Sunday, August 24, 2025

நினைத்தாலும் இனிக்கும் சுகம்

 


நினைத்தாலும் இனிக்கும் சுகம்

மனைவி காலையில் குளித்து விட்டு
தூங்கும் கணவனை எழுப்ப
கட்டிலுக்கு வருவதும்...

அருகே குனிந்து நிற்கையில் அவன்
சட்டென மனைவியை அருகே இழுத்து
அணைத்து முத்த மழை பொழிவதும்...

முந்தானை சரிந்து அவன் மேல்
விழுந்த அவளோ
"
என்ன இது விடுங்க விடுங்க.. "
என்று மனதிற்குள் அதை ரசித்து கொண்டே பொய்க்கோபத்துடன்
அவனை விட்டு விலகுவது
போல நடிப்பதும்...

அவனோ விடாமல் அவளை
இறுக்கி அணைத்து தன் காதல் காம சில்மிஷங்களை தொடர்வதும்...

மென்மையான பெண்மையினால்
அவன் ஆண்மையின் வலிமையை
விட்டு வெளிவர முடியாமல்,
இறுதியில் மெல்லிடையாள் அவளும் வேறு வழி இன்றி அவனுக்கு
ஒத்துழைத்து இருவரும்
இன்பம் அடைவதும்...

இரண்டறக் கலந்து பின்
இன்ப மயக்கத்தில் அவர்கள்
இவ்வுலகையே மறந்து
சொர்க்கமும் தோற்கும் சுகத்தில்
தம்மை மறந்து
கட்டுண்டு கிடப்பதும்...

சட்டென ஏதோ சத்தம் கேட்டு
சுயநினைவு வந்தவளாய்,
அமுதும் தேனும் அருந்தி
மயங்கி கிடக்கும் மணவாளனை
தள்ளி விட்டு விட்டு,
எழுந்து நின்று அவனை பார்த்து
"
தப்பி விட்டேன் பார்த்தாயா "என
பழிப்பு காட்டி அவள் சிரிப்பதும்...

தன் வேலை முடிந்து விட்டது
என கணவன் பதிலுக்கு
கேலி செய்து சிரிப்பதும்...

"
இரவு முழுவதும் என்னை
இம்சித்தது போதாதா !
விடிந்த பின்னும் விருந்து
வேண்டுமா உமக்கு? "என
அவள் முறைப்பதும்...

"
உன்னை அனுபவிக்க ஓர் இரவு
போதாது கண்மணியே என எழுந்து
அவளை நெருங்கி நின்று
அவன் கண்ணடிப்பதும்...

இதற்கு மேலும் இங்கு நின்றால்
அவன் அடுத்த சுற்றை
ஆரம்பித்து விடுவான் என உணர்ந்து

"
போங்க மறுபடி என்னை குளிக்க வச்சுட்டீங்க "
என பொய்க்கோபத்துடன் அவள்
தப்பித்து மீண்டும் குளியலறையில் சென்று நுழைவதும்...

பின் தொடரும் கணவனை
வெளியே தள்ளி விட்டு
கதவைத் தாழிட்டு நகைப்பதும்...

பின் மஞ்சள் பூசிய முகம் சிவந்திருக்க
அவனால் கடிபட்ட தடங்களை
தொட்டுப்பார்த்து
கணவனின் குறும்புகளை நினைத்து நினைத்து காதல் மேலிட
தனக்குள்ளே சிரிப்பதும் ரசிப்பதும்....

பின் சுகமான
அந்த நினைவோடு மீண்டும் குளிப்பதும் ...

இதுதானே இன்பமான தாம்பத்யம்
இருவருக்கும் வரமான பேரின்பம் 

அது அந்த காலம்...!

இப்போது
நினைத்தாலும் இனிக்கும் 
எப்போது நினைத்தாலும்
நெஞ்சம் ரசிக்கும் 

படித்ததில் பிடித்தது 


No comments:

Post a Comment