Monday, July 17, 2023

உணவு பழக்கம் பழமொழி வடிவில்

 உணவு பழக்கம் பழமொழி வடிவில்


காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா

சீரகம் இல்லா உணவும், சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

தன் காயம் காக்க வெங்காயம் போதும்

வாழை வாழ வைக்கும்

அவசர சோறு ஆபத்து

ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்

இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு

ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை

இருமலை போக்கும் வெந்தயக் கீரை

உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி

கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்

குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை

கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை

சித்தம் தெளிய வில்வம்

சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி

சூட்டை தணிக்க கருணை கிழங்கு

ஜீரண சக்திக்கு சுண்டக்காய்

தலை வலி நீங்க முள்ளங்கி சாறு

தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை

பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி

மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு

வாந்திக்கு மருந்து மணத்தக்காளி

வாத நோய் தடுக்க அரைக் கீரை

வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்

பருமன் குறைய முட்டைக்கோஸ்

பித்தம் தணிக்க நெல்லிக்காய்

உணவு மருந்தாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும்

No comments:

Post a Comment