Wednesday, December 17, 2025

மனோதத்துவ மருத்துவர் ஸ்ரிஷ் ராஜே என்பவர் கூறிய கருத்து

மனோதத்துவ மருத்துவர் ஸ்ரிஷ் ராஜே என்பவர் கூறிய கருத்து

 1.வயது அதிகமாகும் போது ஓர் ஆண் குடும்ப உறவுகளில் இருந்து தனிமை ஆகி போகிறான். அதேசமயம் அந்த ஆணின் மனைவி புதியதாக உருவாகும் குடும்ப உறவுகளை பக்குவமாக கையாள்வதில் தேர்ந்தவளாகிறாள்.

2.ஓர் ஆண் தன் குழந்தைகளின் திருமணங்களை முடித்த பிறகு, அந்த குடும்பம் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்து, அந்த ஆணை சார்ந்திருக்கத் தேவை இல்லையெனில், அவனின் முக்கியத்துவம் மற்றும் மரியாதை ஒரு முடிவுக்கு வர ஆரம்பிக்கிறது.

3.அதாவது, அந்த குடும்பத்தில் உள்ள பிறர் அனைவரும் அவனை ஒரு தேவையற்ற சுமையாகவும், புத்திசுவாதீனம் குறைந்தவனாகவும், சகித்துக்கொள்ள முடியாதவனாகவும் மற்றும் ஸ்திரமற்ற கிழவனாகவும் நினைத்து ஒதுக்கும் சூழல் ஏற்படுகிறது.

4.தனது மனைவி மற்றும் குழந்தைகளின் நன்மையை கருதி முன்பு அவன் எடுத்த சில கண்டிப்பான செயல்களை அவனுக்கு இப்போது நினைவு படுத்தி அவனை விமர்சிக்கவும் ஒதுக்கி வைக்கவும் ஆரம்பிக்கிறார்கள். அவனுக்கு ஏதேனும் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவே முயற்சிக்கிறார்கள்.  ஓருவேளை முன்பு உண்மையாகவே அவன் வாழ்க்கையில் ஏதேனும் தவறு செய்திருந்தால், இப்போது அவனை கடவுள்  காப்பாற்றினால் தான் உண்டு.

5.எனினும், அந்த வயதான மனைவி தனது குழந்தைகள் இடமிருந்தும் மற்றும் மருமகளிடமிருந்தும் சற்று அனுதாபங்களை பெற முடிகிறது. ஏனெனில் அந்த வயதான பெண்ணின் உழைப்பு அவர்கள் குடும்பத்திற்கு மிக தேவைப் படுவதே காரணம்

6.அந்த பெண் மிக சரியான தருணத்தில் சாமார்த்தியமாக தனது கணவனை விட தனது குழந்தைகளிடத்தில் மிக நெருக்கமாகி விடுவாள்.

7.தனது கணவன் வயதாகி பலகீனம் அடைந்ததால், அந்த பெண் தனது மருமகளிடம் கருத்து வேறுபாடில்லாமல் ஒத்துப் போகிறாள். இது தனது மகனிடம் நல்லுறவை பேணவும் மற்றும் மகன் தனது தாயின் நலனில் அக்கரை கொள்ள வைக்கவும் இது மிகவும் உதவுகிறது

8.அந்த மனிதன் தனது இளமை காலத்தில் எவ்வளவு பெரிய சாதனைகளை செய்திருந்தாலும், அதன் முக்கியத்துவம் மற்றும் மகிமை பெரியதாக இருந்தாலும், இப்போது அவனுக்கு அவைகள் சிறிதளவு கூட உதவாது.

 9.எப்படியிருப்பினும் குறைந்தபட்சம், அந்த வயதான பெண்  தனது பழைய வாழ்க்கையை போலவே தொடர்ந்து வாழ முடியும்.

10.குடும்ப சொத்து மற்றும் நில புலன்களை தன் பெயரிலேயே வைத்திருக்கும்  வயதான ஆண்களுக்கு இந்த பிரச்சனைகள் சற்று குறைவாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் சொத்து தகராறு வரக்கூடாது என்பதற்காக அனைத்து குடும்ப சொத்துக்களையும் பிரித்து குழந்தைகள் பெயரில் எழுதி வைத்து விட்டால்மேற்கண்ட அவல வாழ்க்கையை அந்த ஆண் அனுபவித்தே ஆக வேண்டும். எனவேஉரிய காலத்திற்கு முன்பாக, குடும்ப சொத்துக்களை தனது குழந்தைகள் பெயரில் எழுதி வைப்பது சரியல்ல.

11.ஒரு மருத்துவ மனைக்கு சென்று பாருங்கள்அங்கு ஒரு வயதான ஆண் அல்லது பெண் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கலாம். அங்குள்ள உறவினர்களின் கண்களை உற்று நோக்குங்கள். அந்த நோயாளி ஒரு வயதான ஆணாக இருந்தால், அந்த ஆணின் மகளின் கண்களில் மட்டுமே சற்று கண்ணீர் வரும். பிறர் யாருடைய கண்களிலும் ஈரம் இருக்காது.

 12. இதன் நீதி. ஓர் ஆண் தனது வயதான காலத்தில் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்காத மனநிலையில் வாழவேண்டும் என்பதே

ஓர் ஆண் எப்போதமே தான் வாழும் இந்த வாழ்க்கையை தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஒரு மாணவனின் மனோபாவத்துடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். உண்மையில் இவ்வுலகில் யாருமே யாருக்குமே உடமை ஆக முடியாது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். விருப்பு வெறுப்பு அற்ற, பிறரை சாராத மற்றும் சுய கௌரவத்தை இழக்காத ஒரு வாழ்க்கையை வாழுங்கள்.

13.எனது அறிவுறை என்னவென்றால்.  நீங்கள் பிறருக்கு செய்த உதவிக்கு பிரதிபலனை எதிர்பார்த்து வாழாதீர்கள். நீங்கள் செய்த உதவியைப பற்றி யாரிடமும் பேசாமல் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்

14.நமது பழைய வேதம் மற்றும் இதிகாச நூல்களில் கூட வனப்பிரஸ்தத்தை (அறுபது வயதில் கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்கள் குழந்தைகளை விட்டு விலகி காட்டுக்கு சென்று அங்கேயே இறந்து விடுவது) மற்றும் சந்நியாசத்தை பெண்கள் முழுமனதடன் ஏற்றுக் கொண்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

15.இந்த மாறுபட்ட வாழ்க்கை பருவங்கள் அனைத்தும் ஆண்களுக்காக சொல்லப்பட்டது. இதன் முக்கியத்துவத்தை  புரிந்து கொள்ளுங்கள். நமது முன்னோர்களின் தொலைநோக்கு பார்வையை உணர்ந்து பாருங்கள்.

 

No comments:

Post a Comment