அரசர்களின் அந்தப்புரம்
சக்கரவர்த்தி முதல் குறுநில மன்னர்கள் வரை அந்தப்புரம் வைக்காத மன்னர்களே கிடையாது. இந்த வார்த்தையை உபயோகிக்காத எந்த வரலாற்று எழுத்தாளரும் இல்லை. அந்தப்புரம் எப்படி இருந்திருக்கும் என்பதை பற்றி அறியும் ஆவல் பலருக்கும் இருக்கும்.
அதை பூர்த்தி செய்ய ஒரு சிறு முயற்சிதான் இந்த கட்டுரை.
துருக்கி சுல்தான்களின் அந்தப்புரம்தான் உலகிலேயே மிகவும் பிரசித்தப் பெற்றதும், சரித்திர ஆசிரியர்களால் கொண்டாடப்படுவதும் ஆகும்.
அந்தப்புரம் எப்படி இருக்கும்...?
நீண்ட திரைச் சீலைகள்...!
அலங்கரிக்கப்பட்ட மாடங்கள்..!
எங்கு நோக்கினும் அழகிகள்....!
சில மன்னர்கள் தங்கள் வருவாயில் அறுபது சதவீதம் அந்தப்புரத்திற்கு செலவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...!
அந்தப்புரத்தின் தலைவி என்பவர் பட்டத்து மகாராணிதான். அந்தப்புரத்து பெண்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகிறார்கள்.
1. மகாராணி -
மன்னர் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொண்ட பெண்கள்
2. ராணி -
திருமணம் செய்து மனைவி போல நடத்தப்படுபவர்
3. ஆசை நாயகிகள் -
மன்னனோடு கலவி கொண்டவர்கள்
4. அழகிகள் -
மன்னனின் கடைக்கண் பார்வைக்காக காத்திருப்பவர்கள்
சரி இவர்களுக்கு உணவு, உடை, தங்குமிடம் எப்படி...?
மகாராணிகள் அறைகள் மிகப் பெரியது. சேவகம் செய்யவே நூற்றுக்கணக்கான பெண்கள் இருப்பர்கள்.
ராணிகள் அறைகள் ஓரளவுக்கு பெரிதாக இருக்கும்.
ஆசை நாயகிகளுக்கு ஒரே ஒரு அறைதான்.
மற்ற அழகிகள் பொது அறையில் தான் தங்க வேண்டும்.
உணவைப் பொருத்தவரையில் அரண்மனையில் ஒரு நாளைக்கு எழுபது பதார்த்தங்கள் சமைத்தார்கள் என்றால் மகாராணி எதுவேண்டுமென்றாலும் கேட்டு சாப்பிடலாம்.
தங்க தட்டில் பரிமாறப்படும்.
ராணிகளுக்கு முப்பது பதார்த்தங்கள் வரை வெள்ளித் தட்டில் வைத்து கொடுக்கப்படும்.
ஆசை நாயகிகளுக்கு அதிகப் பட்சம் பத்து பதார்த்தங்கள் பித்தளை தட்டில் வைத்து பரிமாறப்படும்.
தங்கள் அழகுக்கு அழகு சேர்ப்பது...!
மன்னரை மகிழ்விப்பது...!
இசை, ஆடல், பாடல், கூடல் கலைகளைக் கற்றுக் கொடுக்க அதில் அனுபவமிக்க தனித்தனி ஆசிரியைகள் உண்டு.
பட்டத்து மகாராணிக்குத்தான் கொஞ்சம் அதிகப்படியான வேலை. அந்தப்புரத்தின் வரவு செலவு கணக்குகளைப் பார்ப்பது, சமையல் துறை, மருத்துவ துறை, மன்னர் திருமணம் செய்த பெண்களையும் அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் பற்றி கணக்கு வைத்துக் கொள்வது....!
ஒவ்வொன்றையும் கவனிக்க தனித்தனி செயலர்களை மகாராணி வைத்துக் கொள்ளலாம்.
அந்தப்புரத்தில் நுழைய மன்னருக்கு மட்டுமே அனுமதி உண்டு. காவலுக்கு பிறப்புறப்பு நீக்கப்பட்ட திருநங்கைகள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். பல நேரங்களில் மன்னனின் நம்பிக்கைக்குரிய காவலர்கள் நியமிக்கப்படுவதும் உண்டு. அத்துமீறி நுழைபவர்களின் தலை அல்லது வேறுஉறுப்புகள் வெட்டப்படும்.
பகை நாட்டிலிருந்து போரின் மூலம் பிடித்து வரப்படும் அழகான பெண்கள் அந்தப்புரத்தில் சேர்க்கப்படுவார்கள் (தமிழ் இலக்கியங்களில் கொண்டி மகளிர் என அழைக்கப்படுவார்கள்)
குறுநில மன்னர்களிடமிருந்து அன்பளிப்பாக வரும் அழகிகளும் அந்தப்புரத்திற்கு அனுப்படுவார்கள்.
மாற்றப்பட்டு மன்னர் நகருலா வரும்போது, வேட்டைக்குச் செல்லும்போது அகப்படும் அழகான பெண்களும் அந்தப்புரத்திற்கு அனுப்படுவார்கள்.
அந்தப்புர பெண்கள் பெரும்பாலும் அதை விட்டு வெளியே செல்லக் கூடாது. சென்றாலும் எதாவது விழாக்களுக்கோ, ஆறு குளங்களில் நீராடவோ, கோவிலுக்கோ மொத்தமாக செல்ல அனுமதிக்கப்படுவர். ஓரளவு வயதான பின்பு அந்தப் பெண்கள் அந்தப்புரத்திலிருந்து வெளியற்றப்படுவார்கள். இதனிடையே அந்தப்புரத்திலிருந்து பெண்கள் வெளியேறினாலும், வேறு யாருடன்
தொடர்பு வைத்திருந்தாலும் மரண தண்டன் நிச்சயம்.
நோய் உள்ளவர்கள் (காய்ச்சல், சளி),
மாதவிடாய் கொண்டவர்கள் கூந்தலை அள்ளி முடியக் கூடாது. அதுதான் மன்னருக்கு கொடுக்கப்படும் சமிக்கை. அந்த சமிக்கையை உணர்ந்து மன்னர் கூந்தல் அள்ளி முடியாதவர்களை தொட மாட்டார். நீண்ட திரைக்கு பின்னால் அமர்ந்துதான் வைத்தியம் பார்க்க வேண்டும். எந்த ராணிக்கு எந்த வியாதி, என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்ற விபரங்கள் மருத்துவர் மூலம் தினமும் மன்னருக்கு தெரிவிக்கப்படும்...!!!
No comments:
Post a Comment