnanasekar John:
இவர்தான் திருவையாறு பாலம்,கண்டியீர் குடமுருட்டி,அம்மன்பேட்டைவெட்டாறுபாலம்,திருவையாறில்இரண்டு புறாக்கூண்டுகள்,அரசர் கல்லூரியின் பின்புறமுள்ள கல்யானமஹால் ,அவர்தான் கட்டியுள்ளார்.புறாகூண்டு அவர் வாரிசு வேண்டி கட்டபட்டதாம்.வாரிசு இல்லாததால் அரசையும் இழந்தார்.கல்யான மகால் கல்யாணியை கங்கை கரையில் கண்டு அழைத்துவந்த்தாகவும்,கங்கை கரையில் உள்ள மாளிகைபோல்வேண்டும் என கேட்டதால் அந்த மகால் கட்டபட்டதாக வரலாறு.
பாவலர் தஞ்சை தர்மராசன்:
"மத்திய நூலகம், பாரத ஸ்டேட் பாங்க், TTC பஸ் நிலையம் ஆகியகோட்டைஅகழிப்பகுதிகள் சீதாபழ மரக்காடுகளாக இருந்தன. அக்காலத்தில் பாலியல் தொழில் புரியும் பெண்கள் மலக்கழிவு உள்ள அங்குதான் இருப்பார்கள் ,ஆஸ்பத்திரி சாலையில் மாலை மயங்கும் நேரத்தில் வரும் ஆண்கள் திடீரென அங்கு செல்வர், காரணம் எனக்கு புரியாது . .
. .
சிவகங்கைப்பூங்காவின் பின்புறம் உள்ள சிவகங்கை குளத்திலிருந்து சீனிவாசபுரம் முதல் பாலம் வரை வரும் அகழி *நல்லதண்ணி அகழி* தற்போது புதிதாக கட்டப்பட்டுள்ள இரண்டாவது பாலம் வரை முன்பிருந்த குளம் * பொது மக்கள் குளிப்பதற்கான குளம் * அதை அடுத்து தற்போது கட்டப்பட்டுள்ள மூன்றாவது பாலம்வரை முன்பிருந்த குளம் * மாட்டு அகழ் * எனப்படும் கால்நடைகளை குளிப்பாட்டும் குளமாகும் . அதை அடுத்து செபமாலைபுரம் வரை செல்லும் வாய்க்கால் போன்ற நீரோடை *வண்ணான் அகழி * எனப்படும் ,இவை அனைத்தும் சிவகங்கை குளத்திலிருந்து தொடர்ந்து செல்லும் நீரவழிப்பாதைகள் ,இது சீனிவாசபுரம், மேலவீதி போன்ற இடங்களில் இருக்கும் கிணறுகளுக்கான நீராதாரமாகும் . .
. .
மழை பெய்த மறுநாள் மேல அகழங்க பகுதிதியில் இருக்கும்/ இருந்த கோட்டை மீது ஏறி மண்ணைக் கிளறினால் சிறிய மண்கலயங்கள் அகப்படும் , அதன் உள்ளே அம்மன் செப்புக்காசுகள் நிறைய இருக்கும் ,அதை போட்டு எடைக்கு எடை பேரீச்சம்பழம்
வாங்கி தின்போம் .இது 1950 வாக்கில் நடைபெற்றது. அது சரி அந்த அம்மன்காசுகள் ஏது ? மராட்டிய மன்னர்கள் எதிரிகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள யாகம் செய்த அம்மன்காசுகளால் நிரப்பிய மண் கலயங்களை கோட்டை முழுவதும் புதைத்து வைத்தனராம்.
துளசிச்செடியை கோட்டையை சுற்றி வளர்த்தனராம் அதை தாண்டுவது பாவம் என்பது நம்பிக்கை, எதிரிகளுக்கு இதெல்லாம் தெரியாது, குளத்தில் முதலைகளையும் பாதுகாப்பிற்காக விட்டுவைத்திருந்ததாக கூறுவர். . . . .
திலகர் திடலை சுற்றிலும் ஆடுதொடா இலை மரங்கள் இருக்கும், திடலின் நடுவிலிருந்த மண்டபத்தில் திலகர் சிலை இருக்கும் , ஏதேனும் கூட்டங்கள் நடந்தால் ,மைக் வசதி உண்டு ,பெண்களுக்கு தனி இட வசதி உண்டு என நோட்டீஸ் அடிப்பார்கள். . .
தற்போது உள்ள அண்ணா நூற்றாண்டு விழா கட்டிடத்திற்கு முன்பு இருந்த புளிய மர நிழலில் மோடி மஸ்தான் பேர் வழிகள் நாடா குத்துதல் , பாம்பு ,கீரி சண்டை ,மூனுசீட்டு போன்ற ஏமாற்றுத்தொழில் செய்துவந்தனர் அதில் காலு பாய் என்பவர் கில்லாடி ,எங்கள் வீட்டருகில் வசித்து வந்தவர் , ஆஸ்பத்திரிக்கு நான் செல்லும்போது அங்கு நின்று வேடிக்கை பார்த்தால் ஒருவர்வந்து நைஸாக ஓரங்கட்டி அழைத்துச்சென்று தம்பி வீட்டுக்கு போய்விடு என்று அனுப்பிவிடுவார், அவர்களின் ரகசியம் எனக்குத்தெரியும் , கவரிங் செயினை கீழே போட்டு பணம் பறித்த கலையை பின்னர் குறிப்பிடுகிறேன் .
சிவகங்கைப்பூங்காவிற்கு முன்பு பிரிந்து செல்லும் 5 சாலை சந்திப்பில் மிகப்பெரிய அரசமரம் ஒன்று இருந்தது 1950
வாக்கில் அதைச்சுற்றி சுமார் 20 அடி விட்டம் இருக்கலாம் ஒரு ஆள் உயரத்தில் நகராட்சி ஒரு வட்டவடிவ மேடை அமைத்தது . .
.
தஞ்சை இராசவீதிகளை அடு்த்தடுத்துள்ள சந்துகளின் பெயர்கள் அனைத்தும் அரண்மனை ஊழியர்களின் நினைவாக மராட்டிய மன்னர் காலத்தில் வைக்கப்பட்டன
எடுத்துக்காட்டாக
தெற்குவீதி --முதுபோக்கி (சமையல்காரர்) சுப்பராயபிள்ளை சந்து ---
கண்டிதாவுத்சா சாகேப் சந்து - மேலவீதி , தாவுத்சா சாயபு ,கண்டி அதாவது கொழும்புவிலிருந்து வெண்ணை கொண்டுவந்து கொடுப்பவர்
காகா வட்டாரம் --மேலவீதி ---அரண்மனையின் உண்மையான ஊழியராக இருந்த மராட்டியர் ஒருவரை மன்னரின் குழந்தைகளும் உறவினர்களும் காகா(சித்தப்பா ) என்றே அழைத்தனர் , அவரது பெயரே மறைந்துவிட்டது , அந்தபகுதியே காகாவட்டாரம் ,அரண்மனைப் புரோகிதர்களான ,அப்ஜன்னா (வட்டாரம்),பச்சன்னா (சந்து) மேலவீதிப்பகுதி....."
"தஞ்சை ரயிலடி கீழ்பாலத்தை ஒட்டியுள்ள பெட்ரோல் பங்க் தான் தஞ்சையின் முதல் பஸ்ஸ்டான்டு ,பக்கிரி லாரி செட் என்றும் கூறுவர்.
Ravichandar Muthuswamy:
தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் 2 /
3 நடை ேமைட பிள்ைளயார் கோயில் எதிரில் (VRR ) மரக்கறி உணவு சாலை இருந்தது. அதன் பின்புறம் ஓரு சப்ேவ இருந்ததாக சொல்ல கேள்வி. அதன் மறு முனை பக்கிரி ிசட் (தற்ேபாது DBS
petrol pump அருகிலுள்ள காலி மனை ) அது தான் அப்போது bus stand என்றும் கூ றுவர்.
Rajendrakumar Acharya:
ஆம். PCT
( புதுக்கோட்டை கோவாப்ரேடிவ் ட்ரான்ஸ்போர்ட் ) னு பஸ்கள் அங்கிருந்து கிளம்பும். எனது முத்த சகோதரி மன்னர் சரபோஜி கல்லூரிக்கு அந்த பஸ்ஸில் செல்லுவார். ஸ்டாப்பிங் - கான்வென்ட் அருகிலுள்ள TVS
workshop.
Gopalan Venkataraman
இப்போதைய திலகர் திடல் புட்புதர்கள் அடர்ந்த காடுகளாக இருந்தது அங்குதான்
"இரவு ராணிகள்" என்போர் போவோர் வருவோரை அழைத்தனர். நீங்கள் சொல்லும் சீத்தாக்காடு என்பது நீதிமன்றத்தின் பின்புறம் இப்போது அங்கெல்லாம் கட்டடங்கள் வந்து விட்டன, அங்கு செல்ல இப்போதைய மல்லிகா ஃபர்னிசர்மார்ட் இருக்குமிடமும் கோர்ட் அருகிலும் பாதைகள் இருந்தன. அதுவும் டேஞ்சர் பகுதியே.
Gopalan Venkataraman:
"இப்போதுள்ள திலகர் திடல், பழைய பேருந்து நிலையம், அரசு டிரான்ஸ்போர்ட், ஸ்டேட் வங்கி, மத்திய நூலகம், TCWS, திருவள்ளுவர் அரங்கம் இவை யாவும் கோட்டையின் அகழியாக இருந்திருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் திருவையாறு பேருந்து நிலையமும், நகராட்சி உயர்நிலைப் பள்ளியின் பின்புறமுள்ள நீண்ட நெடும் அகழி.
முன்பெல்லாம் ரயில் நிலையத்திலிருந்து நகரத்தினுள் நுழைய காலையில் வெளிச்சம் வரும்வரை காத்திருப்பார்கள். நான்கு மணிக்கு வரும் போட் மெயிலில் இறங்கி ஆனந்தா லாட்ஜின் பின்புறம் பெரிய தொட்டியில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீரில் பல்தேய்த்து முகம் கழுவிக்கொண்டு, அங்கு காஃபி அருந்திய பின் மாட்டு வண்டியில் ஊருக்குள் வருவர்.
இப்போது பழைய பேருந்து நிலையம் வாயிலில் உள்ள காவல்துறை பூத் வாசலில் ஒரு பாலம் உண்டு, அதைத் தாண்டித்தான் அலங்கத்தினுள் நுழைய வேண்டும்.
அப்போதெல்லாம் பேருந்து நிலையம் ஜங்ஷன் அருகிலுள்ள கீழ்ப்பாலத்தின் அருகிலுள்ள பெட்ரோல் பங்க் இருக்கிறதல்லவா அந்த இடத்தில் இருந்தது. ஐயனார்,எஸ்.டி.லிங்கம், போன்ற பஸ்கள் பட்டுக்கோட்டைக்குச் செல்லும். . .
. ."
Rajendrakumar Acharya:
இந்த புதாறு வெட்ட இரண்டு ராக்ஷத மிஷின்கள் வந்தன என்றும், அவற்றின் பெயர் காவேரி - பவானி என்றும், வெட்டும் பணியை பார்த்ததாகவும் கூறுவார்.
Govi Mohan
யாகப்பா திரையரங்கில் பெருந்தலைவர் கலந்துகொன்ட ஊழியர் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதை பெருமையாக கருதுகிறேன் இங்கு அய்யர் கடையின் மசால் வடை சுவையானது
Abdul Jaleel:
திரைப்படம் தொடங்குவற்கு முன் ஒலிக்கும் மணி ,தியேட்டர்நடுவி்ல்மட்டும் எரியும் மங்கலான விளக்கு,திரைச்சீலை விலக்க சக்கரத்தைச்சுற்ற மறைமுகமாகத்திரைக்குப்பின் செல்லும் ஊழியா் கீழிருந்து மேலாக மெதுவாகச்செல்லும் பட்டுத்திரை,welcome
என்று வரும்slide தொடர்ந்துவரும் திரைப்படம் 69 ஆண்டுகளுக்குப்பின்னும் மறக்கமுடியாத அனுபவம்
Kavingan Kavithai:
வெள்ளைப்பிள்ளையார கோவில் ரவுண்டானாவில் ராஜா காலத்திய கோட்டை நுழைவு வாயில் இருந்த்துது..அண்ணாசிலைக்கருகில்
coronation diamond jublie எனும் வளைவு இருந்த தது..ஐம்பது ஆண்டுக்கு முன் மாலை வேளையில் பெரிய கோவிலில் இவ்வளவு கூட்டம் இருக்காது..தனியாக கோவிலுக்கு வரவே அச்சமாய் இருக்கும்..
Abdul Jaleel:
தஞ்சை கீழவாசல் கோட்டை வாசலை இடிப்பது 1958வாக்கில் தொடங்கியது.... கோட்டை வாசலை மட்டும் விட்டு விட்டு சுவரை இடித்து வெள்ளய்ப்பிள்ளயார் கோயில் பக்கம் இருந்து வரும் பேருந்துகளுக்கு வழி அமைக்க ப்பட்டது..
அதன் பிறகு சிறிது சிறிதாக கோட்டய் வாசலும் இடிக்கப்பட்டது
நான் அருகில்அமைந்துள்ள உலகப்புகழ்பெற்ற பள்ளியில் படிக்கும் போது .. இந்தக்கோட்டைவாசல் வழியாக மூன்றாண்டுகள் தினமும் 4முறை கடந்துசெல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது
இன்றளவும அந்த இடத்தைக்கடந்து செல்லும்போது மனது கனக்கிறது...
பழைய தஞ்சை நினைவுகள் ...
தொடர்கதையாக... தொடரும் ..
No comments:
Post a Comment